Wednesday, 22 March 2017
Tuesday, 21 February 2017
காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
புதுடில்லி : காவிரி நதிநீர் தீர்ப்பாய தலைவராக இருந்த பல்பீர் சிங் சவுகான், 1990 ம் ஆண்டு ஜூன் 2 ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து இந்த பதவி காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் இப்பதவிக்கு புதிய தலைவரை நியமிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பரிந்துரை செய்தார். இதனையடுத்து காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட் நீதி
பதி அபய் மனோகர் சப்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
பதி அபய் மனோகர் சப்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
காவிரியில் கழிவு நீர் கலப்பு: சுப்ரீம் கோர்ட் கேள்வி
புதுடில்லி: காவிரியில், கழிவு நீர் கலப்பது தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது குறித்து வல்லுனர் குழு அமைப்பது குறித்து, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாவட்டங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காவிரியில் கலப்பதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கழிவு நீர் கலப்பதை தடுக்க, வல்லுனர் குழு அமைப்பது குறித்து, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.