அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அதில் பேசியதாவது " அரசுப் பள்ளி ஒன்றில் மகாவிஷ்ணு என்ற ஒருவர் உரை நிகழ்த்தியிருக்கிறார். அவர் எந்தக் கட்சிக்காரர் யார் என்பதெல்லாம் தெரியாது. அப்படி அவர் என்ன தவறாகப் பேசிவிட்டார். அவர் தவறாக எதுவும் பேசவில்லை. நம்முடைய முன்னோர்கள், மறுபிறவி, பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. சாமி இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். நாங்கள் எல்லோரும் சாமியை கும்பிட்டுவிட்டு போகிறோம். ஒருவர் கடவுள் இருக்கு என்று சொல்கிறார். மகாவிஷ்ணு
மற்றொருவர் கடவுள் இல்லை என்று சொல்கிறார். இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆனால் மகாவிஷ்ணுவை கொள்ளை அடித்தவர் போல அன்பில் மகேஸ் பொய்யாமொழி அப்படி பொங்குகிறார். கட்டப்பஞ்சாயத்து மாதிரி பேசுகிறார். இதை ஒரு மிகப்பெரிய பிரச்னையாக்கி இருக்கிறர்கள். இதற்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. ஒரு விஷயத்தை மறைப்பதற்கு இன்னொரு விஷயத்தை இப்படி பரப்பி விட்டார்கள்" என்று பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், " சினிமாத் துறையை ஓட்டுமொத்தமாக ஆக்கிரமித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ரெட் ஜெயன்ட் மூவிஸைக் கேட்காமல் இன்று எந்த ஒரு படத்தையும் வெளியிட முடியாது. விஜய் என்ற ஒருவர் இன்றைக்கு அரசியலுக்கு வருகிறார் என்றால் அதற்குக் காரணமே ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான். ஏன்னென்றால் அவ்வளவு அக்கிரமங்களைச் செய்திருக்கிறார்கள். விஜய் மாநாடு நடத்தும்போது 'மது ஒழிப்பு கொள்கையை கொண்டுவருவேன். தமிழ்நாட்டில் மதுவை ஒழிப்பேன். முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
நான் முதலமைச்சர் ஆகி போடும் முதல் கையெழுத்து அது தொடர்பாகத்தான் இருக்கும்' என்று சொல்லப்போகிறார். அதை உளவுத்துறை மூலமாக தெரிந்துகொண்டதால்தான் விசிக மூலமாக ஸ்டாலின் மதுஒழிப்பு மாநாட்டை நரித்தனமாக செய்துக்கொண்டிருக்கிறார். ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தி.மு.கவிடம் போய் கேட்க முடியுமா? அடுத்த முறை இரண்டு சீட்டுகள்கூட விசிக-விற்கு தர மாட்டார்கள்" என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சர்ச்சைக்குள்ள வகையில் பேசியிருக்கிறார்.
http://dlvr.it/TDQRWc
Thursday, 19 September 2024
Home »
» ``விஜய் அரசியலுக்கு வர ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் காரணம்" - சர்ச்சையக் கிளப்பிய முன்னாள் அமைச்சர்