வாகனங்களுக்கான வி.ஐ.பி நம்பர்களுக்கு எப்போதும் பொதுமக்களிடம் அதிக வரவேற்பு இருக்கும். வி.ஐ.பி நம்பர்களுக்கு அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கின்றனர். அதனைப் பயன்படுத்தி அரசும் வி.ஐ.பி நம்பர்களுக்குக் கணிசமான பணத்தை வசூலித்து விடுகிறது.
மகாராஷ்டிரா அரசும் வி.ஐ.பி வாகன நம்பர்களுக்கான கட்டணத்தைப் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. இது குறித்து மும்பை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
1வது நம்பருக்கான பதிவு எண் கட்டணத்தின் விலை 18 லட்சமாக அதிகரித்துள்ளது. முந்தைய கட்டணத்தை விட இப்போது மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆடம்பர காரின் விலையே 18 லட்சத்திற்கும் குறைவாகக் கிடைக்கிறது. ஆனால் மும்பையில் வாகனப் பதிவு எண் கட்டணம் 18 லட்சத்திற்குக் கொடுக்கப்படுகிறது.வாகனப் பதிவு எண்
இதே போன்று இரு சக்கர வாகனங்களுக்கு 1வது நம்பர் பதிவு எண் கட்டணம் 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 0009, 0099, 0999, 9999 போன்ற கார்களுக்கான பதிவு எண்கள் விலை 1.5 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு 20 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர 49 வகையான பதிவு எண்களின் விலை 50 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வி.ஐ.பி நம்பர்கள் ஆர்.டி.ஒ அலுவலக இணையத்தளத்தில் இருக்கும். அதற்கு இணையத்தில் பணம் செலுத்தி நம்பர் பெற்றுக்கொள்ள முடியும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நம்பர்கள் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்கள் மத்தியில் இது போன்ற வி.ஐ.பி நம்பர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. பஞ்சாப்பில் வி.ஐ.பி நம்பர்களைப் பணக்கார விவசாயிகள் ஏலத்தில் எடுக்கின்றனர். அதுவும் ஏ.கே.47 நம்பருக்கு பஞ்சாப்பில் அதிக வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/TClV5y
Tuesday, 3 September 2024
Home »
» Mumbai: 1வது நம்பர் வாகனப் பதிவு எண்ணிற்கு ரூ.18 லட்சம்; வி.ஐ.பி பதிவு எண் கட்டணம் மும்மடங்கு உயர்வு