பாலாற்றில் கட்டியுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் முயற்சிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சோமபள்ளம் அருகே சின்ன எரு என்ற பாலாற்றின் துணை ஆற்றில் தடுப்பணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 8 அடியாக ஆந்திர அரசு உயர்த்தியுள்ளதாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல் 5 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் பாலாற்று நீரை நம்பியுள்ள 4.25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனம் ஆகும் என்று கூறியுள்ள ராமதாஸ் ஆந்திர அரசின் செயலை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Friday, 3 February 2017
Tuesday, 10 January 2017
பொங்கல் திருநாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: பொங்கல் திருநாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வற்புறுத்துவேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக இளைஞர் அணி தலைவரும் தருமபுரி மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்தது போலவும், நடப்பாண்டில் அது கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, விருப்ப விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டது போலவும் ஊடகங்களில் இன்று மாலை செய்திகள் வெளியாயின. அதன் அடிப்படையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து பல கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
கட்டாய தேசிய விடுமுறைப் பட்டியலில் இருந்து பொங்கல் திருநாள் நீக்கப்பட்டதைக் கண்டிப்பதாகக் கூறியுள்ள தி.மு.க., மத்திய அரசைக் கண்டித்து நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. தலைமையும் மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்திருக்கிறது. இந்த செய்திகள் தொடர்பாக எனக்குத் தெரிந்த சில உண்மைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு விபரம் தெரிந்தவரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் திருநாள் இல்லை. விருப்ப விடுமுறைப் பட்டியலில் தான் இடம்பெற்றுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 14 நாட்கள் கட்டாய தேசிய விடுமுறை நாட்களாகவும், 12 நாட்கள் விருப்ப விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்படுகின்றன. கட்டாய தேசிய விடுமுறை நாட்களில் விடுதலை நாள், குடியரசு நாள், காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் அனைத்து மத திருவிழாக்கள், முகரம் ஆகியவை தவிர தமிழகத்தில் கொண்டாடப்படும் தீப ஒளித் திருநாளும் இடம் பெற்றுள்ளது.
விருப்ப விடுமுறை நாட்களில் 10ஆவது இடத்தில் பொங்கல் திருநாள் இடம் பெற்றிருக்கிறது. இதே நடைமுறை தான் பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஆனால், தவறுதலாக யாரோ பரப்பிய தகவலை நம்பி ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், அதன் அடிப்படையில் அரசியல் கட்சிகள் கண்டனம் மற்றும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டதும் நடந்திருப்பதாக கருதுகிறேன்.
அதேநேரத்தில் தேசிய இனமான தமிழர்களின் முதன்மைத் திருநாளான பொங்கல் திருநாளுக்கு கட்டாய தேசிய விடுமுறை நாளில் இடம் பெறுவதற்கான அனைத்து சிறப்புகளும், தகுதிகளும் உள்ளன. அவற்றின் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பே பொங்கல் திருநாள் கட்டாய தேசிய விடுமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏனோ அவ்வாறு செய்யப்படவில்லை.
இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் புத்த பவுர்ணமி, குருநானக் பிறந்த நாள், மகாவீரர் ஜெயந்தி ஆகியவை கட்டாய தேசிய விடுமுறை நாட்களில் இடம் பெற்றுள்ள நிலையில், பொங்கல் திருநாளையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விரைவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தில்லியில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளேன் என்று கூறியுள்ளார்.
English Summary:
Tamil Pongal festival as at the federal list of the mandatory holiday, mandatory holiday in the current year it is removed from the list, such as those included in the list of optional holidays was reported in the media this evening. So in terms of the central government issued a statement condemning the many parties.

Friday, 6 January 2017
காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தப்ப முடியாது: ராமதாஸ்
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை இல்லாமல் செய்த பாவத்திலிருந்து காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தப்ப முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
இந்த உலகில் இனம் சார்ந்த உரிமைகளை பறிப்பதை விட மிகக் கொடிய அடக்குமுறை எதுவும் இருக்க முடியாது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதித்ததன் மூலம் அந்தக் கொடிய அடக்குமுறை தமிழ் சமுதாயத்தின் மீது மூன்றாண்டுகளாக ஏவப்பட்டு வருகிறது.
காலம் காலமாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தமிழக அரசும், அப்போது மத்தியில் புதிதாக பதவி ஏற்றிருந்த நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் தடையை நீக்கி ஜல்லிக் கட்டுப் போட்டிகளை தடையின்றி நடத்தியிருக்க முடியும். ஆனால், மாநிலத்தை ஆளும் அதிமுக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகளுமே இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக மக்களை ஏமாற்றுவதில் தான் ஆர்வம் காட்டின.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி தடை விதிக்கப்பட்ட நிலையில், அடுத்த 12 நாட்களில், அதாவது மே 19-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதன்பின் 18 மாதங்களுக்கு அம்மனு மீது விசாரணை நடத்தும்படி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தவில்லை. அதனால் 2015-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. அதன்பின் 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதிலும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் 2016-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. மீண்டும் கடந்த நவம்பர் மாதம் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவது கேள்விக்குறியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. 2014-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நாளிலிருந்தே, ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி அளித்து நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். காட்சிப்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கினால் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி பெற முடியும் என்பதால், அதற்கான சட்டத்தை 2015-ஆம் ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வர வலியுறுத்தினேன். ஆனால், மத்திய அரசு அதை செய்யவில்லை. மாறாக, ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகளை ஈடுபடுத்தலாம் என்று 07.01.2016 அன்று மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. அப்போதே அது போதாது என்று கூறினேன். அதைப்போலவே அடுத்த சில நாட்களில் மத்திய அரசின் அறிவிக்கையை உச்ச நீதிமன்றம் தடைசெய்தது; ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மீண்டும் முட்டுக்கட்டை போடப்பட்டது.
அதன்பின் ஓராண்டாகியும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வில்லை. மத்திய அமைச்சர்களும், பாரதிய ஜனதா தலைவர்களும் சென்னைக்கு வரும் போதெல்லாம் ‘அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கும்’ என்று வாக்குறுதி அளிப்பதை அனிச்சை செயலாகக் கொண்டிருக்கின்றனர். அவசரச் சட்டம் நிறைவேற்றினால் ஒழிய அதற்கு வாய்ப்பில்லை என்பதை நன்றாக உணர்ந்தும், தவறான வாக்குறுதி அளிப்பதன் மூலம் அவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை இல்லாமல் செய்த பாவத்திலிருந்து காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தப்ப முடியாது. 2007-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அப்போட்டியை தொடர்ந்து நடத்த வசதியாக 2009-ஆம் ஆண்டில் திமுக அரசு சட்டம் இயற்றியது. அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றிருந்தால் ஜல்லிக்கட்டை உச்ச நீதிமன்றம் தடை செய்திருக்கவே முடியாது. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் ஜல்லிக்கட்டுக்கு துரோகம் செய்தது திமுக அரசு.
அதுமட்டுமின்றி, திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் அத்துறையிலிருந்து மாற்றப்படுவதற்கு முதல் நாள் அதாவது 11.07.2011 அன்று காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி அறிவிக்கை வெளியிட்டார். அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுத்திருந்தால் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எந்த தடையும் ஏற்பட்டிருக்காது. ஆனால், ஜல்லிக்கட்டுக்கு எதிரான இந்த அறிவிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் திமுக வாய்மூடி மவுனியாக இருந்தது. இந்த அறிவிக்கை தான் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்க முக்கியக் காரணமாக இருந்தது. இவ்வாறு திமுகவும், காங்கிரசும் தான் ஜல்லிக்கட்டு தடைபட முக்கிய காரணமாக இருந்தன.
கடந்த காலங்களில் செய்யப்பட்ட துரோகங்கள் ஒருபுறமிருக்க, இப்போது உச்ச நீதிமன்றமும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக உள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கை குறித்த வழக்கு மட்டும் தான் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள்ளாக அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை. ஒருவேளை தீர்ப்பு வழங்கப்பட்டால் கூட, ஜல்லிக்கட்டுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்துள்ள நீதிபதிகள் அப்போட்டியை அனுமதிப்பர் என்ற நம்பிக்கை இல்லை.
காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நிரந்தரமாக நீக்கும் வகையில், 1960 ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பித்து அதன் மூலம் தான் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நீக்க முடியும். எனவே, அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
English summary:
Jallikkattu sin without competition from the Congress, DMK and PMK founder Ramadoss has said that it can not escape

Friday, 9 December 2016
கருப்பு பண ஒழிப்பல்ல இது: ராமதாஸ் கடும் கண்டனம்
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் சூறாவளி உருவாகியுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்ற மாதம் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதன் பிறகு, கருப்புப் பணம் ஒழிந்ததோ இல்லையோ, பழைய நோட்டை மாற்றுவதற்காக சென்று சுமார் 80 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அன்றாட செலவிற்கு கூட பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.இந்நிலையில், கருப்புப்பணத்தை மீட்பதற்காக ஒட்டுமொத்த ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய சூறாவளியை ஏற்படுத்தியது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏமாற்றம்தான் மிச்சம் :
இந்தியாவில் ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் பெருமளவில் கருப்புப்பணம் சிக்கும் என்றும், அதனால் ஏழை மக்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறும் என்றும் மத்திய அரசு பரப்புரை செய்து வருகிறது. இது உண்மை என பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் நம்பிய நிலையில், இதுதொடர்பாக வெளியாகும் செய்திகள் பெரும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன
கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகளால் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை கருப்புப் பணம் பிடிபடும் என்பது தான் மத்திய அரசின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், களநிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி, ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி உண்மை நிலையை உணர்த்துவதாக உள்ளது. கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளை கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்த போது, இந்திய ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பாக இருந்த ரொக்கத்தின் மதிப்பு ரூ.4,06,966 கோடி ஆகும்.
இதுதவிர அன்றாட பரிமாற்றத்திற்காக நவம்பர் 8-ஆம் தேதி வங்கிகளிடம் இருந்த தொகை ரூ.70,000 கோடி ஆகும். இதில் ரூ.500, ரூ.1000 தாள்களின் மதிப்பு மட்டும் ரூ.50,000 கோடி இருக்கலாம். ஆக மொத்தம் ரூபாய் தாள்கள் செல்லாது அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் இருந்த தொகை ரூ.4.57 லட்சம் கோடி ஆகும். அதன்பின்னர் நவம்பர் 28-ஆம் தேதி வரை வங்கிகளில் திருப்பிச் செலுத்தப்பட்ட பழைய தாள்களின் மதிப்பு ரூ. 8.44 லட்சம் கோடியாகும்.
வங்கிக்கு திரும்பிய 13.50 லட்சம் கோடி :
அதாவது நவம்பர் 28-ஆம் தேதி வரை புழக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட பழைய தாள்களின் மதிப்பு ரூ.13 லட்சம் கோடி என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு கடந்த ஒரு வாரத்தில் வங்கியில் திருப்பிச் செலுத்தப்பட்ட பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.50,000 கோடி என வைத்துக் கொண்டால் ஒட்டுமொத்தமாக திரும்பப்பெறப்பட்ட பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.13.50 லட்சம் கோடி ஆகும்
வரவேண்டிய நோட்டு எவ்வளவு :
இந்திய ரிசர்வ் வங்கியால் ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் விடப்பட்ட அதிக மதிப்பு கொண்ட ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடி என்று கடந்த 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்திருக்கிறார். அதன்படி பார்த்தால் வங்கி வளையத்திற்கு வெளியில் உள்ள பழைய தாள்களின் மதிப்பு ரூ.1.94 லட்சம் கோடி தான். இம்மாத இறுதிவரை வங்கிகளிலும், மார்ச் இறுதிவரை ரிசர்வ் வங்கியிலும் பழைய தாள்களை மாற்ற அவகாசம் இருப்பதால் மேலும் 94 ஆயிரம் கோடி பணம் திரும்பப்பெறப்படுவதற்கு வாய்ப்புள்ளது
சப்பை கட்டும் அருண் ஜெட்லி :
அதற்குப் பிறகு வெளியில் இருக்கும் பழைய தாள்களின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி மட்டுமே. இந்தியப் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது இது ஒரு பெரிய தொகையல்ல. தானாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தின் கீழ் எந்த சிரமும் இன்றி ரூ.65,000 கோடி கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதைவிட சற்று அதிக கருப்புப்பணத்தை மீட்பதற்காக ஒட்டுமொத்த ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய சூறாவளியை ஏற்படுத்தியது தேவையா? என்பதை மத்திய அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். ரூபாய் தாள் செல்லாது அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு ஏற்பட்ட வணிகம் மற்றும் உற்பத்தி இழப்புடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இது மிகவும் குறைந்த தொகையாகும். இதை மூடிமறைப்பதற்குத் தான் வங்கியில் போடப்பட்ட பணம் எல்லாம் வெள்ளையல்ல என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி சப்பைக்கட்டு கட்டி வருகிறார் என்பதை உணரமுடிகிறது.
English Summary:
Chennai: The Fed's action was invalid, 500 and 1000 rupees in the lives of the poor people that evolved PMK founder Dr. Ramadoss condemned hurricane

Tuesday, 6 December 2016
ஜெயலலிதா மறைவு.. அன்புமணியோடு வந்து டாக்டர் ராமதாஸ் நேரில் அஞ்சலி
சென்னை: மறைந்த ஜெயலலிதாவிற்கு தனது மகனும், முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாசுடன் நேரில் வந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்திய அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், உயர் அதிகாரிகள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சற்று முன்னதாக, பிரதமர் மோடி ராஜாஜி ஹாலுக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். 4 மணியளவில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்க உள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் மற்றும் விஐபியினர் ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலி செலுத்த குவிந்துள்ளனர்.
இதனிடையே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ராஜாஜி ஹாலுக்கு நேரில் வந்து மலர் வளையம் வைத்து ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மகனும் முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே. மணி ஆகியோர் உடன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னதாக, கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணிக்கு மரணம் அடைந்தார் என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்தது.

English summary :
Dr. Ramadoss pays tribute to Jayalalithaa PMK founder leader Dr. Ramadoss paid tribute to Jayalalithaa’s death.
Wednesday, 30 November 2016
சேலம் இரும்பாலை தனியார்மய விவகாரம்.. தமிழக அரசு உறங்குவதா? ராமதாஸ் காட்டம்
சென்னை: சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மிக வேகமாக எடுத்து வரும் நிலையில் அதனை தடுக்காமல் தமிழக அரசு உறங்கிக்கொண்டிருக்கிறதா என்று மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் பயன்படக்கூடிய திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் செய்யும் மத்திய அரசு தமிழகத்தின் நலன்களை பறிக்கும் திட்டங்களை மட்டும் மின்னல் வேகத்தில் செயல்படுத்தி வருகிறது. அதற்கான அண்மைக்கால உதாரணம் சேலம் இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவு ஆகும். இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
மத்திய அரசு உத்தரவு: சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக கடந்த ஜுலை 25-ம் தேதி அன்று அறிக்கை வெளியிட்ட நான்இ இந்த முயற்சியை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும்இ அரசும் இணைந்து முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனாலும்இ தமிழகத்தின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், இரும்பாலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக சேலம் இரும்பாலையின் 51மூ பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக மத்திய எஃகுத் துறை அமைச்சர் விஷ்ணுதியோ சிங் நாடாளுமன்ற மக்களவையில் திங்கள்கிழமை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்திருந்த பதிலில் கூறியிருந்தார்.
கொள்கை அடிப்படையில் ஒப்புதல்:
அதைத் தொடர்ந்து சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கைகள் வேகப் படுத்தப்பட்டிருக்கின்றன. இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்த 24 மணி நேரத்தில்இ பங்கு விற்பனை குறித்த தகவலை பங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் செபி அமைப்புக்கு மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
சேலம் இரும்பாலை மட்டுமின்றிஇ பத்ராவதி இரும்பாலைஇ துர்காப்பூர் இரும்பாலை ஆகியவற்றின் பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றன. பங்குகளை வாங்கும் நிறுவனம் 2 கட்ட ஏலத்தின் மூலம் தீர்மானிக்கப்படவிருப்பதாக செபி அமைப்பிடம் மத்திய அரசின் சார்பில் இந்திய எஃகு நிறுவனம் (ஷிகிமிலி) அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திசம்பர் மாதம் தொடங்கி அடுத்த சில வாரங்களில் இரு கட்ட ஏலங்களும் நடத்தி முடிக்கப்பட்டுஇ சேலம் இரும்பாலை உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகம் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.
பங்கு விற்பனை:
தொழிலாளர்களும் இம்முடிவுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால்இ இந்த எதிர்ப்புகளையெல்லாம் மதிக்காமல் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது என்றால்இ அதற்குக் காரணம் இந்த விஷயத்தில் தமிழக அரசு அதன் எதிர்ப்பை வெளிப்படுத்த தவறியது தான்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 8-தேதி அன்று நடைபெற்ற தொழில் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தமிழகத்தில் செயல்பட்டு வரும் எந்த பொதுத்துறை நிறுவனத்தையும் தனியார் மயமாக்க முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்க மாட்டார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5மூ பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்த போதுஇ அவற்றை ரூ.358.20 கோடிக்கு தமிழக அரசே வாங்கி அவை தனியாரின் கைகளுக்கு செல்வதைத் தடுத்தது. நடவடிக்கைகள் தீவிரம்: அதேபோல், சேலம் இரும்பாலை நிர்வாகமும் தனியாரின் கைகளுக்கு செல்வதை ஜெயலலிதா தடுத்து நிறுத்துவார்'' என்று கூறினார். ஆனால், அதற்காக தமிழக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடாததன் விளைவாகத் தான் சேலம் இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான சேலம் இரும்பாலையை காப்பாற்றும் விஷயத்தில் தமிழக அரசு காட்டும் அக்கறை என்பது இவ்வளவு தான். சேலம் இரும்பாலை நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்யவே தனியாருக்கு வழங்குவதாகவும் மத்திய அரசு கூறுவது தவறாகும். இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால்இ தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காகவே சேலம் இரும்பாலை நஷ்டமாக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது. தற்போது சூப்பர் இரும்பாலையாக இருக்கும் சேலம் ஆலையை ஒருங்கிணைந்த ஆலையாக நவீனப்படுத்த வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக அதன் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதை செய்யாதது தான் சேலம் ஆலை நஷ்டத்தில் இயங்க காரணமாகும். சர்ஜிக்கல் தாக்குதலுக்குப் பிறகு 20 முறை அத்துமீறிய பாகிஸ்தான்: 24 வீரர்கள் பலியான சோகம்! ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.. போராட்ட களத்தை பீகாருக்கு மாற்றிய மம்தா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! Featured Posts தனியார் மயமாக்கும் முயற்சி கைவிடுக: சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சி அரசுக்கோ, தொழில்துறை வளச்சிக்கோ எந்த வகையிலும் உதவாது. சேலம் பகுதியிலுள்ள தாது வளங்களை தனியார் ஆலைகள் போட்டியின்றி கொள்ளை அடிப்பதற்கே உதவும். மேலும்இ சேலம் ஆலையில் பணியாற்றும் 2000 தொழிலாளர்களையும் இந்த நடவடிக்கை பாதிக்கும். எனவே, சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தைக் கைவிட்டுஇ ஆலையை நவீனமயமாக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் அமைச்சர்கள் குழுவும் தில்லி சென்று பிரதமரை சந்தித்து சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடும்படி வலியுறுத்த வேண்டும். இதற்கு பிறகும் தனியார் மயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் அதற்கு எதிராக சேலம் பகுதியுள்ள மக்களையும், இரும்பாலை தொழிலாளர்களையும் திரட்டி மிகப்பெரிய அறவழிப் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
English summary:
Chennai: Salem steel plant privatization issue is TN govt sleeping? PMK founder Ramadoss question in a statement issued today

Tuesday, 29 November 2016
சம்பளம் போடப்போகிறார்கள்.. ஏ.டி.எம்.களில் பணத்தை ரெடியாக வையுங்கள்: ராமதாஸ்
சென்னை: மாத இறுதியில் அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் ஊதியம் பெறவுள்ள நிலையில் அனைத்து ஏடிஎம்களிலும் தாராளமாக பணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் ஊதியத்தில் இயன்ற அளவு தொகையை ரொக்கமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பணப் புழக்கம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களின் இந்த பாதிப்பும், அவதியும் அடுத்து வரும் நாட்களில் உச்சக்கட்டத்தை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று கடந்த 8- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அன்றிரவு முதலே இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்ததால் பணப்புழக்கம் அடியோடு நின்று போனது. இதனால் பொது மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் தடுமாறி வந்தனர்.
கடந்த 8- ஆம் தேதி முதல் வங்கிக் கிளைகளில் வாரத்திற்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரமும், ஏ.டி.எம்.களில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 14- ஆம் தேதி முதல் இந்த உச்சவரம்பு முறையே ரூ.24000 ரூ.2500 என அதிகரிக்கப்பட்டது. ஆனால் வங்கிகளிலும் ஏ.டி.எம்.களிலும் போதிய பணம் இல்லாததால் இந்த அளவு பணத்தை மக்களால் எடுக்க முடியவில்லை.
ரூ.500 ரூ.1000 தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதல் இன்று வரையிலான காலத்திற்கும் இனி வரும் காலத்திற்கும் இடையில் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.
இம்மாதம் 8-ஆம் தேதி தான் ரூபாய் தாள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே அம்மாதத்திற்கான ஊதியத்தைப் பெற்று வீட்டு வாடகை செலுத்துதல், வீட்டுக்குத் தேவையான மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குதல் போன்ற பணிகளை முடித்து விட்டனர். இவற்றை செய்வதற்கு தேவையான பணம் அவர்களிடம் போதிய அளவில் இருந்தது.
ஆனால், இப்போது அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாத ஊதியதாரர்களிடம் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லை. ஒன்றாம் தேதி பிறந்தவுடன் மாத வாடகை, பள்ளிக் கட்டணம், தனிப்பயிற்சி கட்டணம், போக்குவரத்துச் செலவு, மளிகைச் செலவு என ஏராளமான செலவுகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன. அதற்கான பணத்தை அவர்கள் மாத ஊதியத்திலிருந்து தான் எடுத்தாக வேண்டும்.
அமைப்பு சார்ந்த பணிகளில் உள்ளவர்களில் 75 விழுக்காட்டினரின் ஊதியம் வங்கிகளில் வரவு வைக்கப்படும் நிலையில், அவர்களால் வழக்கம் போல பணம் எடுக்க முடியுமா? என்பது தான் பெரிய கேள்விக்குறியாகும். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையையும் இந்திய ரிசர்வ் வங்கி நிராகரித்து விட்டது.
இத்தகைய சூழலில் தமிழகத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தனியார் நிறுவனப் பணியாளர்கள் என குறைந்து ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடிப் பேர் வரை தங்களின் அத்தியாவசியச் செலவுகளுக்கு பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் குவியும் நிலை அடுத்த இரண்டு நாட்களில் ஏற்படப் போவது உறுதி ஆகும்.
வங்கிகளில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு நீக்கப்பட்டிருப்பதாகவும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இன்னும் அதிக பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ஆனால், அதன் உத்தரவு தெளிவாக இல்லை.
அதுமட்டுமின்றி, வாரத்துக்கு ரூ.24000 வரை பணம் எடுக்கலாம் என்று உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த காலத்திலேயே அதை வழங்க வங்கிகளில் போதிய பணம் இல்லை.
வாடிக்கையாளர்களுக்கு சராசரியாக ரூ.4000 மட்டுமே வழங்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு எழுதியக் கடிதத்தில் வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்திருந்தது.
வங்கிகளுக்கு கூடுதல் பணம் வழங்கப்படாத நிலையில், ஒன்றாம் தேதி முதல் அதிகரிக்கவுள்ள வாடிக்கையாளர்களின் பணத் தேவையை வங்கிகள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றன? என்ற வினாவுக்கு விடையில்லை.
வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பணம் இல்லாததால் தமிழகத்தின் பல இடங்களிலும் சாலை மறியல், வங்கி அதிகாரிகளுடன் மோதல், ஏ.டி.எம். எந்திரங்கள் மீது தாக்குதல் என வன்முறைகள் நடந்துள்ளன. ஒன்றாம் தேதிக்கு பிறகும் பணப் பஞ்சம் நீடித்தால் இந்த வன்முறைகள் அதிகரித்து சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்களில் ஒன்றாம் தேதி முதல் தாராளமாக பணம் வழங்கப்படுவதை இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய- மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும்.
அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊதியத்தில் ரூ.3000 ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், பணம் வசூலிக்கும் மத்திய- மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் ஊதியத்தில் இயன்ற அளவு தொகையை ரொக்கமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
English summary:
chennai: ATM must ensure the availability of generous amounts PMK founder Ramadoss demanded in a statement issued today.

மெட்ரோ ரயில் பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் பாதகம்தான் அதிகம்.. ராமதாஸ் கண்டனம்
சென்னை: மெட்ரோ ரயில் பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதால் பாதகம்தான் அதிகம் என்றும், இதனால் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் அரசின் இந்த முடிவை கைவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
சென்னை பெருநகரத் தொடர்வண்டிகளை இயக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்காக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருக்கிறது. அரசின் இந்த முடிவிற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொடரும் பணிகள்:
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் பெருநகரத் தொடர்வண்டித் திட்டம் உருவாக்கப்பட்டு படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை 23.085 கி.மீ. நீளத்திற்கு ஒரு பாதை, சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து அண்ணாநகர், கோயம்பேடு வழியாக ஆலந்தூர் வரை 21.96 கி.மீ நீளத்திற்கு ஒரு பாதை என மொத்தம் 43.40 கி.மீ. நீளத்திற்கு இரு பாதைகளில் தொடர்வண்டிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் ஆகிய இரு வழித்தடங்களில் 19 கி.மீ. நீளத்திற்கு தொடர்வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் மொத்தமுள்ள 43.40 கி.மீ நீள பாதையிலும் தொடர்வண்டிகள் இயக்கப்படும் என்று அறிவித்து, அதற்கான பணிகளை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
தனியாரிடம் ஒப்படைக்கத் துடிப்பது ஏன்?
பெருநகர தொடர்வண்டிகள் முதல் தொடர்வண்டி நிலையங்கள் வரை அனைத்தும் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பணிகள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கத் துடிப்பது தேவையற்றது. பெருநகரத் தொடர்வண்டிகளை இயக்குவதற்கான செலவுகளை குறைக்கும் நோக்குடன் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், அது சாத்தியமல்ல. சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனத்தில் இப்போது அனைத்து நிலைகளிலும் சுமார் 3000 பேர் பணியாற்றுகின்றனர். பெருநகரத் தொடர்வண்டித் திட்டத்தின் முதல் கட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, இந்த எண்ணிக்கை 5000 ஆக உயரக்கூடும்.
தரம் கெடும் அபாயம்:
இவர்களில் சில நூறு பேர்களைத் தவிர, மீதமுள்ள அனைவரும் ஒப்பந்தப் பணியாளர்கள் தான். இவர்களுக்கு குறைந்த அளவில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது; ஊதியம் தவிர வேறு பயன்கள் எதுவும் இவர்களுக்கு தரப்படுவதில்லை. இவர்களுக்கு வழங்கப்படுவதை விட குறைவான ஊதியத்தில் யாரையும் பணியமர்த்த முடியாது என்ற நிலையில், இயக்கப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதால் இயக்கச் செலவுகள் எந்த வகையிலும் குறையாது. அதேநேரத்தில் இயக்கப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் வேறு விதமான பாதிப்புகள் தான் ஏற்படும்.
பணியாளர்கள் வேலை பறிபோகும்:
இயக்கப்பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் அதன் லாபத்தை அதிகரிப்பதற்காக மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையை 40 முதல் 50% என்ற அளவில் குறைக்கும். இதனால் தொடர்வண்டிகள் பராமரிப்பு, தொடர்வண்டிகள் இயக்கம், தொடர்வண்டி நிலையப் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்திலும் தரம் குறையும். இதற்கெல்லாம் மேலாக, இயக்கப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் புதிய பணியாளர்களை அடிமாட்டு ஊதியத்தில் தான் தேர்வு செய்யும் என்பதால், சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 5000 பணியாளர்கள் வேலை இழக்க வேண்டியிருக்கும்.
கேள்விக் குறியாகும் பாதுகாப்பு:
பெருநகரத் தொடர்வண்டி சேவைகளைப் பொறுத்தவரை பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாகும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்குகளில் விமான நிலையங்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பது பெருநகர தொடர்வண்டிகள் ஆகும். அதனால் இந்த தொடர்வண்டிகள் மிகவும் பாதுகாப்பான சூழலில் இயக்கப்பட வேண்டும். தெற்கு தொடர்வண்டி நிர்வாகத்தில் நேரடி கட்டுப்பாட்டில் இயக்கப்படும் சென்னை புறநகர் தொடர்வண்டியை கடந்த 29.04.2009 அன்று சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து கடத்திச் சென்ற பயங்கரவாதி ஒருவன் வியாசர்பாடி தொடர்வண்டி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்குத் தொடர்வண்டி மீது மோதி விபத்துக்கு உள்ளாக்கினான். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் மிகப்பெரிய அளவில் சேதமும் ஏற்பட்டது.
தரமற்ற சேவைக்கு வாய்ப்பு:
அரசு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், இயக்கப்பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் இதைவிட மோசமான தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பெருநகரத் தொடர்வண்டிகள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. அங்கு சேவை மிகவும் மோசமாக உள்ளது. மாறாக, அரசு நிறுவனங்களால் இயக்கப்படும் தில்லி மற்றும் கொல்கத்தா பெருநகர தொடர்வண்டி சேவைகள் மிகவும் சிறப்பாகவும், பயணிகளுக்கு வசதியாகவும், கட்டணம் குறைவாகவும் இருப்பதை சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் நினைவில் கொள்ள வேண்டும்.
செலவு எப்படி குறையும்:
சென்னை பெருநகர தொடர்வண்டி சேவை தொடங்குவதற்கு முன்பே அதை தனியாரிடம் ஒப்படைக்க 2012-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. வியோலியா டிரான்ஸ்போர்ட், கியோலிஸ், செர்க்கோ ஆகிய 3 பன்னாட்டு நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தங்களைப் பெற போட்டியிட்டன. ஆனால், இயக்கப்பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் செலவு அதிகரிக்கும் என்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அவ்வாறு இருக்கும் போது இப்போது மட்டும் இயக்கப்பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் இயக்கச் செலவு குறையும் என சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் கூறுவது மிகவும் விந்தையாக உள்ளது.
பாதகமே அதிகம்:
சென்னை பெருநகர தொடர்வண்டிகளின் இயக்கப்பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் என்பதால் அந்த முடிவை கைவிட வேண்டும். பெருநகர தொடர்வண்டி சேவையை விரிவுபடுத்துவதன் மூலம் வருவாயை அதிகரிக்கவும், தொழிலாளர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்கவும் பெருநகர தொடர்வண்டி நிறுவனம் முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
English summary:
PMK leader Dr. Ramadoss condemned Metro rail privatization plan.

Monday, 28 November 2016
டெக்னிகலாக கலக்கும் பாமக... உறுப்பினர்களை சேர்க்க புது ஆப்
சென்னை: மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று கூறி சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கினார் அன்புமணி ராமதாஸ். என்னதால் விதமாக மேடையில் பேசினாலும் மக்களின் ஆதரவு என்னவோ அதிமுக, திமுகவிற்குத்தான் கிடைத்தது.
லோக்சபா எம்.பியாக உள்ள அன்புமணியின் லட்சியம் எல்லாம் 2021 சட்டசபை தேர்தலை நோக்கி குவிந்துள்ளது. இன்று 5 ஆண்டுகளுக்கு கட்சியை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று முக்கிய நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசித்ததன் விளைவுதான் புது ஆப். இளைய தலைமுறையினரை கவரும் வகையில் செல்போன் மூலம் கட்சியை வளர்க்க பாடு படுகின்றனர் பாமகவினர்.
முதன்முறையாக பா.ம.க.வின் உறுப்பினர் புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்த்தல் உள்ளிட்ட செயல்களை தொடுதிரை செயலி மூலம் பதிவு செய்யும் முறையை தைலாப்புர தோட்டத்தில் தொடங்கி வைத்தார் டாக்டர் ராமதாஸ். மேலும் ராமதாசும் அவரது மனைவி சரஸ்வதியும் தங்கள் உறுப்பினர் அட்டையை புதிய செயலி வழியாக கைப்பேசி மூலம் புதுப்பித்தனர். கட்சியின் செயல்பாடுகளை தொழில்நுட்ப ரீதியாக முன்னெடுக்க துவங்கியிருக்கிறது பா.ம.க.!
English summary:
PMK has introduced a new mobile App to add new members into the party and Dr Ramadoss and his wife used the App first and renewed their membership.

Sunday, 27 November 2016
தேவைக்கு அதிகமாக பணம் வருவதால் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க கூடாது: ராமதாஸ்
சென்னை: வங்கிகளில் தேவைக்கும் அதிகமாகவே பணம் இருப்பதால், வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு அறிவித்த கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் எதிர்மறைத் தாக்கம் அனைத்துத் தளங்களிலும் வெளிப்படையாக தென்படத் தொடங்கியிருக்கிறது. வாழ்க்கையின் கடைசி காலத்தை கண்ணியமாக கழிக்க வேண்டும் என நினைக்கும் மூத்த குடிமக்களையும் இம்முடிவு பாதித்திருக்கிறது.
கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்றும், இந்த தாள்களை வைத்திருப்பவர்கள் வங்கிக் கணக்குகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்தலாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடமுள்ள மதிப்பிழந்த ரூ.500, ரூ.1000 தாள்களை வங்கிக் கணக்கில் செலுத்தத் தொடங்கியிருப்பதால் வங்கிகளின் பண இருப்பு அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் வரை வங்கிகளில் ரூ.6 லட்சம் கோடி பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டும் இந்த வகையில் ரூ.1.50 லட்சம் கோடி கிடைத்திருக்கிறது.
வங்கிகளில் தேவைக்கும் அதிகமாகவே பணம் இருப்பதால், வைப்பீடுகளை தவிர்க்கும் வகையில் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கி ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான வைப்பீடுகள் மீதான வட்டியை 1.90% வரை குறைத்துள்ளது. இதனால் இதுவரை இல்லாத வகையில் ஓராண்டு வரையிலான வைப்பீடு மீதான வட்டி 4 விழுக்காடாகவும், ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரையிலான வட்டி 4.25 விழுக்காடு ஆகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக வைப்பீடுகளை கோடீஸ்வரர்களும், பெரு நிறுவனங்களும் தான் செய்வார்கள் என்பதால் இந்த முடிவு பொதுமக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.
ஆனால், சாதாரண மக்கள் செய்யும் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பீடுகள் மீதான வட்டி விகிதத்தையும் 0.10 விழுக்காடு முதல் 0.25 விழுக்காடு வரை வங்கிகள் குறைத்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹெச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை கடந்த சில நாட்களில் இந்த வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளன. அதுமட்டுமின்றி, அடுத்த சில வாரங்களில் சாதாரண வைப்பீடுகள் மீதான வட்டி 1% வரை குறைக்கப்படவிருக்கிறது. வங்கிகள் மட்டுமின்றி, இந்திய ரிசர்வ் வங்கியும் அடுத்த மாதத்தில் கடன் கொள்கையை அறிவிக்கும் போது வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டிக்குறைப்பு தொடர்பான வங்கிகளின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டால் பொதுமக்களின் வைப்பீடுகளுக்கு வங்கிகள் வழங்கும் அதிகபட்ச வட்டி விகிதம் 5% என்ற அளவுக்கு சுருங்கி விடும். இதனால் பொதுமக்கள், குறிப்பாக தங்களிடமுள்ள பணத்தை வங்கியில் வைப்பீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையை வாழ்வாதாரமாக வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வங்கிகளைத் தொடர்ந்து மத்திய அரசு செயல்படுத்தி வரும் சேமிப்புத் திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி, கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் மீதான வட்டியும் பெருமளவில் குறைக்கப்படும் வாய்ப்புள்ளது.
வங்கிகளின் இன்றைய நிலையை கணக்கில் கொண்டு பார்க்கும்போது இப்படி செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில் வணிக வங்கிகளில் கடந்த இரு வாரங்களில் மட்டும் ரூ. 6 லட்சம் கோடி குவிந்திருக்கிறது. இதுதவிர ஒவ்வொரு வங்கிகளிலும் ஏற்கனவே இருப்பில் உள்ள தொகை சில லட்சம் கோடிகளாவது இருக்கும். அடுத்த சில மாதங்களுக்கு புதிதாக வழங்கப்படும் கடன்களின் அளவு மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு செயல்படாமல் கிடக்கும் வைப்பீடுகளுக்கும் வட்டி வழங்குவது சாத்தியமற்றதாகும்.
தவிரவும் வைப்பீடு மீதான வட்டி குறைக்கப்படும் போது, வங்கிகள் வழங்கும் கடன்கள் மீதான வட்டி ஓரளவாவது குறையும் என்பதால், அது தொழில் வளர்ச்சிக்கும், வீடு வாங்க நினைப்போருக்கும் உதவியாக இருக்கும். ஆனாலும், இவை அனைத்தையும் தாண்டி வங்கி வைப்பீடுகளில் இருந்து கிடைக்கும் வட்டியை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் ஆதரவற்றோர், மூத்த குடிமக்கள், ஏழைகள் ஆகியோரின் நிலையை அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்களிலோ அல்லது ஓய்வூதியம் இல்லாத பிற துறைகளிலோ பணியாற்றி ஓய்வு பெற்ற பல மூத்த இணையர்கள் தங்களிடமுள்ள வாழ்நாள் சேமிப்பான ரூ.10 லட்சத்தை வங்கியில் வைப்பீடு செய்திருப்பதாகக் கொள்வோம்.
ஆண்டுக்கு 8% வட்டி என்ற வகையில், அவர்களுக்கு மாதம் ரூ.6666 வட்டி கிடைக்கும். ஆனால், இந்த வட்டி விகிதம் 5% ஆக குறைக்கப்பட்டால் ரூ. 4166 ஆக குறைந்து விடும். முதிர்ந்த வயதில் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக அதிக செலவாகும் சூழலில் இந்த தொகை நிச்சயமாக போதுமானதல்ல. இருவருக்கே இந்த நிலை என்றால் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அந்தக் குடும்பங்களின் நிலை என்னவாகும் என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எனவே, ஓய்வூதியமற்ற மூத்த குடிமக்கள், ஏழைக்குடும்பங்கள் உள்ளிட்டோரை சிறப்புப் பிரிவினராக அறிவித்து, அவர்களின் வைப்பீடுகளுக்கு மட்டும் இப்போதுள்ள வட்டி விகிதமே தொடருவதை உறுதி செய்ய வேண்டும். அதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English summary:
PMK founder Ramadoss has said, Banks Should not reduce the interest rate

Saturday, 26 November 2016
பொதுவுடமைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் பிடல் காஸ்ட்ரோ... ராமதாஸ் புகழாரம்
சென்னை: கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மருத்துவர் ராமதாஸ் பொதுவுடமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பிடல் காஸ்ட்ரோ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; "கியூபா நாட்டின் பிரதமராகவும், அதிபராகவும் பணியாற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.
புரட்சித் தலைவர், மார்க்சீய, லெனினியவாதி என்ற வார்த்தைகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் காஸ்ட்ரோ. கியூபா நாட்டில் பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும், அவர் ஒருபோதும் பணக்காரராக வாழவில்லை; பணக்காரர்களுக்காகவும் வாழவில்லை. மாறாக பாட்டாளி மக்களுக்காக பாட்டாளியாகவே வாழ்ந்தவர்.
கியூபாவில் கொடுங்கோலர் பாடிஸ்டாவுக்கு எதிராக 8 ஆண்டுகளாக உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் போராடிய காஸ்ட்ரோ, அம்முயற்சியில் சில தோல்விகளை சந்தித்தபோதும் பின்வாங்கவில்லை. தமது சகோதரர் ரால் காஸ்ட்ரோ, சே குவேரா ஆகியோருடன் இணைந்து 1959 ஆம் ஆண்டில் பாடிஸ்டா சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி தமது ஆட்சியை அமைத்தார்.
கியூபாவின் பிரதமராகவும், அதிபராகவும் 1959 முதல் 50 ஆண்டுகளுக்கும், 1961 முதல் 50 ஆண்டுகளுக்கு கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் ஃபிடல் காஸ்ட்ரோ பணியாற்றிய காலத்தில் தான் கியூபா அதிவேக வளர்ச்சியை அடைந்தது. மருத்துவம், கல்வி மற்றும் விவசாயத்தில் கியூபா அடைந்த வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.
காஸ்ட்ரோவின் முயற்சியால் கியூபா அதிவேக வளர்ச்சி அடைவதை பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா, அவருக்கு எதிராக கொலை முயற்சி, பொருளாதாரத் தடை, போலிப் புரட்சிகள், கூலி ராணுவப்படைகளை ஏவுதல் என ஏற்றுக் கொள்ள முடியாத அனைத்து முயற்சிகளையும் செய்தது. ஆனால், அனைத்தையும் முறியடித்தவர் காஸ்ட்ரோ. கியூபாவில் ஒற்றை ஆட்சி முறையை அறிமுகம் செய்ததற்காக காஸ்ட்ரோவை சர்வாதிகாரி என்று சிலர் விமர்சித்தாலும் அவர் எப்போதுமே மக்களின் குரல்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்தவர். இல்லாவிட்டால் இறப்புக்கு பிறகும் மக்களால் போற்றப்படும் தலைவராக திகழ்ந்திருக்க முடியாது.
பொதுவுடமைவாதத்திற்கு இலக்கணமாக திகழ்ந்த காஸ்ட்ரோவின் மறைவு பொதுவுடைமைவாதிகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். பல்வேறு வழிகளிலும் முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்த காஸ்ட்ரோவுக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் கியூபா மக்களுக்கும் பொதுவுடைமைவாதிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
English summary:
Chennai: Fidel Castro is an example to socialism PMK founder ramadoss say in a condolence statement issued today