சென்னை: தமிழக மக்கள் தேர்தலை விரும்புவதாகவும், ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்றும் பிரபல நடிகரான ஆனந்த் ராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில்அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என முன்னர் நான் கூறியதற்கு தற்போது அனைவரிடமும் ஆதரவு கிடைத்து வருகிறது. எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்கும் முன்னர் முதலில் மனசாட்சியிடம் கருத்து கேட்க வேண்டும். அடுத்து உறவினர்களிடமும் பின்னர் தொகுதி மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும். ஜெயலலிதா தான் வேட்பாளர் என்ற கருதிஓட்டு போடுங்கள் என நான் கூறினேன். நாளை நீங்கள் அளிக்க போகும் வாக்கும் மக்களின் நம்பிக்கை பெற்றதாக இருக்க வேண்டும். நாளைக்கு நீங்கள் ஓட்டு போட்டு தொகுதிக்கு தான் செல்ல வேண்டுமே தவிர கூவத்தூர் செல்ல முடியாது. எம்.எல்.ஏ.,க்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். ஒரு சிலர் போடுகின்ற பிச்சைக்காக எம்.எல்.ஏ.,க்கள் செயல்படக்கூடாது.
ஆதரவு கிடைக்காது:
நிரந்தர அரசியல்வாதியாக இருக்க வேண்டுமா அல்லது இடைப்பட்ட காலத்தில் அரசியல்வாதியாக இருந்துவிட்டு போய்விட வேண்டுமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தன்னிச்சையாக முடிவெடுத்தால், இந்த காலத்தை கடந்தால், மக்களின் ஆதரவு கிடைக்காது. எங்களுக்கு பதவி கிடைத்தால், இரண்டு நல்ல காரியத்தை செய்து விட்டு தப்பித்துவிடுவோம் மக்கள் மறந்துவிடுவார்கள் என எம்.எல்.ஏ.,க்கள் கருதுகிறார்கள். ஆனால் முன்னர் போல் மக்கள் கிடையாது. இளைஞர்கள் வீறு கொண்டு நடக்கிறார்கள். சமூக வலை தளத்தில் அனைத்து செய்திகளும் பரவுகினறன. இன்று உள்ள கொதிப்பு அனைவருக்கும் தெரிகிறது. செய்யக்கூடாத வற்றை அதிமு.க எம்.எல்.ஏ.,க்கள் செய்கிறார்கள்
உண்மையான அதிமுக யார் என மக்கள் தான் கூற வேண்டும். அதிக பெண்களுக்கு ஜெ., வாய்ப்பு கொடுத்தார்கள். அமைச்சர் வளர்மதி தைரியம் இருந்தால் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் சந்திக்க தயாரா? அவரை எதிர்த்து நானும் நிற்கிறேன். அவர் வெற்றி பெற்றால், பதவியில் நீடிக்கட்டும். நானும் ஓட்டளித்தவன் என்ற முறையில், உங்களை ஒரு தினம் சிந்தித்து உங்கள் மனசாட்சிக்கு கேட்டு பொது மக்களைவாக்களித்த மக்களை கேட்டு வாக்களிக்க வேண்டும் என அன்புடன் கோருகிறேன் . நீங்கள் நல்ல அரசியல்வாதி என மக்கள் முடிவெடுக்கும் வகையில், நீங்கள் நல்ல முடிவெடுக்க வேண்டும்.
ஜனாதிபதி ஆட்சி:
இன்று அதிகாரத்தை யார் அனுபவிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சட்டசபையை கலைத்துவிட வேண்டும். சட்டம் ஒழுங்கு கெடும் சூழ்நிலை வந்து கொண்டுள்ளது. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால் மக்களுக்கு அமைதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.