புதுடில்லி: மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கோபால் பகாலே கூறியதாவது: இலங்கை சிறையில் உள்ள 85 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள். இது தொடர்பாக, இலங்கை அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். மீனவர் மீது நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என இலங்கை அரசும், அந்நாட்டு கடற்படையும் கூறியுள்ளன. இது குறித்து விசாரணை நடத்தவும் ஒப்புக்கொண்டுள்ளன.
ஹெச்1-பி விசா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.
தலாய் லாமா விவகாரத்தில், இந்திய அரசின் நிலை தெளிவாக உள்ளது. இதில் மாற்றமில்லை. அவர் இந்தியாவிற்குள் எங்கும் செல்ல தடை விதிக்கவில்லை.
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டியது பாகிஸ்தான் அரசின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.

English summary:
New Delhi: Foreign Ministry spokesman Gopal pakale said 85 Indian fishermen released by Sri Lanka in prison. In this connection, waiting for the orders of the Government of Sri Lanka. As we did not conduct fire on fishermen Sri Lankan government and the country's navy said. It was agreed to conduct an investigation.