லக்னோ:புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதால் பரபரப்பு நிலவும் நிலையில், வங்கிகள் குறிப்பிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டது உண்மைதான் என்று மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:சில இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கிகளும் குறிப்பிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளன. சில வங்கிகளின் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக எங்கெங்கு தகவல் கிடைத்தாலும், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் மிஸ்ரா.
பொருளாதாரம் சுத்தமானதாக மாறும்:
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து மிஸ்ராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:குறைந்த காலத்துக்கு சில கஷ்டங்களை மக்கள் சகித்துக் கொண்டாக வேண்டும் என்று நாட்டு மக்களிடம் பிரதமரே கேட்டுக் கொண்டுள்ளார். பெரிய முடிவுகள் எப்போது எடுக்கப்பட்டாலும், அப்போது பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். ஆனால், இந்த முடிவால், நமது நாட்டின் பொருளாதாரம் சுத்தமானதாக மாறும்.
நாட்டு மக்கள் தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை தாமாக முன்வந்து தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்கு போதிய பலன் கிடைக்காததால், ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற முடிவை மத்திய அரசு எடுத்தது.என்றார் கல்ராஜ் மிஸ்ரா.

English summary:
Lucknow: Newly released Rs 2,000 banknotes were confiscated and the level of sensation, the banks involved in the irregularities Kalraj Mishra, the Minister admitted that was true.