நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி காளியம்மாள் அ.தி.மு.க-விலோ விஜய் கட்சியிலோ சேருவதற்கு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுகின்றன. காளியம்மாளை சுற்றும் சர்ச்சைகள் குறித்து விசாரித்து அவரிடமே விளக்கம் கேட்டோம்.
நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவதாக வெளியான ஆடியோவில் காளியம்மாளை கட்சியைவிட்டு நீக்க வேண்மென்றும், அவரை அவமதித்து பேசுவதாகவுமாக சீமானின் உரையாடல் இடம்பெற்றிருந்தது. இது போலியாக உருவாக்கப்பட்ட ஆடியோ என நா.த.க-வினர் ஆரம்பத்தில் சமாளித்தாலும் அது உண்மைதான் என ஆகஸ்ட் 4-ம் தேதி நடந்த பொதுக்கூட்ட மேடை ஒன்றில் போட்டுடைத்தார் சீமான். கட்சியே காளியம்மாளை நீக்கும் எண்ணத்தில் இருக்கும்போது `இனியும் நா.த.க-வில் தொடர்வாரா காளியம்மாள்’ என்ற சர்ச்சை கிளம்பியது. சீமான்என்னை நம்பியிருப்பது என் குடும்பம் மட்டுமல்ல... பல ஆயிரம் குடும்பங்கள்! - காளியம்மாள்
இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் ``இந்த விவகாரத்தில் காளியம்மாள் அப்செட்டானது உண்மைதான். இப்படியெல்லாம் பேசியிருக்கிறாரே என்ற வருத்தத்தில் கட்சி நிகழ்ச்சிகளை தவிர்த்தார் அவர். மேலும் சீமான் பங்கேற்கும் நிகழ்வுகளை புறக்கணித்து வந்தார். அந்த சமயத்தில் அ.தி.மு.க-வில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்ற கருத்து நிலவிய நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் கட்சியில் சேரப்போகிறார் என்ற தகவலும் பரவுகிறது” என்றனர்.
நா.த.க மாநிலச் செயலாளர்கள் சிலரோ ``வளரும் அரசியல் கட்சியில் உட்கட்சி முரண் வந்துபோவது இயல்புதான். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பட்ட முறையில் பேசிய ஆடியோவை அரசியலாக்குவது நாகரிகமல்ல. காளியம்மாள் விவகாரத்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் சில நிகழ்ச்சிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை என்றாலும் ஆகஸ்ட் 27-ம் தேதி சீமான் பங்கேற்ற தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் பேசினார் காளியம்மாள். தஞ்சை மண்டல கலந்தாய்வு கூட்டங்களில் ஆகஸ்ட் 26-ம் தேதி பங்கேற்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு நடிகர் விஜய் கட்சியில் அவர் இணைகிறார் என்பது தி.மு.க-வினரின் அவதூறு பிரசாரம்” என்றனர்காளியம்மாள்
சர்ச்சைகளுகெல்லாம் விளக்கம்கேட்க காளியம்மாளை தொடர்புகொண்டோம் ``இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்குப் போனால், பதவியும் பணமும் கிடைக்கும் எனக் கணக்கு போடுகிற சராசரி அரசியல்வாதி அல்ல நான் என விளக்கமளித்திருக்கிறேன். இன விடுதலையை நோக்கமாக கொண்டு நாம் தமிழர் கட்சியிலேயே தொடர்ந்து பயணிக்கிறேன். கட்சி மாறுவதற்குப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்பதில் துளியும் உண்மையில்லை!” என்று மறுப்பு தெரிவித்தார்.யாராக இருந்தாலும் பெண்களை இழித்து பேசுவது தவறு! - கண்டிக்கும் காளியம்மாள்
http://dlvr.it/TCvg2J
Friday, 6 September 2024
Home »
» நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் வெளியேறுகிறாரா..? சர்ச்சையும் விளக்கமும்!