ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்னாக் மாவட்டத்திலுள்ள பி.டி.பி., கட்சியை சேர்ந்த அமைச்சர் பரூக் அந்த்ராபி வீட்டை குறி வைத்து பயங்கரவாதிகள் இரவில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீசார் காயமடைந்தார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், 4 ரைபில் துப்பாக்கியையும் திருடிச்சென்றனர். ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா முக்தியின் நெருங்கிய உறவினரான அமைச்சர் பரூக் அந்த்ராபி, வீட்டில் இல்லாததால் தாக்குதலில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.
Tuesday, 28 March 2017
Friday, 3 February 2017
எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறல்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம், பி.எஸ்.எப்., முகாம்கள் மீது கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
English summary:
Jammu: Jammu and Kashmir's Samba sector of the state has led the attack on the Pakistani military illegally. Pakistani army attacks targeting Indian positions, piesep., Threw a grenade and has led the attack on the camps. India has been given an appropriate response to the sides. Thus there was a commotion.

Friday, 20 January 2017
மாலி ராணுவ முகாம் மீது தீவிரவாதி தாக்குதல் - 60 பேர் பலி
பமாக்கோ - மாலி ராணுவ முகாம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டவர்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
முகாம் மீது தாக்குதல்:
மாலின் நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள காவோ நகரில் ராணுவ முகாம் உள்ளது. இங்கு ஆயுதப் படை வீரர்கள் வழக்கமான பயிற்சிக்காக அணிவகுத்து வந்தனர். அப்போது, முகாமை ஒட்டியுள்ள பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனம் திடீரென வெடித்துச் சிதறியது. வெடிகுண்டு நிரப்பிய அந்த வாகனத்தை ஓட்டி வந்த தற்கொலைப் படை தீவிரவாதி அதனை வெடிக்கச் செய்துள்ளான்.
60-ஆக உயர்வு:
இதன் காரணமாக, அப்பகுதியில் கூடியிருந்தவர்கள் நாலாபுறம் தூக்கி வீசப்பட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலரது உடல் உறுப்புகள் துண்டு துண்டாக சிதறின. இந்த தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 60 ஆக உயர்ந்துள்ளது. 115 வீரர்கள் படுகயாம் அடைந்தனர். மாலியில் 2013-ம் ஆண்டு பிரெஞ்சு தமையிலான கூட்டுப்படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக, வடக்கு பகுதியை ஆக்கிரமித்திருந்த தீவிரவாத குழுக்கள் ஒடுக்கப்பட்டன. எனினும், சில பகுதிகளில் தீவிரவாத குழுக்கள் தலைதூக்கி உள்ளதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
English summary:
Bamako - Mali army camp has increased to 60 the number of people killed in the terrorist attack.

Sunday, 15 January 2017
தென்மாநிலங்களிலும் பரவும் ஜல்லிக்கட்டு ‛டென்ஷன்'
சென்னை : தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும் தடையை தாண்டி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் போலீசாருக்கு எதிராகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டுக்கு பெருகும் ஆதரவு :
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரியும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டங்கள் ஒருபுறம் நடந்த போதிலும் பொங்கல் கொண்டாட்டங்கள் துவங்கியதால், கடந்த 2 நாட்களாக கோர்ட் தடையை மீறி பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்வீச்சு ; போலீசார் வீரட்டியடிப்பு :
சிகவங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 10,000 பேர் கலந்து கொண்டனர். போலீசார் அவர்களை தடுக்க முயன்ற போது, போலீசாரை சுற்றி வளைத்த பொதுமக்கள், அவர்களின் வாகனங்கள் மீது கல்வீசி, விரட்டி அடித்தனர். பின்னர் தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதே போன்று மதுரை பாலமேட்டில் போலீசார் அத்துமீறி நடந்து வருவதாக குற்றம்சாட்டிய பொது மக்கள், போலீசார் வாகனங்கள் மற்றும் மினிபஸ்களின் கண்ணாடிகளை கல்வீசி உடைத்தனர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர். பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்காததை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருவதால், அங்கு பதற்றம் காணப்படுகிறது.
பிற மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டு :
தமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆந்திராவிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நாரவாரிபள்ளி பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் சுமார் 100 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டை தடுக்க வந்த போலீசாரை, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விரட்டியடித்துள்ளனர். தமிழகத்தை கடந்து தென் மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பொங்கலை முன்னிட்டு மாடுகளுடன், கொளுந்து விட்டு எரியும் தீயில் இளைஞர்கள் இறங்கும் நிகழ்ச்சி அமோகமாக நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகளுடன் கலந்து கொண்டனர்.
English summary:
Chennai: Tamil Nadu and Andhra Pradesh also been jallikattu hurdle. In a few places, and attacks against the police.

Wednesday, 11 January 2017
நைஜீரியா ராணுவ முகாம் மீது போக்கோஹரம் தீவிரவாதிகள் தாக்குதலில் 20 பேர் பலி
நைஜர் - நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமின் மீது போக்கோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.
போக்கோஹரம் தீவிரவாதிகள்:
கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சமஅளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திடீர் தாக்குதல்:
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கின்றனர். வடக்கு நைஜீரியாவில் உள்ள சில சிறிய நகரங்களை கைப்பற்றியுள்ள போக்கோஹரம் தீவிரவாதிகள், தற்போது, வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரான மைடுகுரியை கைப்பற்றும் நோக்கத்தில் அவ்வப்போது இப்பகுதியில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
15 ஆயிரம் பேர் பலி:
இவர்களின் ஈவுஇரக்கமற்ற தாக்குதல்களுக்கு இதுவரை 15 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிர் பயத்தில் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறி, வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
ராணுவ முகாம் மீது தாக்குதல்:
இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோபே மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமின் மீது போக்கோஹரம் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். யோபே மாநிலத்தில் உள்ள புனியாடி ராணுவ முகாமுக்குள் நேற்று முன்தினம் பின்னிரவு புகுந்த போக்கோஹரம் தீவிரவாதிகள் ஐந்து ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதாகவும், ராணுவம் நடத்திய எதிர் தாக்குதலில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
English Summary:
Niger - Nigeria's yope world war attack by militants on a military camp in the state 5, killing 20 people, including soldiers.

ஜெருசலேம் லாரி தாக்குதலை நடத்தியவர் ஐ.எஸ் ஆதரவாளர்: இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டு
ஜெருசலேம் - ஜெருசலேம் லாரி தாக்குதலை நடத்தியவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
3 பேர் உயிரிழப்பு:
இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேத்தில் ராணுவப்படையைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் பஸ்சில் ஏறுவதற்கு தயாராக இருந்த போது திடீரென அவர்களுக்கு மத்தியில் லாரி ஒன்று புகுந்தது. இதில் 3 பெண் வீரர்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் 20 வயது மிக்கவர்கள். மேலும் இந்த தாக்குதலில் 14 பேர் காயம் அடைந்தனர்.
திட்டமிட்ட தாக்குதல்:
அப்போது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய அந்த லாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் லாரி டிரைவர் உயிரிழந்தார். அவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக்கூறப்படுகிறது.
ஐ.எஸ் ஆதரவாளர்:
இந்நிலையில், ஜெருசலேம் லாரி தாக்குதலை நடத்தியவர் ஒரு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். முன்னதாக, தாக்குதல் நடந்த இடத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் அவிக்டோர் லிபெர்மேனுடன் பிரதமர் நெதன்யாகு பார்வையிட்டார். இதனையடுத்து அவரது அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், குற்றவாளி ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் என்பதற்கான அறிகுறிகளே தெரிகிறது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
English Summary:
Jerusalem - Jerusalem truck attacked a terrorist organization is a supporter of PCs, said Israeli Prime Minister Benjamin Netanyahu.

Monday, 9 January 2017
ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : 3 வீரர்கள் பலி
ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலம் அஹ்னூரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீரின் அஹ்னூர் பகுதியில் ஜிஆர்இஎப் (General Reserve Engineer Force) ராணுவ முகாம் உள்ளது. இதில் இன்று அதிகாலை புகுந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் ராஅவ வீரர்கள் 3 பேர் பலியாகி உள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
English summary:
Jammu: Jammu and Kashmir staged a surprise attack by terrorists on military barracks in ahnur. The deaths of 3 soldiers. Ahnur area of Kashmir GRIP (General Reserve Engineer Force) military camp.

Thursday, 5 January 2017
பிலிப்பைன்ஸ் சிறையில் தீவிரவாதிகள் தாக்குதல் 150 கைதிகள் தப்பி ஓட்டம்
மணிலா - பிலிப்பைன்ஸ் சிறையில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து, அங்கிருந்த கைதிகள் 150 பேர் தப்பி ஓடினர்.
போராளிகள் தாக்குதல்:
பிலிப்பைனசின் வடக்கு கொட்டோபாட்டோ பகுதியில் உள்ள இந்த சிறையை, நேற்று 10க்கும் மேற்பட்ட இஸ்லாமிய போராளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தாக்கியதில் ஒரு சிறை அதிகாரியும், ஒரு கைதியும் கொல்லபட்டார்கள். என தகவல்கள் வெளீயாகி உள்லது.
கைதிகள் தப்பி ஓட்டம்:
சிறையில் இருந்து 150 கைதிகள் தப்பி உள்ளனர். சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளை பிலிப்பைன்ஸ் நாட்டின் படையினரும், போலீசாரும் தேடி வருகின்றனர். பிலிப்பைன்சின் மின்டனாவ் தீவில் உள்ள கிடாபவான் நகரில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
English summary:
Manila - Philippines sudden attack by militants in jail, the 150 inmates fled.

Wednesday, 4 January 2017
கோல்கட்டா பா.ஜ., அலுவலகம் மீது தாக்குதல்; 12 பேர் படுகாயம்
கோல்கட்டா: திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., சுதீப் பந்த்யோபாத்யாயை சி.பி.ஐ., கைது செய்ததால் கோபம் அடைந்த அக்கட்சியினர் கோல்கட்டா பா.ஜ., அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 12 பேர் படுகாயம் அடைந்தனர். பாதுகாப்புக்காக சி.ஆர்.பி.எப்., வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
பா.ஜ., அலுவலகம் மீது தாக்குதல்:
நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் திரிணாமூல் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சுதீப் பந்த்யோபாத்யாவை சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
இதனால், கோபம் அடைந்த திரிணாமூல் கட்சியின் மாணவர் அணியினர் கோல்கட்டாவில் உள்ள பா.ஜ., அலுவலகத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
12 பேர் காயம்; சிர்.ஆர்.பி.எப்., குவிப்பு:
கல் வீச்சு தாக்குதலில் பா.ஜ., கட்சியை சேர்ந்த 12 பேர் படுகாயம் அடைந்தனர். கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். போலீசாருக்கும் ஆர்பாட்டக்கார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் படை போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல கோடி மோசடி:
ரோஸ் வேலி எனப்படும் நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் பணமோசடி நடந்ததாக 2 ஆண்டுகளுக்கு வழக்கு பதிவானது. பின்னர், அந்த வழக்கு சி.பி.ஐ., க்கு மாற்றப்பட்டது. விசாரணையில் அந்த நிறுவனத்தின் இயக்குநரும் திரிணாமூல் கட்சியை சேர்ந்தவருமான தபஸ் பாலை சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர். இந்நிலையில், நிதி நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த திரிணாமூல் எம்.பி., சுதீப் பந்த்யோபாத்யாய் இன்று கைது செய்யப்பட்டார்.
மம்தா கொந்தளிப்பு:
கைது நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி கூறுகையில், "இந்த கைது நடவடிக்கைகள் பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் படி நடந்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்வதால் கைது செய்யப்படுகிறார்கள். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அவசர கூட்டம் இன்று மாலை நடந்தது. அதில், மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் நாளை ஆர்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
English summary:
Trinamool Congress MP, Sudeep pantyopatyayai CBI arrested the party of angry Kolkata BJP attack on the office. In which 12 people were injured. For security CRPF., Soldiers were deployed. Thus, there is a moment of panic.

Monday, 2 January 2017
இஸ்தான்புல்லில் 39 பேர் பலி: தாக்குதல்தாரியை தேடிவரும் போலிஸார்
இஸ்தான்புல்லில் இரவு விடுதி ஒன்றில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை துருக்கி போலிஸார் தேடி வருகின்றனர்.
பலியானவர்களுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
அதில் கொல்லப்பட்ட 39 பேரில் சிலருக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.
சவுதியைச் சேர்ந்த ஐவர் உட்பட உயிரிழந்தவர்களில் பலர், அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று துருக்கி ஊடகம் தெரிவித்துள்ளது.
குர்திய தீவிரவாத அமைப்பான பிகேகேவின் தலைவர் இந்த தாக்குதலில் குர்திய படைகள் ஈடுபடவில்லை என மறுத்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது; இந்த தாக்குதல் கொடிய மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என தெரிவித்துள்ளது.
இதை விட ஒரு இழிவான குற்றத்தை நினைத்து பார்பது கடினம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
இது ஒரு கொடூரமான செயல் என அமெரிக்கா கண்டித்துள்ளது.
பயங்கரவாதத்தின் விளைவுகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று போப் ஃபிரான்ஸிஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary:
One night accommodation in Istanbul, Turkey, New Year celebrations, police are searching for the person involved in the shooting.

Wednesday, 28 December 2016
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நடத்தப்பட்டது போல் 2-ம் கட்டமாக மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்த மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நடத்தப்பட்டதுபோல, 2-ம் கட்டமாக மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்த மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. இதில், கமாண்டோ அதிரடி படையினர், சிறப்பு அதிரடி படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இத்திட்டத்திற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
6 ஆயிரம் கோடியில் தளவாடங்கள் :
கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி இரவு இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் 7 தளங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர். உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது கமாண்டோ படையினர் மற்றும் சிறப்புப் படையினரை பயன்படுத்தி, 2-ம் கட்ட துல்லியத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது.
இதற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நவீன ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 புதிய விமானங்கள் வாங்கப்படவுள்ளன. 300 கோடி ரூபாய் செலவில் புதிய துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்றவை கொள்முதல் செய்யப்படுகின்றன. மேலும், கடலோர காவல்படைக்கு என 6 புதிய விமானங்கள் வாங்கப்படவுள்ளன. எனினும் இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
English Summary:
NEW DELHI - Pakistan-occupied area happened like, 2nd phase accuracy to strike again, the government has drawn up a new plan. The commando Action Force, Special Action Force belonging. 6 crore for the project at a cost of sophisticated military hardware purchases are made.

Thursday, 22 December 2016
ஜெர்மனி வாகன தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு
பெர்லின் - ஜெர்மனி வாகன தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.
ஐ.எஸ் பொறுபேற்பு:
இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட ஒரே நபரையும் பாதுகாப்பு படை விடுவித்தது. 23 வயதான அந்த இளைஞர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்.ஜெர்மனியில் அகதியாக தங்கியிருந்த நிலையில், அவரை தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்த போலீஸ் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவித்தது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை பிடிக்கும் வரை ஓயமாட்டோம் என்று ஜெர்மனி உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
சந்தைககுள் தாக்குதல்:
ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தை இயங்கி வந்தது. இந்த சந்தையில் பொதுமக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் உள்ளூர் நேரப்படி இரவு 8.14 மணிக்கு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு உருக்கு உத்திரங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, கிறிஸ்துமஸ் சந்தைக்குள் சீறிப்பாய்ந்து ஆட்கள் மீது ஏற்றி சுமார் 80 மீட்டர் தொலைவுக்கு சென்று நின்றது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. லாரி சக்கரங்களுக்கு இடையே சிக்கியவர்கள் அலறித்துடித்தனர். பலர் சக்கரத்துடனே இழுத்துச் செல்லப்பட்டனர்.
12 பேர் நசுங்கி பலி:
இந்த கோர சம்பவத்தில் 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீஸ் படையினரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை, அவர்கள் மீட்டு, ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.லாரியின் டிரைவர் சம்பவ இடத்தில் லாரியை விட்டு விட்டு, அந்த பகுதியில் அமைந்திருந்த டையர்கார்டன் என்ற பூங்காவை நோக்கி ஓட்டம் பிடித்தார்.சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட லாரி, போலந்து நாட்டின் ஏரியல் ஜூராவ்ஸ்கை என்பவருக்கு சொந்தமானது, போலந்து நாட்டில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary:
Berlin - Germany ISIS terrorist organization claimed responsibility for the attack vehicle. Intense police hunt for the person who carried out the attack to catch.