Tuesday, 28 March 2017
Monday, 6 March 2017
ஜம்மு -காஷ்மீரில் நிலநடுக்கம்
ஸ்ரீநகர் : ஜம்மு- காஷ்மீரின் வடமேற்கு பகுதியில் இன்று (மார்ச் 06) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இத ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளது. காலை 8.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், காஷ்மீருக்கு வடக்கே 35.7 அட்சரேகை பகுதி மற்றும் கிழக்கே 74.0 தீர்க்கரேகை பகுதி ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
English summary:
Srinagar: Jammu and Kashmir in the northwest today (March 06) morning earthquake occurred. This, is recorded as 4.8 on the Richter scale. The earthquake occurred at 8.14 in the morning and part of Kashmir latitude 35.7 north and longitude 74.0 east, the area around the Indian Meteorological Center said the earthquake caused. No casualties were caused by the earthquake.

Wednesday, 1 March 2017
ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இருப்பினும் சேத மதிப்பு குறித்து விபரம் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.இன்று இரவு (28-ம் தேதி) 7.14 மணிக்கு உருவான நிலநடுக்கம் சில நொடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது. மேலும் மாநிலத்தின் வடக்கு பகுதியை சேர்ந்த குப்வாரா, கிஸ்த்வார், பதர்வா உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English summary:
Srinagar: Jammu and Kashmir after the earthquake in Poonch. However, none of the reported damage worth detail about the night (28 October) reportedly lasted a few seconds the quake struck at 7.14.
Friday, 20 January 2017
இத்தாலியில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் : பொதுமக்கள் பீதி
ரோம் - இத்தாலியில் தலைநகரம் ரோம் மற்றும் பிளாரன்ஸ் நகரம் போன்றவற்றில் அடுத்தடுத்து 3 தடவை பூகம்பம் ஏற்பட்டது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என கருதி மக்கள் பீதியில் உள்ளனர்.
3 தடவை நிலநடுக்கம்:
இத்தாலியில் ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட பூகம்பத்தில் 300 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. தலைநகரம் ரோம் மற்றும் பிளாரன்ஸ் நகரம் போன்றவற்றில் அடுத்தடுத்து 3 தடவை பூகம்பம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. ரோம் நகரில் மெட்ரோ ரெயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. மக்கள் அனைவரும் ரெயில் நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார்கள்.
மக்கள் பீதி:
நிலநடுக்கம் ஏற்பட்டபோது பள்ளிகளில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. மாணவர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது. அவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இதனால் பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்ததாகவோ அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல் இல்லை. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என கருதி மக்கள் பீதியில் உள்ளனர்.
English summary:
Rome - Italy Rome and Florence in the capital city, such as the earthquake occurred 3 times in succession. People are scared to assume that the earthquake may occur again.

Wednesday, 11 January 2017
7.3 ரிக்டர் அளவில் பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்
மணிலா - பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கில் உள்ள ஜோலோ தீவு மற்றும் தபியாவான் பகுதிகளில் நேற்று 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம்:
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கில் உள்ள ஜோலோ தீவு மற்றும் தபியாவான் பகுதிகளில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது. செலபஸ் கடல் பகுதியில் பூமியின் அடியில் சுமார் 617 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நேற்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.3 அலகுகளாக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படாத நிலையில் இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.
எச்சரிக்கை:
இந்நிலையில் இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் புதிதாக ஏற்பட்டுள்ள பாறை அடுக்கால் தெற்காசிய பகுதிகளில் பெருமளவு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary:
Manila - Philippine island of Jolo, in the southeast of the country and in areas escape 7.3 magnitude earthquake yesterday.

Wednesday, 4 January 2017
திரிபுரா மாநிலத்தில் நில நடுக்கம் : மக்கள் பீதி- அலறி ஓட்டம்
அகர்தலா - வங்க தேச எல்லைக்கு அருகே அமைந்துள்ள இந்திய வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. இது போன்ற பயங்கர நில நடுக்கத்தை நாங்கள் இதுவரை பார்த்தது இல்லை. இந்த அதிர்வால் கட்டிடம் நொறுங்கி விழும் என்று பயந்தோம் என மக்கள் பயத்துடன் கூறினார்கள். மேலும் நில நடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் அலறி அடித்து சாலைக்கு ஒடி வந்தார்கள். இந்த நில நடுக்கம் நேற்று மதியம் 2.39 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டது.
மாநிலத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் தாத்ரி மாவட்டத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய புவியியல் மையம் தெரிவித்தது. நில நடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து வீடு, அலுவலகங்களை விட்டு வேகமாக ஓடி வந்தார்கள். இருப்பினும் இந்த நில நடுக்கத்தால், உயிர் மற்றும் சொத்து சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தாத்ரி மாவட்டத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் , பூமியின் 28 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.
இது நாள் வரை இதுபோன்ற பயங்கர நில நடுக்கத்தை நான் பார்த்தது இல்லை. பூமி கடுமையாக அதிர்ந்த போது ஒட்டு மொத்த கட்டிடமும் நொறுங்கி விழுந்து விடும் என பயந்தேன் என மாநில தலைநகர் அகர்தலாவில் வசிக்கும் பிரதீப் மாலிக் பயம் கலந்த உணர்வுடன் கூறினார்.
English summary:
Agartala - Bengal frontier, which is located near the earthquake occurred yesterday in India's northeastern state of Tripura. We still have not seen such a terrible earthquake. The people feared the quake in fear that the building was crumbling. The earthquake also hit the road when the inhabitants of people came to the snap. The 5.7 magnitude quake occurred at 2.39 yesterday afternoon.

Thursday, 29 December 2016
ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.9 ஆக பதிவு
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் கிழக்கு பகுதியில் ஹோன்சூ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.
டோக்கியோ உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை
English summary:
Tokyo: Japan's earthquake on the island's eastern side honco. Is recorded as 5.9 on the Richter scale.

Monday, 26 December 2016
சிலியில் பெரும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அதனை தொடர்ந்த சுனாமி எச்சரிக்கையால் சிலியின் தெற்கு கடற்கரை பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வுப்படி 7.7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குவெலண்ட் துறைமுகத்திலிருந்து 40 கிமீ தென் மேற்கில் மையப்புள்ளி அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் 3மீ உயரம் வரை சுனாமி அலை வீசுவதற்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமாகியுள்ளதைக் காட்டுகிறது.
English summary:
A powerful earthquake in the Pacific Ocean, a tsunami warning following the southern coast of Chile, hundreds of people were evacuated from the area.
Friday, 23 December 2016
ரஷ்யாவில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2ஆக பதிவு
மாஸ்கோ : ரஷ்யாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டரில் 5.2 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
மிதமான நிலநடுக்கம் :
ரஷ்யாவின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோல்ஸ்கோயில் இருந்து சுமார் 79 கி.மீ., தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 5.2 ஆக பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த இரண்டாவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
English Summary:
Moscow : Russia's moderate earthquake occurred; earthquake recorded as 5.2 on the Richter reports of damage were received.

Sunday, 11 December 2016
இந்தோனேசிய நிலநடுக்கத்தால் 45,000 பேர் வீடிழந்து தவிப்பு
ஜாகர்த்தா - இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுமார் 45,000 பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். இந்தோனேசியாவில் புதனன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 100 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலநடுக்கத்துக்கு சுமார் 45,000 பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளதாக இந்தோனேசியா அரசு கூறியுள்ளது.
இது குறித்து இந்தோனேசிய தேசிய பேரிடர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "நிலநடுக்கம் காரணமாக சிக்கிக் கொண்ட மக்களை மீட்ட போது ஏராளமான மக்கள் தங்களது உடைமைகளை இழந்துள்ளது தெரிய வந்தது. மீட்கப்பட்ட மக்கள் மசூதிகளிலும், பள்ளிக் கூடங்களிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில இடங்களில் மீட்புப் பணிகள் மோப்ப நாய்களின் உதவியுடன் நடந்து வருகிறது. 11,000 கட்டிடங்கள் வரை முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளது" என்று கூறினார்.
உதவிகரம் நீட்டிய ஆஸ்திரேலியா:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய அரசுக்கு ஆஸ்திரேலியா அரசு நிவாரணப் பணிகளுக்காக ஒரு மில்லியன் டாலரை அறிவித்துள்ளது.
English Summary:
Jakarta - A powerful earthquake in Indonesia, nearly 45,000 people have lost their homes. A powerful earthquake in Indonesia on Wednesday, killing 100 people trapped in the rubble. Many of the injured have been admitted to hospitals. Around 45,000 people lost their homes in the quake, according to the Indonesian Government.

Wednesday, 7 December 2016
இந்தோனேஷியாவில் கடும் பூகம்பம்: 54 பேர் பலி
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் சுமத்ரா மாகாணத்தில், பன்டா ஏசேஹ் என்ற நகரில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 54 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரியுலியுட் என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. அங்குள்ள மக்கள் வழிபாட்டிற்காக தயாராகி கொண்டிருந்த போது பூகம்பம் ஏற்பட்டது. கட்டடங்கள் சரிந்து விழுந்ததில், 7 குழந்தைகள் உட்பட 54 பேர் பலியானார்கள். மேலும் சிலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏராளமான மக்கள் காயமடைந்துள்ளனர்.
அந்நகரில் உள்ள மருத்துவமனைக்கு, காயமடைந்த நிலையில் பலர் வந்து கொண்டுள்ளனர். பலர் அருகில் உள்ள நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த பூகம்பத்தால், அந்த இடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பூகம்பத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
English Summary:
Sumatra province in Indonesia, Banda eceh severe earthquake occurred in the city. In which 54 people were killed, officials said panic

Saturday, 3 December 2016
பெருவில் நிலநடுக்கம்: வீடுகள் சேதம்
லம்பா - பெருவின் தென் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது.
லம்பா நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் பூமிக்கு அடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக பெரு நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகள் இல்லை : இந்த நிலநடுக்கம் குறித்து பெருவின் தேசிய சிவில் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "நிலநடுக்கத்தினால் சில வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளது. 30 நொடிகள்வரை நிலநடுக்கத்தின் அதிர்வு நீடித்தது. இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை" என பதிவிட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் வருடத்துக்கு சுமார் 200 நிலநடுக்கங்கள்வரை ஏற்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மக்களால் உணரப்பட முடியாதவை. முன்னதாக பெருவில் 2007-ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் .
English Summary : Peru Earthquake damage to homes.moderate earthquake in the southern part of Peru. The earthquake was recorded at 5.5 on the Richter scale. No loss of life, the earthquake in Peru's National Civil Society on his Twitter page, "earthquake, some houses, damaged roads. 30 notikalvarai tremor lasted. In this there was no casualty,"...
Tuesday, 15 November 2016
அசாமில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோளில் 5.0 ஆக பதிவு
திஸ்பூர் :
அஸ்ஸாமில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.0 ஆக பதிவானது. இன்று காலை 7.40 மணியளவில் அஸ்ஸாமின் கரிம்காஞ்ச் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் சேதமோ, உயிரிழப்போ எதுவும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் சற்று பீதி அடைந்தனர். இதனால், அப்பகுதிகளில் பரபரான சூழல் காணப்பட்டது.

Monday, 14 November 2016
நியூஸிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது
நியூஸிலாந்தில் நள்ளிரவு நேரப்படி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 என்று பதிவான இந்த பூகம்பத்தின் தாக்கமாக முதல் சுனாமி அலை தெற்குத் தீவின் வடகிழக்கு கடற்கரையைத் தாக்கியது.
நாட்டின் ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரைப்பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் என்று நியூஸிலாந்தின் சிவில் டிபன்ஸ் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கிமீ தூரத்திலேயே நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் தாக்கியது.
மேலும் நாடு முழுதுமே இதன் தாக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள சிறிய ஊரான செவியட்டில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது மேலும் பின்னதிர்வுகளும் ஏற்பட்டுள்ளது.
தெற்குத் தீவான வடக்கு கேண்டர்பரி பகுதியில் 1 மீட்டர் உயரத்திற்கு முதல் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
கிறைஸ்ட் சர்ச் நகருக்கு 91 கிமீ வடகிழக்கே இதன் மையம் இருந்தது. உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
எலிசபத் என்ற பெண்மணி ரேடியோ நியூஸிலாந்துக்குக் கூறும்போது, தன் வீடு பாம்பு போல் சுழன்றது, சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மின்சாரம் இல்லை என்றார். வெலிங்டன் நகரில் சில கட்டிடங்களின் கண்ணாடிகள் சிதறி சாலையில் விழுந்துள்ளது.
பின்னதிர்வுகள் ரிக்டர் அளவு கோலில் 6.1 என்று பதிவாகியுள்ளது.
நியூஸிலாந்து நாடு ஆஸ்திரேலிய மற்றும் பசிபிக் டெக்டானிக் பிளேட்டுகள் மீது உள்ளது, இது ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளதால் ஆண்டுக்கு சுமார் 15,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.