புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் இடையிலான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், ஒன்பதாவது முறையாக, இன்று, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், டில்லியில் நடைபெறுகிறது.
நிறைவேற்றம்:
நாடு முழுவதும், சரக்கு மற்றும் சேவைகளுக்கு, ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் நோக்கில், ஜி.எஸ்.டி., மசோதா, பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஜி.எஸ்.டி.,யை, இந்தாண்டு ஏப்ரலில் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அதிகார வரம்பு தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
எட்டு முறை:
பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், எட்டு முறை நடந்துள்ளது. இதில், பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது; இருப்பினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இன்று கூட்டம்:
இந்நிலையில் ஒன்பதாவது முறையாக, இந்த கூட்டம், டில்லியில், இன்று நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். வரி செலுத்துவோர் மீதான அதிகார வரம்பு பிரச்னை மட்டுமின்றி, வரி விதிப்பு குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
நீடிக்கும் சிக்கல்:
* ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவது தொடர்பாக மத்திய அரசு உறுதியளிக்கவில்லை
* மத்திய, மாநில அரசுகள் இடையே, சில பிரிவு களில், வரி பகிர்வு தொடர்பாக முடிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது
* வரி செலுத்துபவர்களின் கணக்குகளை, மாநில அரசுகளும் தணிக்கை செய்வதை, மத்திய அரசு ஏற்கவில்லை
* மாநில அரசுகள், வேறு சில வரிகள் வசூலிப்பதற்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
English summary:
NEW DELHI: The GST, which, in the case of goods and service tax, the federal and state governments in order to solve the problems, for the ninth time, today, GST, Council meeting, held in New Delhi.