சண்டிகர்: எனது குடும்பத்தை நடத்துவதற்காக டிவி நிகழ்ச்சிகளில் தோன்றி வருவதாக பஞ்சாப் அமைச்சர் சித்து கூறியுள்ளார்.முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து, தனியார் டிவியில் நிகழ்ச்சி ஒன்றை நீண்ட நாட்களாக நடத்தி வருகிறார். பஞ்சாபில் அமைச்சராக பதவியேற்ற பின்னரும் அந்த நிகழ்ச்சியில் சித்து கலந்து கொண்டார்.. இது குறித்து முதல்வர் அம்ரீந்தர் சிங் சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்டார்.இது குறித்து விளக்கமளித்த சித்து கூறியதாவது: அம்ரீந்தர் செய்வது எப்போதும் சரியாக இருக்கும். எனது குடும்பத்தை நடத்துவதற்காகவும், அவர்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் டிவி நிகழ்ச்சியில் தோன்றி வருகிறேன் என்றார்
Friday, 24 March 2017
Sunday, 5 February 2017
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சித்து
அமிர்தசரஸ்:பஞ்சாபில் சனிக்கிழமை(நேற்று) நடந்த சட்டமன்ற தேர்தலின்போது நவ்ஜோத் சிங் சித்து வாக்குப் பதிவு மையத்தினுள் காரில் சென்றதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறினார்.
அமிர்தசரஸ் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அந்நகரிலுள்ள, மாதா ஸ்வரூப ராணி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளஓட்டுப்பதிவு மையத்தில்தஓட்டுப்போட சித்துவும், அவருடைய குடும்பத்தினரும் 3 தனித்தனி கார்களில் வந்தனர்.ஓட்டுப்பதிவு மையத்தினுள் கார்கள் நுழைந்தபோது, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தடுத்தனர்.எனினும், ஓட்படுப்பதிவு மையத்துக்குள் கார்களில் செல்ல தங்களுக்கு சிறப்பு அனுமதி உள்ளதாக சித்து தெரிவித்தார். இதையடுத்து, அவர்களுடைய கார்கள் உள்ளே நுழைந்தன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காவல்துறை துணை ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான வசந்த் கர்க் கூறியதாவது:தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மாற்றுத் திறனாளிகள் மட்டுமே அவர்களின் வாகனங்களுடன் ஓட்டுப் பதிவு மையங்களுக்குள் நுழைய முடியும்.
இந்நிலையில், சித்துவும், அவருடைய குடும்பத்தினரும் 3 கார்களில் ஓட்டுப் பதிவு மையத்தினுள் நுழைந்தனர் என்று புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள விடியோ பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.சித்துவும், அவருடைய குடும்பத்தினரும் கார்களில் நுழைவது உறுதிப்படுத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் .
English Summary:
Amritsar, Punjab, on Saturday (yesterday) Navjot Singh Sidhu during the legislative elections, the turnout election booth violated the rules of conduct of the election by going to the car.

Monday, 16 January 2017
காங்.,கில் இணைந்தார் சித்து; முடிவுக்கு வந்தது இழுபறி
புதுடில்லி : கிரிக்கெட் வீரரும், பா.ஜ., முன்னாள், எம்.பி.,யுமான நவ்ஜோத் சிங் சித்து, 53, நீண்ட இழுபறிக்கு பின், நேற்று(ஜன.,15), முறைப்படி காங்கிரசில் இணைந்தார்.
விலகல்:
கிரிக்கெட் வீரரும், பா.ஜ., முன்னாள், எம்.பி.,யுமான, நவ்ஜோத்சிங் சித்து, அந்த கட்சியிலிருந்து விலகி, பரபரப்பை ஏற்படுத்தினார். அவர், ஆம் ஆத்மியில் சேரப் போவதாக தகவல் வெளியானது. டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட, மூத்த தலைவர்கள் பலருடன், பல கட்ட பேச்சு நடத்தியும், அந்த முயற்சி நிறைவேறவில்லை.
குழப்பம்:
இதன்பின், புதிய அமைப்பை துவங்கினார்; அதுவும் போணியாகவில்லை. இதையடுத்து, சித்துவின் கவனம், காங்., பக்கம் திரும்பியது. அக்கட்சி யில் சேருவதற்கு முன்னோட்டமாக, சித்துவின் மனைவி, நவ்ஜோத் கவுர், காங்.,கில் சேர்ந்தார்; ஆனாலும், அதிகாரபூர்வமாக காங்கிரசில் சேராமல் இருந்தார், சித்து. இதனால், அவரது நிலைப்பாடு குறித்து குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில், காங்., துணைத் தலைவர், ராகுலை, நேற்று சித்து சந்தித்து, முறைப்படி காங்கிரசில் இணைந்தார்.
வருகை பலம்:
இதுகுறித்து, காங்., செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: பஞ்சாப் மாநிலத்தில், ஆளும் அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவரும், ஒன்று சேர்ந்துள்ளோம். சித்துவின் வரவால், காங்., வலிமையடைந்துள்ளது. தேசிய சிந்தனையும், மனம் திறந்து பேசும் தன்மையும் உடைய சித்து, காங்., ஆட்சி மீண்டும் மலர பணியாற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தலில் போட்டி?
பஞ்சாபில், காங்., சார்பில், மூத்த தலைவர், அமரிந்தர் சிங், முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். தற்போது, அமிர்தசரஸ் தொகுதி, எம்.பி.,யாக இருக்கும் அவர், முதல்வரானால், காலியாகும் அந்த இடத்தில் போட்டியிட, சித்து விருப்பினார். ஆனால், அதற்கான வாக்குறுதியை, காங்., அளிக்கவில்லை. பஞ்சாபில், 117 சட்டசபை தொகுதிகளில், 100 இடங்களுக்கு, காங்., ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அமிர்தசரஸ் கிழக்கு உட்பட, 17 சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எனவே, சித்து, சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
English Summary:
New Delhi : Cricketer-turned-BJP, former MP Navjot Singh Sidhu, 53, after a long tug, yesterday (Jan., 15), formally joined the Congress.