Tuesday, 28 March 2017
Friday, 3 March 2017
தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று (மார்ச்,3) மாலை நடைபெற உள்ளது.
முதல் அமைச்சரவை:
முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், அவரது தலைமையில், முதல் அமைச்சரவை கூட்டம், இன்று மாலை, 4:30 மணிக்கு, தலைமை செயலகத்தில், நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், தமிழக அரசின், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். மேலும், தமிழகத்தில் நிலவும் வறட்சி, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவது உட்பட, வேறு பல பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.
English Summary:
Chennai: Tamil Nadu Cabinet meeting today (March 3) is held in the evening.

Thursday, 5 January 2017
வறட்சியால் பாதித்த கர்நாடகாவிற்கு ரூ.1,782 கோடி
புதுடில்லி: வறட்சியால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவிற்கு ரூ.1,782.44 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
வறட்சி:
கர்நாடகாவில் பருவ மழை பொய்த்ததால், 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. இதனால் அணைகளில் போதிய தண்ணீர் இல்லை எனவும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. கடந்த அக்டோபர் 19ம் தேதி கர்நாடகாவை வறட்சி பாதித்த மாநிலமாக மாநில அரசு அறிவித்தது. மொத்தமுள்ள 176 தாலுகாக்களில் 139 தாலுகாக்கள் வறட்சி பாதித்தவை எனவும் அறிவிக்கப்பட்டது.
கோரிக்கை:
முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி குழுவினர் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கர்நாடகாவிற்கு ரூ.4,702 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய குழு கர்நாடகா வந்து மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
நிதி ஒதுக்கீடு:
இந்நிலையில், டில்லியில் ராஜ்நாத் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை செய்தது. இந்த கூட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.1,782.44 கோடி ஒதுக்கப்படுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், கர்நாடகா மற்றும் உத்தர்கண்ட் மாநிலங்களில் தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.208.91 கோடி ஒதுக்குவது எனவும், இதில் கர்நாடகாவிற்கு ரூ.188.91 கோடியும், உத்தர்கண்ட் மாநிலத்திற்கு ரூ.20 கோடியும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.
English summary:
NEW DELHI: Drought-hit Karnataka Cabinet Committee approved an allocation of Rs .1,782.44 crore.