பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர், ஆம்ஸ்ட்ராங். அவரை கடந்த ஜூலையில் ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. அதுதொடர்பாக பலரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இந்த சூழலில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்' என தமிழக பகுஜன் சமாஜ் போர்க்கொடி தூக்கியிருக்கிறது. செல்வப்பெருந்தகை
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் எழுதியிருக்கும் கடிதத்தில், "செல்வப்பெருந்தகை 2008 முதல் 2010 வரை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். மேலும் அவர் புரட்சி பாரதம், புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளிலும் இருந்திருக்கிறார். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் இவர்மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், இவர் வட தமிழகத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ் உள்ளிட்டவற்றில் ரெளடி கும்பல்களை பயன்படுத்தியிருக்கிறார்.
ரெளடி கும்பல் தலைவர் நாகேந்திரன் ஆயுள் தண்டனையில் வேலூர் சிறையில் இருக்கிறார். அவரின் மகன் அஸ்வத்தாமன் தான் தமிழக இளைஞர் காங்கிரஸின் முதன்மைச் செயலாளர். இவர், நாகேந்திரனுக்கும், செல்வப்பெருந்தகைக்கும் நிறைய வேலைசெய்திருக்கிறார். அஸ்வந்த்தாமனுக்கு பதவி கொடுத்தது செல்வப்பெருந்தகைதான். மேலும் இவர் கொலை மிரட்டல் விடுவது, தொழிலதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது என பல செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். அதில் வரும் பணத்தை செல்வப்பெருந்தகையுடன் ஷேர் செய்திருக்கிறார். இதுபோன்ற கும்பலின் உதவியுடன் செல்வப்பெருந்தகை இந்தக் கொலை சம்பவத்துக்குத் திட்டம் தீட்டியிருக்கிறார்.ஆம்ஸ்ட்ராங்
தற்போது தமிழக மக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பலரின் கேள்வி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகை ஏன் இன்னும் கைதுசெய்யப்படவில்லை?. ஏனெனில், ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என்பதால் காவல்துறை தயக்கம் காட்டுகிறது. எனவே, செல்வப்பெருந்தகையை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீக்கினால்தான் தமிழக மக்கள் மத்தியில் காங்கிரஸின் மதிப்பு நீடிக்கும்" என தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் கடிதம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் செல்வபெருந்தகை கருத்து சொல்வதை தவிர்த்து இருந்தாலும், அரசியல் ரீதியாக இந்த குற்றச்சாட்டு தற்போது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில நிர்வாகி நேரடியாக ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே வுக்கும் கடிதம் அனுப்பி உள்ளதால், அங்கு செல்வப்பெருந்தகை பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசியல் ரீதியாக செல்வப் பெருந்தகைக்கு இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.மைத்ரேயன் வழியில் நயினார்? - இன்னொரு கட்சித் தாவல் சர்ச்சை!
http://dlvr.it/TDT7R1
Friday, 20 September 2024
Home »
» ஆம்ஸ்ட்ராங் கொலை: செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு? - பகுஜன் சமாஜ் போர்க்கொடியால் நெருக்கடி?