ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பத்திரிகையாளர்களிடம் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மக்கள், விவசாயிகள் வேண்டாம் என சொன்னால், அதனை நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த திட்டம் கடந்த 2006ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இதனை எதிர்க்கவில்லை. இந்த திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்துள்ளேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காது. இந்த திட்டத்திற்காக மோடி அரசை யாரும் குறைகூறக்கூடாது.வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் தனித்து நிற்க வேண்டும். பா.ஜ., இதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Thursday, 2 March 2017
Wednesday, 14 December 2016
ஓசூர் அருகே பெண் குழந்தையை ரூ.200-க்கு விற்ற தாய்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெற்ற மகளை 200 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக வந்த தகவலையடுத்து குழந்தையின் தாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓசூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட திம்மக்கா என்பவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே 6 குழந்தைகளுக்கு தாயான திம்மாவிற்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய மருத்துவர்கள் தேடிய போது அவர் அங்கிருந்து தப்பிச்சென்றதை அறிந்தனர். இதனை அடுத்து வானமங்கலம் கிராமத்தில் உள்ள வீட்டில் திம்மக்காவை கண்டுபிடித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஓசூர் அரசு மருத்துவமனை ஊழியர் எல்லம்மா என்பவரிடம் பணத்திற்காக குழந்தையை விற்றதாக திம்மக்கா கூறியுள்ளார். சுகாதாரத்துறை அலுவலர் தந்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் எல்லம்மா பெயரைச் சொல்லி யசோதா என்பவர் குழந்தையை பணம் கொடுத்து பெற்றுச் சென்றதை கண்டறிந்தனர். அதிர்ச்சி அளிக்கும் இந்த சம்பவம் குறித்து எல்லாமிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English summary:
Krishnagiri district as the daughter who was sold for 200 rupees informed child's mother, the police have started investigation