சென்னை:ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் அறிவுறுத்தி உள்ளார். வாக்காளர்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடாது. தேர்தல் முகவராக நியமிக்கப்பட்டவர் தகுதி உடையவராக இருத்தல் வேண்டும். முறைகேடுகளை தேர்தல் அலுவலரிடமே தெரிவிக்க வேண்டும். தேர்தல் அலுவலர் நடத்தும் கூட்டங்களில் வேட்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடுக்க கூடாது. தேர்தல் முடிவு வெளியான 30 நாட்களில் வேட்பாளர்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய தவறக்கூடாது. வேட்பாளர்கள் பெயர், சின்னம் குறித்த பூத் சிலிப் கட்சியினர் வழங்க கூடாது. இவ்வாறு வேட்பாளர்களுக்கு தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் அறிவுறுத்தி உள்ளார்.