தமிழகத்தில் மதுவிலக்கு கோரிக்கைகள் எழுந்துகொண்டிருக்கும் இதேவேளையில், அண்டை மாநிலமான ஆந்திராவில் எந்த பிராண்டாக இருந்தாலும் மலிவு விலையில் மதுபானம் விநியோகம் செய்ய மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான புதிய மதுபான கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.மது`மது ஒழிப்பு மாநாடு யார் நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம்; ஆனால் திருமாவளவன் எங்களை...' - அன்புமணி
அதில், எந்த பிராண்டாக இருந்தாலும் 180 மி.லி மதுவை 99 ரூபாய்க்கு விநியோகம் செய்ய முன்மொழியப்பட்டிருக்கிறது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் புதிய மதுபான கொள்கை குறித்து அமைச்சர் கே.பார்த்தசாரதி கூறியதன் அடிப்படையில், மதுபான கடைகளுக்கான டெண்டர் லாட்டரி முறையில் தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், மதுபான கடைகளுக்கான உரிமை கோருபவர்களிடம் திருப்பிச் செலுத்தப்படாத விண்ணப்பக் கட்டணமாக 2 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் என்றும், உரிமக் கட்டணமாக 50 லட்சம் ரூபாய் முதல் 85 லட்சம் ரூபாய் வரை நான்கு அடுக்குகளாக வசூலிக்கப்படும் என்றும், புதிய மதுபான கொள்கை தெரிவிக்கிறது. மேலும், இந்தக் கடைகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேபோல், 12 பிரீமியம் கடைகளுக்கு 5 ஆண்டு கால அவகாசத்துடன் அரசு உரிமம் வழங்கப்படும் என்றும், இந்த பிரீமியம் கடைகளுக்கான திருப்பிச் செலுத்தப்படாத விண்ணப்பக் கட்டணம் 15 லட்ச ரூபாயாகவும், உரிமக் கட்டணம் ஒரு கோடி ரூபாயாகவும் இருக்கும் என்றும் அமைச்சர் பார்த்தசாரதி தெரிவித்திருக்கிறார்.சந்திரபாபு நாயுடு - ஆந்திரா அரசுமதுவிலக்கு எனும் மாயநாடகம்;
கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின்; எல்லோரும் நடிகர்களே
அதேசமயம், திருப்பதியில் பிரீமியம் கடைகள் அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறியிருக்கிறார். இதுபோக, மாநிலத்திலுள்ள மொத்த மதுபானக் கடைகளில் குறைந்தது 10 சதவிகித கடைகள் கள் இறக்குவோர் ஒதுக்கப்படும் என்றும், அக்டோபர் 1 முதல் இந்த புதிய மதுபான கொள்கை நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நேற்று நடந்த இதே அமைச்சரவைக் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சட்டமன்ற அமைப்புகளில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/TDQp1N
Thursday, 19 September 2024
Home »
» Liquor Policy: ``மலிவு விலையில் மது, எந்த பிராண்டாக இருந்தாலும் ரூ.99 தான்" ஆந்திர அமைச்சரவை முடிவு!