சென்னை: தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை நடத்துவதாக கூறும், முதல்வர் பழனிச்சாமி, அவர் மரணத்தில் உள்ள மர்மங்களை விலக்க, விசாரணைக் கமிஷனுக்கு உத்தரவிடலாமே. அதை செய்வதை விடுத்து, அதற்காக உண்ணாவிரதம் நடத்தும் எங்களுக்கு இடைஞ்சல் கொடுக்க முயலுவது ஏன்? விசாரணை கமிஷன் அமையும்போது, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் கட்டாயம் விசாரணை நடத்த வேண்டும் என, முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார்.
அவர் அளித்த பேட்டி:
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களையும்; சந்தேகங்களையும் பட்டியல் போட்டு, கட்சியின் மூத்த தலைவர் பி.எச்.பாண்டியனும், அவரது மகன் மனோஜ் பாண்டியனும் சொல்லி விட்டனர். அதற்கு பதில் அளித்திருக்கும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சந்தேகங்களை போக்குவதற்காக, அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், எந்த இடத்திலாவது உருப்படியான தகவல்களை சொல்லி இருக்கிறாரா?
இத்தனை அமைச்சர்களும், முதல்வரும் இருக்கும்போது, அவர்களில் யாரவது ஒருவர், இந்த சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களையும் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டிருக்கலாமே. இருந்தால்தானே, அவர்களால் வெளியிட முடியும்?
தமிழகம் முழுவதும் போராட்டங்கள்:
ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டிருக்கும் மர்மங்களை விலக்க, உரிய நீதி விசாரணை வேண்டும் என்று கேட்டு, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடத்துகிறோம். தமிழகம் முழுவதும், போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
நீதி விசாரணை வந்தால், முதல்வராக இருந்த பன்னீர்செல்வமும் விசாரணை வளையத்துக்குள் வர வேண்டும் என்று, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் சொல்லியிருக்கிறார். அதையெல்லாம் எதிர்கொள்ள தெம்பில்லாமல்தான், இத்தனை ஆண்டுகாலம் அரசியல் செய்து வருகிறோமா?
விஜய பாஸ்கர்தான், சுகாதாரத் துறை அமைச்சர் என்ற ரீதியில், ஜெயலலிதாவின் உடல் நிலை முன்னேற்றம் குறித்து, நாட்டு மக்களுக்கு தெரிவிக்காமல், அப்பல்லோ மருத்துவமனையில் அமர்ந்து, டீ. காபி, வடை சாப்பிட்ட விஜய பாஸ்கர், இந்த பிரச்னையில், முதல்வராக இருந்தவருக்கு பிரச்னை என்றால், அது பற்றி, வெளியே எந்தத் தகவலும் சொல்லாமல், கடைசி வரை பம்மி இருந்தவர் ஏன்? அதனால், ஜெயலலிதா சந்தேகத்துக்குரிய மரணம் பற்றி, விஜய பாஸ்கருக்கு எல்லாமே தெரியும். அவர், எப்படி இருந்தாலும், விசாரணைக் கமிஷன் முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயமான நாள், விரைவிலேயே வரும்.
நியாயத்தின் நடக்க வேண்டிய விஜயபாஸ்கர், அதர்மத்தின் படி நடக்கக் கூடாது. அவரைப் பிடித்து விசாரித்தால், எல்லா சம்பவங்களும் வெளியே வந்துவிடும்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
English Summary:
Chennai: Tamil Nadu Jayalalithaa claims to be fighting, Chief Palanisamy, in the mysteries of his death and dismiss the order commission. It follows, that the hunger strike to try to give trouble to us why? To the Commission, the Health Minister vijayabaskar compelled to conduct an investigation, the former local ministerK.P.Munisamy asked.