கொழும்பு:இலங்கை சுதந்திர தினவிழாவில் உரையாற்றிய அதிபர் சிறிசேனா, நாட்டில் வாழும் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறினார்.
இலங்கை சுதந்திர தினவிழாவில் உரையாற்றிய அதிபர் சிறிசேனா, நாட்டில் வாழும் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது.சில சந்தர்ப்பவாதிகளின் குறுக்கீடுகள் இருந்த போதிலும், இந்த உறுதிக்காக நாங்கள் தீர்மானமாக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளோம். அறிவு மற்றும் புதுமை அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி அரசு செயல்படும்' என்றார்.
இலங்கை அரசு உறுதி:
இலங்கையில் உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை அதிபர் சிறிசேனா தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ராணுவ பயன்பாட்டுக்காக கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நிலங்களை திருப்பி அளிக்கவும், முன்னாள் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் சிலரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழர்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்ற வழிசெய்யும் வகையில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் பணிகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு உள்ளது.
English Summary:
Colombo: Sri Lanka Freedom day festival ciricena Addressing the President, the Government is determined to bring about reconciliation with Tamils living in the country said.