புதுடில்லி : நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு பறிமுதல் செய்துள்ளது.
நிழலுலக தாதா:
மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 257 பேர் கொல்லப்பட்டனர்; 1,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், சவுதி அரேபியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்தான். கராச்சி நகரில் ரகசியமாக வசித்து வருவதாக இந்தியா கூறும் குற்றச்சாட்டை, பாக்., அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மும்பை குண்டு வெடிப்பு உட்பட, பல்வேறு வழக்குகளிலும், இவன் தேடப்பட்டு வருகிறான்.
பறிமுதல்:
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சிலுள்ள தாவூத்துக்கு சொந்தமான 15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை யு.ஏ.இ., அரசு பறிமுதல் செய்துள்ளது. தாவூத்துக்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. முன்னதாக தாவூத் இப்ராஹிமின் சொத்துக்களை முடக்க பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள், துருக்கி, சைப்ரஸ் மற்றும் மொரோக்கோ ஆகிய 6 நாடுகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மோடியின் தந்திரம்:
இதுகுறித்து பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தனது யு.ஏ.இ., பயணத்தின் போது, தாவூத்தின் சொத்து பட்டியலை அந்நாட்டு அரசிடம் ஒப்படைத்ததாகவும், அதனடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English Summary:
15 thousand crore worth assets of underworld don Dawood Ibrahim, the United Arab Emirates has seized.