புதுடில்லி: வறட்சி நிவாரணம் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் 14 நாட்களாக தொடர் பேராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாளை மறுநாள் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளனர்.
Tuesday, 28 March 2017
Friday, 3 March 2017
ஆ! 3வது ஆண்டாக வறட்சியா?
புதுடில்லி: ‛ எல் நினோ பாதிப்பால், மூன்றாவது ஆண்டாக இந்தியாவில் பருவமழை பொழிவு குறைய வாய்ப்பு உள்ளது' என, ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு வாரியம் தெரிவித்துள்ளது.பசிபிக் பெருங்கடலில், வெப்பமான சூழ்நிலை நிலவுவதை எல் நினோ என கூறுவர். குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதை லா நினா என அழைப்பர். இந்த இரண்டு அம்சங்களும், இந்திய பருவமழை காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை. எல் நினோ காலத்தில், இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பொழிவு குறையும்; வடகிழக்கு பருவமழை பொழிவு அதிகமாக இருக்கும்.
கணிப்பு சொல்வது என்ன:
இந்தியாவில், 2014 - 15, 2015 16ம் ஆண்டுகளில் எல் நினோ சூழ்நிலையால், தென் மேற்கு பருவ மழை பொழிவு குறைந்து வேளாண் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மீண்டும், நடப்பு ஆண்டில் அதே போன்ற சூழ்நிலை ஏற்படும் என்றே ஆஸ்திரேலி வானிலை ஆய்வு வாரியம் கணித்துள்ளது.
எனினும், செப்டம்பர் மாதம் முதல் தான், இந்த சூழ்நிலை துவங்கும் என ஆஸி., வானிலை ஆய்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதற்குள் தென் மேற்கு பருவமழை காலம் முடிந்து விடும் என வானிலை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வட கிழக்கு பருவமழை பொழிவு அதிகரிக்கும் என்றே அவர்கள் கருதுகின்றனர்.
இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்படி, 2016 ஜூலை முதல், லா நினா எனப்படும் குளிர்நிலை தான் பசிபிக் பெருங்கடல் பகுதியில் காணப்படுகிறது. எனினும், அது பலவீனமான நிலையில் உள்ளது. நடப்பு ஆண்டு செப்டம்பருக்கு பிறகே இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என்றே இந்திய வானிலை ஆய்வு மையம் கருதுகிறது.
English Summary:
NEW DELHI: The 'El Niño damage, is likely to decline for the third year in India, monsoon showers, as, according to the Australian Meteorological Board. In the Pacific Ocean, El Niño suggest that warmer atmosphere prevails. La Nina is already called a cold environment. These two factors, the major defects of the Indian monsoon season. During El Niño, the southwest monsoon showers cool to India; Northeast monsoon showers will be higher.

Wednesday, 1 March 2017
விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வறட்சி நிவாரண நிதி செலுத்தப்படும் : தமிழக அரசு அறிவிப்பு
மார்ச் - வறட்சி நிவாரண நிதி இன்னும் ஓரிரு நாட்களில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி பருவநிலை 2016 என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர்மேலாண்மை ஆணையர் சத்யகோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டில் தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக 32 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக தமிழக அரசு சார்பில் 2,247 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். விவசாயிகளின் வங்கிக்கணக்குகளை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்த பணியானது நாளை மாலைக்குள் நிறைவடையும், அதன்பின்பு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நேரடையாக நிவாரண நிதி செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Wednesday, 1 February 2017
விவசாய கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு
புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்து கூறுகையில்,
நடப்பு நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 4.1 சதவீதமாக இருக்கும். 2017- 18 நிதியாண்டில் விவசாய கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுமார் ரூ. 9 லட்சம் கோடி வழங்கப்பட்டது. பயீர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். கட்நத ஆண்டு ரூ.5.500 கோடி ஒதுக்கப்பட்டது. தேசிய வேளாண் சந்தையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் சந்தைகளின் எண்ணிக்கை 559 ஆக உயர்த்தப்படும் என்றார்
English Summary:
New Delhi: Union Finance Minister Jaitley said the budget has filed,
Agricultural growth will be 4.1 per cent in the current fiscal year. Agricultural loans in the fiscal year 2017- 18 to Rs 10 lakh crore target. Last year, approximately Rs. 9 lakh crore was given. Payir Rs 13 thousand crore insurance scheme. .5.500 Crore of last year's Rs. Under the National Agricultural Market will be increased to 559 the number of integrated markets

Thursday, 12 January 2017
கென்யாவின் விவசாயத் துறை வளர்ச்சிக்கு இந்தியா ரூ.683 கோடி கடனுதவி
புதுடில்லி : கென்யாவின் விவசாயதுறை வளர்ச்சிக்காக சுமார் ரூ.683 கோடியை(100 மில்லியன் டாலர்) இந்தியா கடனுதவியாக அளிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா, பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் நேற்று(ஜன.,11) சந்தித்துப் பேசினார். பேச்சுவார்த்தைக்குப் பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மோடி பேசியதாவது: இந்தியா - கென்யா இடையே, இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதம் நடந்தது., இரு நாடுகளிலும் தொழில் - வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. எந்தெந்த திட்டங்களில் வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவது என்பது குறித்து இரு நாடுகளின் கூட்டு வர்த்தகக் கவுன்சில் குழு இன்று சந்தித்து விவாதிக்கும்.
ரூ.683 கோடி கடன்:
கென்யாவின் விவசாயத் துறை வளர்ச்சிக்காக, 100 மில்லியன் டாலர்(சுமார் ரூ.683 கோடி) கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தானது. கென்யாவின் விவசாயத் துறையில் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை, இரு நாடுகளுக்கிடையேயான தொடர்பில் புதிய வடிவத்தைக் கொடுக்கும். கென்யாவில் உற்பத்தியாகும் பருப்பு வகைகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
நன்றி:
மேலும் இருதரப்பிலும் சுகாதாரத்துறை, எரிசக்தி துறை மற்றும் கல்வி துறையை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தியாவின் உதவிக்கு கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா நன்றி தெரிவித்தார்.
English summary:
NEW DELHI: Around Rs .683 crore for the development of Agriculture in Kenya (100 million dollars) in loans to India is. The agreement was signed yesterday.

Friday, 6 January 2017
விலை போகாத விதைக் காய்: வீணாகும் சின்ன வெங்காயம்
நாமக்கல் மாவட்டத்தில், கிலோ ரூ. 2-க்குக் கூட வாங்கிக் கொள்ள யாரும் முன்வராமல் ஏறத்தாழ 1 லட்சம் மூட்டை சின்ன வெங்காயம் பட்டறையிலேயே வீணாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், எருமபட்டி வட்டாரத்தில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஜூன் மாதம் நடவு செய்யப்படும் வெங்காயத்தில் கிடைக்கும் மகசூலில் சமையலுக்கு பெரிய காய்களை விற்பனை செய்து வருகின்றனர். சிறிய காய்களை விதைக்கு விற்பனை செய்ய நிலத்திலேயே பட்டறை போட்டு பாதுகாத்து வைத்திருந்து, டிசம்பர் மாத நடவுக்கு விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டை வரை மகசூல் கிடைக்கும். இதில் 20 மூட்டை பெரிய காய் இருக்கும். அறுவடையின்போதே இந்தக் காய்கள் விற்பனை செய்யப்பட்டு விடும். இதன் மூலம் சாகுபடி செலவில் பாதி பணம் விவசாயிகளுக்கு கிடைத்து விடுகிறது. மீதி உள்ள 30 மூட்டை காய்களை 3 மாதம் பாதுகாத்து வைத்திருந்து விதைக்கு விற்பனை செய்யும்போது, கிலோ ரூ.20 வரைக்கும் விற்பனையாகும். இதன் மூலம் விவசாயிகளுக்கு சாகுபடி செலவு போக ஏக்கருக்கு ரூ.10,000 வரை லாபம் கிடைக்கும்.
ஆனால், நிகழாண்டில் விதை வெங்காயம் கொள்முதல் செய்ய வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. இதனால், எருமபட்டி பகுதியில் ஏறத்தாழ 1 லட்சம் மூட்டை அளவுக்கு விதை வெங்காயம் பட்டறையிலேயே வீணாகிவிடும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் பவித்திரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி டி.நல்லையன் கூறியது:
நூறு நாள் பயிரான சின்ன வெங்காயம் நடவு, நாற்று நடவு என 2 முறைகளில் பயிரிடப்பட்டு வருகிறது. எருமபட்டி வட்டாரத்தில் 25,000 ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.
இப்பகுதியில் விளையும் சின்ன வெங்காயம் சென்னை, திருச்சி, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை, சமையலுக்குப் பயன்படும் சின்ன வெங்காயம் (பெரிய காய்) கிலோ ரூ. 35 வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர், அதன் விலை படிப்படியாகக் குறைந்து, தற்போது கிலோ ரூ.10 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
அதே சமயத்தில், கடந்த செப்டம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு, விதைக் காய்களுக்காக பட்டறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை இப்போது கிலோ ரூ.2-க்கு வாங்கிக் கொள்ள கூட வியாபாரிகள் முன்வரவில்லை.
நவம்பர் மாதத்தில் மழை பெய்தால், டிசம்பர் மாதத்தில் நடவு தொடங்கும். அப்போது கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விலை கிடைக்கும். ஆனால், இப்போது இந்த வெங்காயம் முழுமையாக வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சமையல் தேவைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் முன்வந்தாலும், கிலோ ரூ.2-க்குக் கூட வாங்கிக் கொள்ள வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. இதனால் எருமபட்டி வட்டாரத்தில் சுமார் 1 லட்சம் மூட்டை அளவுக்கு சின்ன வெங்காயம் வீணாகி வருகிறது.
இப்போது வெளிச்சந்தையில் சின்ன வெங்காயம் (பெரிய காய்) கிலோ ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை நேரடியாக விவசாயிகளிடம் விதைக் காய்களை ரூ.10-க்கு குறையாமல் கொள்முதல் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு மகசூல் செலவு தொகையாவது கிடைக்கும். இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றார்
English summary:
Namakkal district, per kg. Nobody even to the offering of approximately $ 1 million to buy 2 small onions bundle were wasted.

வறட்சி; காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் மழையின்மையால் விவசாயம் பாதித்த பகுதிகளை கலெக்டர், அரசின் முதன்மை செயலாளர். அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை. எனவே வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் மத்திய அரசிடம் நிதி பெற வேண்டும் எனவும் விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது. தஞ்சை, நாகையை தொடர்ந்து தென்மாவட்டங்க
ளிலும் விவசாய பாதிப்பு இறப்புகள் துவங்கியுள்ளன.
9ம் தேதி அரசுக்கு அறிக்கை:
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று வறட்சி பாதிப்பு குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.கலெக்டர் கருணாகரன், நெல்லை மாவட்டத்திற்கான கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலர் ராஜேந்திரகுமார், ஆதிதிராவிடதுறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் இன்று காலை ஆய்வு துவங்கினர். நெல்லை மானூரை அடுத்துள்ள கானார்பட்டி, வன்னிக்கோனேந்தல், ஆயாள்பட்டி, சங்கரன்கோவில் என பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை பார்வையிட்டனர். மழையின்றி கருகிகிடக்கும் நெல்வயங்கள், பயிர் பயிரிடப்பட்ட நிலங்களை பார்வையிட்டனர். நெல்லை மாவட்டத்தில் 80 சதவீத விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வரும் 9ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம் என குழுவினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், தமிழகம் முழுவதும் வறட்சி குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
English Summary:
Tirunelveli, Tirunelveli District Collector in the drought affected areas of agriculture, the state's chief secretary.

Wednesday, 4 January 2017
விவசாயிகளின் போராட்டம் வாபஸ்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு
சென்னை, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜன.5-ம் தேதி நடைபெற இருந்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். பின்னர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனவரி 5-ந்தேதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தோம்.இப்போது முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியபோது எங்கள் கோரிக்கை பரிசிலிப்பதாக கூறி உள்ளார். விவசாயிகள் பிரச்சனை குறித்து 5-ந்தேதி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதனால் 5-ந்தேதி நடைபெற இருந்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Chennai, Tamil Nadu State should be declared as drought stress that the impending picket on jan 5 P.R pandiyan said that the withdrawal is obtained.

Monday, 2 January 2017
வறட்சி: நாகையில் விவசாயிகள் பலி 33 ஆனது
தஞ்சாவூர் : பருவ மழை பொய்த்ததாலும், காவிரி மற்றும் மேட்டூரில் தண்ணீர் இல்லாததாலும் கடும் வறட்சி சோகத்தில் இறக்கும் விவசாயிகள் மரணம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. பருவமழை பொய்த்ததால் மழையை நம்பி நாற்று நட்ட விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
மனம் நொந்த விவசாயிகள்:
போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகி வருகிறது. மேலும் நிலத்தடி நீரும் வற்றிப்போனது. பலரும் தங்களின் ஆழ்குழாய் கிணறு ஆழப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் தண்ணீர் கிடைத்தபாடில்லை. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் கடன் வாங்கியவர்கள் நிலத்தை குத்தகைக்கு பெற்றவர்கள் பெரும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மனம் நொந்த விவசாயிகள் மாரடைப்பாலும், விஷம் குடித்து இறந்து வருகின்றனர். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் மாவட்ட விவசாயிகள் பரவலாக இறந்துள்ளனர். இன்றும் நாகை வெண்மணி மேலவாய்க்குடி கிராமத்தில் தம்புசாமி என்பவர் இறந்துள்ளார். நாகையில் மட்டும் இதுவரை 33 பேர் இறந்துள்ளனர்.
விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary:
Thanjavur: monsoon, drought and lack of water in the Cauvery Mettur in grief and death and dying farmers is growing day by day. If you rely on scanty monsoon rains planting farmers are struggling, unable to continue farming.

Friday, 30 December 2016
வறட்சி., வறட்சி., எலிக்கறி தின்ற விவசாயிகள்
திருச்சி: போதிய மழை பெய்யாததால் வறட்சியால் தமிழகத்திற்கு போறாத காலம் துவங்கி விட்டது என்று நேற்றைய தினமலர் இணையதளத்தில் முதல் பக்க செய்தி வெளியானது. தினமலர் சொன்னது போல் இன்று 30 ம் தேதி திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் எலிக்கறி தின்ற நூதன போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் காவிரி மற்றும் டெல்டா மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் விவசாயம் பாதித்தது. இதனால் விரக்தி அடைந்து விவசாயிகள் தமிழகம் முழுவதும் 40 க்கும் மேற்பட்டோர் மனம் நொந்து இறந்தனர். சிலர் தற்கொலையும் செய்தனர் . இதனால் விவசாய குடும்பம் கடுமையாக பாதித்துள்ளது.
எலியை கடித்து தின்று.,
இதனால் தமிழகத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து , இறந்தவர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் மாவட்டத்தை முற்றுகையிட்டு எலிக்கறி சாப்பிடும் போராட்டத்தை நடத்தினர். விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாசலில் அமர்ந்து எலியை கடித்து தின்று போராட்டம் நடத்தினர். இது தவிர சட்டியில் எலிக்கறி வைத்தும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை மக்கள் வினோதமாக பார்த்தனர்.
திருச்சியில் காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் கலெக்டர் வராததால் விவசாயிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர் . வறட்சியின் பாதிப்பு இன்னும் போக, போக அதிகரிக்கும் என்றனர்.
English summary:
Tiruchirapalli: Tamil Nadu enough insufficient rainfall Since the drought that has been front-page news was published yesterday on the website of Dina. As said Dina rat flesh ate today on the 30th and particularly the Association of farmers protested in Trichy.

Wednesday, 21 December 2016
பயிர்க்கடனை திரும்ப செலுத்த அவகாசம்
புதுடில்லி : விவசாயிகள் தங்களின் பயிர்க்கடனை திரும்ப செலுத்த 60 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அவகாசம் :
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சக இணை செயலாளர் ஆசிஷ்குமார் புடானி கூறுகையில், ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், நவம்பர் 1-ந் தேதியில் இருந்து டிசம்பர் 31-ந் தேதி வரையிலான காலத்தில் விவசாயிகளின் கடனை திரும்ப செலுத்தும் நாள் வந்தால் அவர்களுக்கு கூடுதலாக 60 நாட்கள் வழங்கப்படுகிறது. 60 நாட்களுக்குள் கடனை திரும்ப செலுத்தினால் அவர்களுக்கு 3 சதவீத மானியமும் கிடைக்கும்.
உதாரணத்துக்கு ஒரு விவசாயியின் பயிர்க்கடன் நவம்பர் 15-ந் தேதி திரும்ப செலுத்தப்பட வேண்டும் என்றால், அந்த விவசாயிக்கு அந்த தேதியில் இருந்து கூடுதலாக 60 நாட்கள் (ஜனவரி 15-ந் தேதி வரை) வழங்கப்படும். அதற்குள் அவர் கடனை திரும்ப செலுத்திவிட்டால் 3 சதவீத வட்டி மானியமும் கிடைக் கும் என தெரிவித்துள்ளார்.
English summary:
NEW DELHI: The farmers pay back their grains Federal Government has ordered a 60-day extension.

Friday, 16 December 2016
உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம்
தஞ்சை: உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு வினாடிக்கு 2000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லை என கூறி கர்நாடக அரசு இடைக்கால முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
இதற்கு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. போதிய தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்காததற்கும் காவிரி மீட்புகுழு கண்டனம் தெரிவித்துள்ளது.
English Summary:
Thanjavur: Supreme Court ordered the state of Karnataka in the kavery delta farmers have condemned the water quality to dissent. The rate of 2000 cubic feet per second of water to Tamil Nadu Karnataka Supreme Court opening. But saying that there is sufficient water in the kavery Karnataka government has filed an interim appeal.

Saturday, 3 December 2016
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு பயிர் கடன் வழங்கும் விழா
திண்டிவனம்:திண்டிவனத்தில் நடந்த அரசு விழாவில், அரசு சார்பில், விவசாயிகளுக்கு ரூ.58 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான கடனை, அமைச்சர் சண்முகம் வழங்கினார்.
திண்டிவனம்-மரக்காணம் ரோட்டிலுள்ள சக்கரபாணி திருமண நிலையத்தில், தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு, பயிர்க்கடன் வழங்கும் விழா நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சந்திரசேகர் வரவேற்றார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளிரகுராமன், எம்.எல்.ஏ., சக்கரபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கலந்து கொண்டு, புதிய திட்டத்தின் கீழ் 250 விவசாயிகளுக்கு ரூ.58 லட்சத்து 85ஆயிரம் மதிப்பிற்கு கடனை வழங்கினார்.
விழாவில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு, திண்டிவனம் நகர அ.தி.மு.க., செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவிவர்மன், கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், வீடு கட்டும் சங்க தலைவர் தளபதிரவி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பன்னீர், முன்னாள் சேர்மன் சிவா, வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், மாணவரணி அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திண்டிவனம் சரக கூட்டுறவு சங்க துணை பதிவாளர் பானு நன்றி கூறினார்.
English Summary:
Tindivanam: Tindivanam, on the occasion of the state, on behalf of the government, farmers loan worth Rs .58 lakh 85 thousand, presented by Minister Shanmugam.

Sunday, 27 November 2016
தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் பயிர்கள்: காவிரி டெல்டாவில் தொடரும் விவசாயிகள் மரணம்
நாகப்பட்டிணம்: காவிரி டெல்டா மாவட்டத்தில் தண்ணீர் இன்றி கருகும் பயிர்களைக் கண்டு விவசாயிகள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கின்றர். பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகின்றனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே இருக்கை கிராமத்தில் வயலுக்கு சென்ற தனுசம்மாள் பயிர் கருகிய அதிர்ச்சியில் நெஞ்சுவலி வந்து உயிரிழந்தார். நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள நீர்முளை கிராமத்தில் பெண் விவசாயி ஜெகதாம்பாள் 18 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்திருந்தார். தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகியது. கருகிய பயிர்களை கண்ட ஜெகதாம்பாள் மன உளைச்சலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
காவிரி தண்ணீர் பற்றாக்குறை:
இந்தாண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான 3 மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை தரவில்லை. இதனால், டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்க முடியாமல் போனது. இந்நிலையில் சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து முதலில் 15 ஆயிரம் கன அடியும், அடுத்து 6 ஆயிரம் கன அடியும், கடைசியாக 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் தமிழகத்திற்கு திறக்க உச்சநீதிமன்ற உத்தரவுகளில் அடுத்தடுத்து தெரிவிக்கப்பட்டது.
காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடி:
ஆண்டு தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி சம்பா சாகுபடி துவங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சம்பா சாகுபடி பொய்த்தது. இந்நிலையில், இந்த ஆண்டு சம்பா சாகுபடியை விவசாயிகள் தொடங்குவதற்கு வசதியாக கடந்த செப்டம்பர் 20ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதை நம்பி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட டெல்டா பகுதிகளில் விவசாயிகள் 18 லட்சம் ஏக்கரில் நேரடி நெற்பயிர் விதைப்பில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் தற்கொலை:
தமிழக அரசு அறிவித்தபடி, 62 நாட்களுக்கு மேலாகியும் மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு சென்றடையவில்லை. இதனால், தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் விதைத்த நெற்பயிர்கள் கருக தொடங்கியது. பயிர்கள் கருகியதால் விவசாயிகள் மரணமடைவதும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.
மாரடைப்பில் மரணம்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த ரகுநாதபுரத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ், மன்னார்குடி அடுத்த கோட்டூர் ஆதிச்சபுரத்தை சேர்ந்த அழகேசன்,திருவையாறு அடுத்த கீழ்த்திருப்பூந்துருத்தி ராஜேஷ்கண்ணன், ஆதனூர் ரத்தனவேல், கீழ்வேளூர் நவநீதம், வேதாரண்யம் ஜெயபால் ஆகியோர் காய்ந்த பயிர்களை பார்த்தமாத்திரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு வயலில் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
தொடரும் மரணங்கள்
வேதாரண்யம் அருகே உள்ள பிரிஞ்சிமூலையை சேர்ந்த முருகையன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட விவசாயி பாலசுப்ரமணியன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். நாகை மாவட்டம் கீழ் வேளூர் அடுத்த தேமங்களம் தெற்குவெளி மாதாகோயில் தெருவை சேர்ந்த அந்தோணிசாமி தனது வயலில் பயிர் வாடி இருப்பதை பார்த்து நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
14 பேர் மரணம்:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன் கோட்டை உக்கடை கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி உட்பட தமிழகம் முழுவதும் 14 விவசாயிகள் அடுத்தடுத்து பலியாகியுள்ளனர். தமிழக அரசு எந்தவித நல திட்டங்களையும், நிவாரணங்களையும் அறிவிக்காதது மட்டுமின்றி, ஆறுதல் வார்த்தை கூட கூறாதது ஒட்டுமொத்த விவசாயிகளின் மத்தியில் கடும் அதிருப்தியையும் தொடர் சோகத்தையும் விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
5 ஆண்டில் 2,450 பேர் உயிரிழப்பு:
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்காத காரணத்தால் கடந்த 5 ஆண்டுகளாக சம்பா மற்றும் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. நேரடி பயிர் விதைப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதனால், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் சுமார் 2,450 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சாகுபடி பரப்பு குறைந்தது:
தண்ணீர் வரத்து பற்றாக்குறை, விளைபொருட்களுக்கு முறையான விலை நிர்ணயிக்காதது உள்ளிட்ட காரணங்களால் 24 லட்சம் ஏக்கரில் இருந்து 18 லட்சம் ஏக்கராக காவிரி டெல்டா பகுதியில் விவசாய நிலங்கள் குறைந்துள்ளன. தமிழகம் முழுவதும் 48 லட்சம் ஏக்கராக விவசாய நிலங்கள் குறைந்துள்ளன.
English summary:
Farmer one among the thousands worried over the fate of their standing samba crop in the Cauvery delta region, died.14 farmers in the past one month adding to the gloom in the region.

Wednesday, 23 November 2016
தமிழகத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் குறித்து அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் நடப்பு பருவத்தில், 11 ஆயிரத்து 946 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், உணவுத் துறையின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதில், பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் உணவு பொருள் வழங்கல் துறையின் மூலமாக பொதுமக்களிடமிருந்து இதுவரை 5 லட்சத்து 56 ஆயிரத்து 948 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 5 லட்சத்து 35 ஆயிரம் 972 மனுக்கள் மீது தீர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா அரிசி திட்டத்திற்கு 3 மாதத்திற்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இதுவரை நடப்பு பருவத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 11 ஆயிரத்து 946 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
English Summary:
946 thousand metric tonnes of paddy has been procured and food, Kamaraj, said the minister.