முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன், காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொள்ள ஏமாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கடவுள் வினேஷ் போகத்தை தண்டித்ததால்தான் அவரால் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்ல முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
பிரிஜ் பூஷனுக்கு எதிராக கடந்த ஆண்டு டெல்லி சாலைகளில் போராடினார் வினேஷ் போகத். இதனால் பிரிஜ் பூஷனுக்குச் சிக்கல் ஏற்பட்டது.வினேஷ் போகத்
ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட வினேஷ் போகத் தங்க பதக்கத்துக்கான இறுதிப்போட்டிக்கு முன் உடல் எடை அதிகரிப்பால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
எனினும் அவர் வெள்ளி வென்றதற்கான மரியாதையை வழங்கியது ஹரியானா அரசு. மக்களும் அவரை தங்கள் மகளாக கொண்டாடித் தீர்த்தனர்.
சில நாள்களுக்கு முன்பு ஹரியானா எல்லையில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் வினேஷ் போகத். அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் காங்கிரஸில் இணைந்தார். சில மணிநேரங்களிலேயே காங்கிரஸ் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.வினேஷ் போகத் - கார்கே - பஜ்ரங் புனியா - கே.சி.வேணுகோபால்
இந்த நிலையில், வினேஷ் போகத் குறித்து பிரிஜ் பூஷன், "ஒரு வீரர் ஒரே நாளில் இரண்டு எடை பிரிவுகளில் சோதனைகளை வழங்க முடியுமா என்று நான் வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன்? எடைபோட்ட பிறகு ஐந்து மணி நேரம் சோதனைகளை நிறுத்த முடியுமா? நீங்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறவில்லை; ஏமாற்றி அங்கு சென்றீர்கள். அதற்காக கடவுள் உங்களை தண்டித்துள்ளார்" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
வினேஷ் போகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் சோதனைப் போட்டிகள் இல்லாமல் ஆசியப் போட்டிகளில் விளையாடியதாக பிரிஜ் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங்
மேலும், நாட்டின் மகள்களை அவமானப்படுத்திய குற்ற உணர்வு தனக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். "நாட்டின் மகள்களை அவமானப்படுத்தியதாக வருத்தப்பட வேண்டியது வினேஷும், புனியாவும்தான். அவர்களுக்கு திரைக்கதை எழுதிக்கொடுத்த பூபேந்தர் ஹூடாவும்." என்றார் பிரிஜ் பூஷன்.
மேலும் அவர் ஹரியானா தேர்தலில் தன்னை பிரசாரம் செய்ய பா.ஜ.க அழைத்தால் பிரசாரம் செய்யத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.Vinesh Phogat: வினேஷ் போகத் மல்யுத்த வீராங்கனை டு காங்கிரஸ் வேட்பாளர்!
http://dlvr.it/TCxlLW
Saturday, 7 September 2024
Home »
» Vinesh Phogat: `வினேஷ் ஏமாற்றினார்... கடவுள் தண்டித்தார்' - பிரிஜ் பூஷன் குற்றச்சாட்டு!