`காத்திருங்கள்'
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23-ம் தேதி நடத்திக் கொள்ள நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி கொடுத்தபோதிலும், கட்சி பதிவு ஏற்கப்பட்டது தொடர்பான அறிக்கையில் மாநாடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் `காத்திருங்கள்` என்றிருக்கிறார் விஜய். அதனால் திட்டமிட்ட தேதியிலேயே முதல் நடக்குமா.. அல்லது மாநாடு தள்ளிப் போகுமா.. என்ற பேச்சு கட்சிக்குள் கிளம்பியிருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.விஜய் அறிக்கை
செப்டம்பர் 23-ம் தேதி விக்கிரவாண்டி அருகே மாநாடு நடத்த விழுப்புரம் காவல்துறையிடம் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அனுமதி பெற விண்ணப்பித்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த். தொடர்ந்து மாநாடு குறித்த 21 கேள்விகளை எழுப்பினார் விழுப்புரம் எஸ்.பி. அதற்கு த.வெ.க தரப்பில் பதிலளித்தவுடன் 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ``காவல்துறையின் நிபந்தனைகள் விஜய் தரப்புக்கு சற்று அதிர்ச்சி கொடுத்திருப்பதோடு, இத்தனை நெருக்கடியா எனச் சமூக வலைதளங்களில் கொதிக்கிறார்கள் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
ஆனால், ``போலீஸார் கொடுத்த நிபந்தனைகளால் விஜய் மாநாட்டுக்கு எந்த நெருக்கடியும் வராது” எனப் பேச ஆரம்பித்த மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ``ஏ.ஆர் ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சி சர்ச்சையானது. அண்மையில்கூட உத்திர பிரதேசத்தில் சாமியாரின் நிகழ்வு ஒன்றில் பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எனவே இதுபோன்ற பெருங்கூட்டத்தை மிக கவனமாகவே கையாளுகிறது காவல்துறை. 50 ஆயிரம் பேருக்கு மேல் வந்தால் காவல்துறை தடுக்கப் போவதுமில்லை, 1.30 மணிக்கு பிறகு வருவோரையும் அனுமதிக்கத்தான் போகிறார்கள். கொடி, அலங்கார வளைவுகள் விருப்பபடி வைத்தாலும் போலீஸ் அகற்றவும் செய்யாது. கெடு வாய்ப்பாக விபத்து ஏற்பட்டால் அதற்கு காவல்துறையே பொறுப்பு என வந்துவிடும் என்பதால் முன்பே அறிவுறுத்துகிறார்கள் அவ்வளவுதான்” என்கிறார். விஜய் - புஸ்ஸி ஆனந்த்
`மாநாடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராதது ஏன்?` என்ற கேள்வியுடன் த.வெ.க-வின் முக்கியப்புள்ளிகளுடன் பேசினோம் ``த.வெ.க-வின் தேர்தல் ஆணைய பதிவு ஏற்கப்பட்ட தகவல் மூன்று நாள்களுக்கு முன்பே கிடைத்துவிட்டபோதிலும் மாநாட்டு தேதியையும் ஒன்றாக அறிவிக்கவே திட்டமிட்டோம்.
ஆனால் மாநாட்டுக்கு 10 நாள்களே இருக்கும் சூழலில் கட்சியின் கொள்கை விளக்க குறிப்பு, மாநாட்டு கூட்டத்தை ஒருங்கிணைக்கும் பணிகள், திடலை தயார் செய்து பந்தல் அமைக்கும் பணிகள் ஆகியவை ஆரம்பகட்டத்திலேயே உள்ளதால் திட்டமிட்ட செப்டம்பர் 23-ம் தேதியே நடத்த முடியுமா.. அல்லது தள்ளிப்போட்டுவிடலாமா.. என தலைமை கழகத்தினர் விவாதித்து வருகிறார்கள்” என்றனர். விஜய்
தொடர்ந்து பேசியவர்கள் ``செப்டம்பரிலேயே மாநாடு நடத்தி முடித்துவிட்டால் அதனால் வரும் `பொலிட்டிக்கல் மைலேஜ்` என்னவென்றும் அலசப்படுகிறது. உதாரணமாக, செப்டம்பர் 23-ல் மாநாடு நடந்தால், அதன்பிறகு தலைவர் விஜய் ஷூட்டிங் செல்வதால் கட்சியின் எந்த முக்கிய பணிகள் நடக்காமால் போனால் மாநாடுக்கான சுவடே இல்லாமல் போகும். எனவே இதுவே ஜனவரியில் மாநாட்டை நடத்தி கட்சி ஆக்டிவ்வாக மாற்றி ஏப்ரலில் இன்னொரு மாநாடு நடத்தினால் கட்சிக்கு நல்ல ஓப்பனிங் இருக்குமென விஜய்க்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆனால் தலைவர் விஜய் திட்டமிட்ட தேதியில் மாநாடு நடத்த விரும்பினாலும் கட்சியின் இதர சூழல் அவருக்கு சாதமாக அமையுமா என்பது ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும்” என்றனர்.
செப்டம்பர் 23-ம் தேதி மாநாடு நடத்த த.வெ.க அனுமதி பெற்றுவிட்ட போதிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. என்ன நடக்கப் போகிறதென பொறுத்திருந்து பார்ப்போம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYTVK - NTK: விஜய்யுடன் கூட்டணி; சீமான் முயற்சி வீணானதா?! பின்னணி என்ன?
http://dlvr.it/TD3bgl
Tuesday, 10 September 2024
Home »
» Vijay: தாமதமாகும் அறிவிப்பு... திட்டமிட்ட தேதியில் நடக்குமா த.வெ.க-வின் முதல் மாநாடு?!