ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் பலியான மீனவர் உடலை வாங்க மறுத்து தேவாலயம் முன் மீனவ அமைப்புகள் தர்ணா மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்த தங்கச்சிமடத்தில் மீனவர் அமைப்புகள் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து எஸ்.பி., தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மீனவர் பிரதிநிதிகள் கூறுகையில், வெளியுறவு அமைச்சர் நேரில் வந்து உடலை வாங்கும் வரையில் மீனவர் உடலை வாங்க மாட்டோம். தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டக்காரர்களுடன், கலெக்டர் நடராஜன், ஆர் ராம் பிரதீபன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். சுட்டுக்கொன்றவர்களை கைது செய்ய வேண்டும். நிவாரணம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து பேச்சு நடக்கிறது.
English summary:
Rameswaram: Sri Lankan navy shot dead fisherman fishing systems of the body refused to sit in front of the church and went on hunger strike.