புதுடில்லி: கறுப்பு பணம் குறித்து கடந்த 3 நாட்களில் 4 ஆயிரம் இமெயில்கள் அரசுக்கு வந்துள்ளது.
கறுப்பு பணம் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள் தாங்களாக முன்வந்து தகவல் தெரிவிக்க கடைசி வாய்ப்பு அளித்துள்ளது. மேலும், கறுப்பு பணம் தொடர்பாக, blackmoneyinfo@incometax.gov.in என்ற இமெயில் மூலமாக அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என 3 நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து, தற்போது வரை அரசுக்கு கறுப்பு பணம் தொடர்பாக 4 ஆயிரம் இமெயில் வந்துள்ளது. இமெயில்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள், கறுப்பு பணத்தை ஒழிக்க உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். பல வங்கி அதிகாரிகள் இந்த சோதனையில் சிக்கியுள்ளனர். அவர்கள் பணி நீக்கம் அல்லது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வங்கியில் டிபாசிட் செய்யப்படும் பணம் தொடர்பாகவும், கணக்கில் கட்டப்படாத சொத்து தொடர்பாகவும், நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிதி கண்காணிப்பு குழுவுக்கு தினமும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் அடிப்படையில் மத்திய அரசு பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
English summary:
NEW DELHI: In the past 3 days, 4 thousand email black money has come to the state.