தமிழகத்தில், நெடுவாசலில் தற்போது பிரச்னையை ஏற்படுத்தியுள்ள ஆய்வுப் பணிகளைப் போல், நாட்டில் மேலும், 29 இடங்களில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த, 2015ல், சிறிய அளவிலான நிலப் பகுதிகளில் மீத்தேன், பெட்ரோல் உள்ளிட்ட, 'ஹைட்ரோ கார்பன்' கனிமங்களின் ஆய்வுப் பணிகளுக்கு ஊக்கமளிக்க, தனி கொள்கை வகுக்கப்பட்டது. அதன்படி, அந்த பணிகளை பெறும் ஒப்பந்ததார நிறுவனங்களுக்கு, பல்வேறு சலுகை வழங்கப்படுகிறது. அப்பணிகளுக்காக, மத்திய அரசு, கடந்த ஆண்டில், 'டெண்டர்' கோரியது. அதில், 31 இடங்களில் பணிகளை மேற்கொள்ள, 22 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், காரைக்கால் மற்றும் நெடுவாசல் ஆகிய இரு இடங்கள்; அசாம் - 9; ஆந்திரா - 4; ராஜஸ்தான் - 2; மத்திய பிரதேசம் - 1; மும்பை கடல் பகுதி - 6 மற்றும் குஜராத் கட்ச் கடற்பகுதியில், 2 இடங்களில் இந்த ஆய்வு துவங்கப்பட்டுள்ளது.
English summary:
In Tamil Nadu, where there are problems neduvasal research projects currently going on in the country, and has given permission for 29 locations.