Wednesday, 22 March 2017
Thursday, 16 February 2017
'எடப்பாடி' கார் டிரைவரின் தந்தை தற்கொலை ஏன்?
சேலம் : அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் டிரைவரின் தந்தை தற்கொலை வழக்கை வேறு திசையில் எடுத்துச் செல்வதாக போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்கொலை:
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே, கோவில்பத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம், 61. இவரது மகன் மகாராஜன், 27. இவரை, சேலம், சூரமங்கலம் போலீசார், திருட்டு வழக்கில் தேடினர். இது தொடர்பாக, தனிப்படை போலீசார், சொக்கலிங்கத்திடம் விசாரித்தனர். இதனால், மனமுடைந்த சொக்கலிங்கம், விஷம் குடித்தார்; பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் இறந்தார்.
திசை திருப்ப முயற்சி:
மகாராஜன், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், கார் டிரைவராக பணியாற்றுபவர் என்பதால், போலீஸ் அதிகாரிகள் உத்தரவுப்படி, உண்மை சம்பவம் மறைக்கப்பட்டு, வழக்கை வேறு திசையில் எடுத்துச் செல்வதாக போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறியதாவது: ஈரோடு ரயில்வே கான்ட்ராக்டர் ராஜ்குமார், சென்னையில், 10 இடங்களில் பாலம் கட்டும் பணி மேற்கொள்கிறார். அவரிடம், கார் டிரைவராக, மகாராஜன் பணிபுரிந்தார். பிப்., 5ல், தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க, 94 லட்சம் ரூபாயுடன், காரில் ராஜ்குமார், சென்னை சென்றார். சேலம் வழியாக சென்றபோது, அவருக்கு, நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, ஐஸ்வர்யம் மருத்துவமனையில், ராஜ்குமாரை மகாராஜன் அனுமதித்தார். பின், மகாராஜன், காரில் இருந்த பணத்துடன் மாயமானார். இவ்வாறு அவர் கூறினார்.
நடந்தது என்ன?
எடப்பாடி பழனிச்சாமியிடம், கார் டிரைவராக பணியாற்றுபவர் தான் மகாராஜன். தற்போதைய அரசியல் சூழலில், இப்பிரச்னை வெளியே தெரிந்தால், சிக்கல் ஏற்படும் எனக் கருதி, வழக்கை மாற்ற, போலீஸ் அதிகாரிகளுக்கு, அமைச்சர் தரப்பில் உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அமைச்சருக்கு விசுவாசமான, ஈரோட்டை சேர்ந்த கான்ட்ராக்டர் ராஜ்குமாரை தொடர்புபடுத்தி, சம்பவத்தை வேறு திசையில் போலீசார் எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
English summary:
Salem: Minister Edappadi Palanichany driver of the car in the other direction to take the case to the suicide of the father of the accused at the police

Monday, 23 January 2017
சென்னையை தொடர்ந்து சேலம், திருச்சியிலும் போலீசார் இளைஞர்கள் மீது தடியடி
சென்னை: போராட்டக்காரர்களை வலுகட்டாயமாக போலீசார் வெளியேற்றி வருகின்றனர். போராட்டக் குழுவினர் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீசுடன் இளைஞர்கள் தள்ளுமுள்ளு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை வலுகட்டாயமாக அகற்றி வரும் போலீசுடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல மறுத்து கடலை நோக்கி இளைஞர்கள் நகர்கின்றனர். மெரினா கடற்கரையில் இருந்து வெளியேற இளைஞர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மெரினா கடற்கரையை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. இளைஞர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்படுவதால் மெரினாவில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையில் காணப்படுகிறது. மெரினா கடற்கரையை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. இளைஞர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்படுவதால் மெரினாவில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையில் காணப்படுகிறது. தங்களை கட்டாயமாக வெளியேற்றி வருவதாக இளைஞர்கள் கதறி வருகின்றனர். போலீசார் தங்களை தாக்குவதாக இளைஞர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இளைஞர்கள் கடலில் இறங்கி தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். போராட்டத்தை கைவிட மறுத்து கடலில் இறங்கி போராடுவதால் மெரினாவில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
சென்னையை தொடர்ந்து கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்தியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். கோவையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர். இளைஞர்களை குண்டுக்கட்டாயத் தூக்கி வெளியேற்றி வருகின்றனர் போலீசார். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயக்கம் அடைந்துள்ளனர்.
கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இளைஞர்களை கைது செய்து வேனில் போலீசார் ஏற்றினர். முழக்கமிட்டவாறு போலீஸ் வேனில் ஏறுகின்றனர் இளைஞர்கள்.
திருச்சியில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை கைவிட மறுத்து இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
English summary:
Chennai: Police Forcibly evict the protesters said. The action was taken following the defeat of the team negotiating with the protesters. Disperse young people are engaged in a struggle with police. Forcibly removing the protestors who have been involved in an altercation with police and young people. Young people moving toward the sea gave up and refused to disperse. Marina beach, young people have refused to leave

சேலம்; 5 நாட்களாக சிறை பிடிக்கப்பட்ட ரயில் மீட்பு
சேலம்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சேலத்தில் 5 நாட்களாக சிறை பிடிக்கப்பட்ட ரயில் போலீசாரால் மீட்கப்பட்டது.
சேலம்: பெங்களூரு, காரைக்கால் பயணிகள் ரயில் 19 ம் தேதி இன்று காலை மாநகர மற்றும் ரயில்வே போலீசாரும் ரயில் பின்பக்கம் மூலம் ரயில் எடுத்து செல்லப்பட்டது.
English summary:
Salem: Salem Jallikattu support 5 days trapped in the train was recovered by police.
Salem: Bangalore, Karaikal Municipal passenger train on the 19th this morning and taken to the train by railway police at the rear of the train.

Wednesday, 18 January 2017
தடையை மீறி தொடரும் ஜல்லிக்கட்டு
சேலம்: சேலத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து, தடியடி நடத்திய போலீசார் மீது மக்கள் கற்களை வீசி தாக்கினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமங்கலத்தில் ஆண்டாண்டு காலம் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் வெங்கடேசன் என்பவர் காயமடைந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் தடையை மீறி மஞ்சு விரட்டு நடந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
English Summary:
Salem: Salem jallikattu was conducted in violation of the ban. Followed by batons, throwing stones at police and attacked people.

Tuesday, 17 January 2017
தடையை மீறி தொடரும் ஜல்லிக்கட்டு
சேலம்: சேலத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து, தடியடி நடத்திய போலீசார் மீது மக்கள் கற்களை வீசி தாக்கினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமங்கலத்தில் ஆண்டாண்டு காலம் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் வெங்கடேசன் என்பவர் காயமடைந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் தடையை மீறி மஞ்சு விரட்டு நடந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
English Summary:
Salem: Salem jallikattu was conducted in violation of the ban. Followed by batons, throwing stones at police and attacked people

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கைதுக்கு வலுக்கும் எதிர்ப்பு
அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேலம், சென்னை, பகுதிகளிலும் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 21 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்து, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்கள், வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்தியவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்று சேர்ந்தவர்கள்.
மறியல்:
இந்நிலையில், போராட்டகாரர்கள் கைது செய்யப்பட்டதற்கு அலங்காநல்லூர் மற்றும் வாடிப்பட்டி பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் பேரணியாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாடிப்பட்டி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலங்காநல்லூரில் உள்ள கேட்கடை பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க., எம்.எல்.ஏ., மூர்த்தி மற்றொரு எம்.எல்.ஏ., மாணிக்கம் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக மாணிக்கம் மீது போராட்டக்காரர்கள் பாட்டீலை வீசினர்.
தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவாக இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சில அரசியல் கட்சியினர் வருவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தோல்வி:
போராட்டம் நடத்தியவர்களுடன் மாவட்ட எஸ்.பி., விஜயேந்திர பிதரி பேச்சுவார்த்தை நடத்தினர். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுதலை செய்யப்படுவார். அமைதியான போராட்டத்திற்கு போலீசார் ஒத்துழைப்பு அளித்து வருகிறது எனக்கூறினார். இருப்பினும் பொது மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதானவர்களில் 32 பேரை விடுதலை செய்ய எஸ்.பி., ஒப்புக்கொண்டார். இருப்பினும் போராட்டம்நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக மதுரை மாவட்டத்தின் பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடந்து வருகிறது.
சென்னையில் எதிர்ப்பு:
இதேபோல், போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தியும் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடந்தது. இதில், ஆயிரகணக்கான இளைஞர்கள் பேஸ்புக் மூலம் ஒன்று சேர்ந்தவர்கள் ஆவார்கள். தமிழக கலாசாரத்தை அழிக்க முயற்சி நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியிலும் போராட்டம் நடந்தது. நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடந்தது.
English Summary:
Alanganallur: gravel voiced strong opposition urging villagers protested the arrest. Salem, Chennai, insisting the battle took place in the gravel.

Friday, 23 December 2016
செக்கானூர் மதகு உடைப்பு சரி செய்யப்பட்டது
சேலம் : செக்கானூர் கதவணை மின் நிலையத்தில் ஏற்பட்ட மதகு உடைப்பு சரி செய்யப்பட்டது; தண்ணீர் தேக்கும் பணி துவங்கியது.
மதகு உடைப்பு :
சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை நீர் மின் நிலையத்தில் 7ம் எண் மதகு திடீரென உடைந்ததால், அணையில் தேங்கி இருந்த நீர் வெளியேறத் துவங்கியது. வினாடிக்கு 15 ஆயிரம் கன அடிநீர் வெளியேறியது. இதனால் காவிரி ஆற்றின் கரையோர கிராம பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இரு நாட்களாகும் :
இந்நிலையில் 7வது மதகு உடைந்த இடத்தில், 5 தடுப்புகள் அமைத்து தண்ணீர் தேக்கும் பணி துவங்கியுள்ளது. மதகு உடைந்ததால் தேக்கி வைக்கப்பட்டிருந்த அரை டி.எம்.சி., நீர் வெளியேறியது. கதவணை மின்நிலையத்தில் மின்உற்பத்தி துவங்க 2 நாட்கள் ஆகும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
English Summary:
Salem: shekkanur dam breakage in the power station of the sluice has been fixed; Began the process of de-watering.

Thursday, 22 December 2016
மழை இல்லை... வெள்ளம் உண்டு: சேலத்தின் அவலம்
சேலம்: மழை பெய்யவில்லை. ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் பராமரிக்கப்படாத அணையின் மதகு, தானாக திறந்துகொண்டதால் சேலம் நகருக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டது. அணை நீர், யாருக்கும் பயனில்லாமல் வீணாகியது.
மதகு உடைப்பு:
சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை நீர் மின் நிலையத்தில் 7ம் எண் மதகு திடீரென உடைந்தது. இதனால் அணையில் தேங்கி இருந்த நீர் வெளியேறத் துவங்கியது. வினாடிக்கு 15 ஆயிரம் கன அடிநீர் வெளியே
றியது.
வருவாய்துறை அறிவிப்பு:
இதனால் காவிரி ஆற்றங்கரையோர கிராமங்களான கோல்காரனூர் ,பூலாம்பட்டி, கூடக்கல் நெருஞ்சிப்பேட்டை , ஆகிய கிராம பகுதிகளுக்கு வருவாய்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
English Summary:
Salem: Not rainfall. But the indifference of the authorities maintained the dam's sluice, the risk of flooding to the town of Salem was opened automatically. Dam water, who wasted no avail.

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி வங்கிக்கணக்குகள் அம்பலம்
சேலம்: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த சோதனையில், பல போலி வங்கி கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சோதனை:
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதிக டிபாசிட் உள்ள வங்கியாக உள்ளது. மாவட்டம் முழுவதும், 64 கிளைகள் உள்ளன. சேலம் மாவட்ட ஜெ., பேரவை தலைவராக உள்ள இளங்கோவன், வங்கி தலைவர் பொறுப்பை வகித்து வருகிறார். செல்லாத நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, நவ., 15 வரை, பல நூறு கோடி ரூபாய் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளை கணக்குகளில், டிபாசிட் செய்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று மாலை முதல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்த கூட்டுறவு உயர் அலுவலர்கள் மூலம், அனைத்து கிளைகளிலும், டிபாசிட் செய்தவர்களின் கணக்குகளை, உடனடியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்துக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, 64 வங்கி கிளை அலுவலர்களும், தங்களது கணக்கு புத்தகங்களை கொண்டு வந்து, வங்கி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இவற்றை சோதனை மற்றும் ஆய்வு செய்யும் பணியில், தொடர்ந்து வருமானவரித்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
டிபாசிட்:
இந்த ஆய்வில் போலி வங்கிக்கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ரூ.150 கோடி வரை போலி கணக்குகள் மூலம் டிபாசிட் செய்யப்பட்டிருக்கலாம். பழைய ரூபாய் நோட்டுகள் இந்த வங்கிக்கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டிருக்கலாம். இந்த சோதனையில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.
English Summary:
Salem: Salem District Central Co-operative Bank in the trial, a number of bank accounts were found to be fake.

Wednesday, 30 November 2016
சேலம் இரும்பாலை தனியார்மய விவகாரம்.. தமிழக அரசு உறங்குவதா? ராமதாஸ் காட்டம்
சென்னை: சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மிக வேகமாக எடுத்து வரும் நிலையில் அதனை தடுக்காமல் தமிழக அரசு உறங்கிக்கொண்டிருக்கிறதா என்று மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் பயன்படக்கூடிய திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் செய்யும் மத்திய அரசு தமிழகத்தின் நலன்களை பறிக்கும் திட்டங்களை மட்டும் மின்னல் வேகத்தில் செயல்படுத்தி வருகிறது. அதற்கான அண்மைக்கால உதாரணம் சேலம் இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவு ஆகும். இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
மத்திய அரசு உத்தரவு: சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக கடந்த ஜுலை 25-ம் தேதி அன்று அறிக்கை வெளியிட்ட நான்இ இந்த முயற்சியை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும்இ அரசும் இணைந்து முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனாலும்இ தமிழகத்தின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், இரும்பாலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக சேலம் இரும்பாலையின் 51மூ பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக மத்திய எஃகுத் துறை அமைச்சர் விஷ்ணுதியோ சிங் நாடாளுமன்ற மக்களவையில் திங்கள்கிழமை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்திருந்த பதிலில் கூறியிருந்தார்.
கொள்கை அடிப்படையில் ஒப்புதல்:
அதைத் தொடர்ந்து சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கைகள் வேகப் படுத்தப்பட்டிருக்கின்றன. இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்த 24 மணி நேரத்தில்இ பங்கு விற்பனை குறித்த தகவலை பங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் செபி அமைப்புக்கு மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
சேலம் இரும்பாலை மட்டுமின்றிஇ பத்ராவதி இரும்பாலைஇ துர்காப்பூர் இரும்பாலை ஆகியவற்றின் பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றன. பங்குகளை வாங்கும் நிறுவனம் 2 கட்ட ஏலத்தின் மூலம் தீர்மானிக்கப்படவிருப்பதாக செபி அமைப்பிடம் மத்திய அரசின் சார்பில் இந்திய எஃகு நிறுவனம் (ஷிகிமிலி) அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திசம்பர் மாதம் தொடங்கி அடுத்த சில வாரங்களில் இரு கட்ட ஏலங்களும் நடத்தி முடிக்கப்பட்டுஇ சேலம் இரும்பாலை உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகம் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.
பங்கு விற்பனை:
தொழிலாளர்களும் இம்முடிவுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால்இ இந்த எதிர்ப்புகளையெல்லாம் மதிக்காமல் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது என்றால்இ அதற்குக் காரணம் இந்த விஷயத்தில் தமிழக அரசு அதன் எதிர்ப்பை வெளிப்படுத்த தவறியது தான்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 8-தேதி அன்று நடைபெற்ற தொழில் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தமிழகத்தில் செயல்பட்டு வரும் எந்த பொதுத்துறை நிறுவனத்தையும் தனியார் மயமாக்க முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்க மாட்டார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5மூ பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்த போதுஇ அவற்றை ரூ.358.20 கோடிக்கு தமிழக அரசே வாங்கி அவை தனியாரின் கைகளுக்கு செல்வதைத் தடுத்தது. நடவடிக்கைகள் தீவிரம்: அதேபோல், சேலம் இரும்பாலை நிர்வாகமும் தனியாரின் கைகளுக்கு செல்வதை ஜெயலலிதா தடுத்து நிறுத்துவார்'' என்று கூறினார். ஆனால், அதற்காக தமிழக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடாததன் விளைவாகத் தான் சேலம் இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான சேலம் இரும்பாலையை காப்பாற்றும் விஷயத்தில் தமிழக அரசு காட்டும் அக்கறை என்பது இவ்வளவு தான். சேலம் இரும்பாலை நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்யவே தனியாருக்கு வழங்குவதாகவும் மத்திய அரசு கூறுவது தவறாகும். இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால்இ தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காகவே சேலம் இரும்பாலை நஷ்டமாக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது. தற்போது சூப்பர் இரும்பாலையாக இருக்கும் சேலம் ஆலையை ஒருங்கிணைந்த ஆலையாக நவீனப்படுத்த வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக அதன் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதை செய்யாதது தான் சேலம் ஆலை நஷ்டத்தில் இயங்க காரணமாகும். சர்ஜிக்கல் தாக்குதலுக்குப் பிறகு 20 முறை அத்துமீறிய பாகிஸ்தான்: 24 வீரர்கள் பலியான சோகம்! ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.. போராட்ட களத்தை பீகாருக்கு மாற்றிய மம்தா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! Featured Posts தனியார் மயமாக்கும் முயற்சி கைவிடுக: சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சி அரசுக்கோ, தொழில்துறை வளச்சிக்கோ எந்த வகையிலும் உதவாது. சேலம் பகுதியிலுள்ள தாது வளங்களை தனியார் ஆலைகள் போட்டியின்றி கொள்ளை அடிப்பதற்கே உதவும். மேலும்இ சேலம் ஆலையில் பணியாற்றும் 2000 தொழிலாளர்களையும் இந்த நடவடிக்கை பாதிக்கும். எனவே, சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தைக் கைவிட்டுஇ ஆலையை நவீனமயமாக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் அமைச்சர்கள் குழுவும் தில்லி சென்று பிரதமரை சந்தித்து சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடும்படி வலியுறுத்த வேண்டும். இதற்கு பிறகும் தனியார் மயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் அதற்கு எதிராக சேலம் பகுதியுள்ள மக்களையும், இரும்பாலை தொழிலாளர்களையும் திரட்டி மிகப்பெரிய அறவழிப் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
English summary:
Chennai: Salem steel plant privatization issue is TN govt sleeping? PMK founder Ramadoss question in a statement issued today

மின்சார அமைச்சர் தங்கமணி குரலில் பேசி டிரான்ஸ்பர்... மிமிக்ரி கலைஞர் கைது
சேலம்: மேட்டூர் அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் மின்துறை அமைச்சர் தங்கமணி போல் மிமிக்ரி கலைஞரை பேசவைத்து 28 பேரை இடமாற்றம் செய்து அதன் மூலம் பல கோடியை குவித்துள்ளர் அதிமுக நிர்வாகிகள். இந்த சம்பவம் மின்வாரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூரில், 840 மற்றும், 600 மெகாவாட் அனல்மின் நிலையம் உள்ளது. அங்குள்ள என்ஜினியர்கள் பணியிடமாற்றத்துக்காக ஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசுவார்கள்.
ஒரு மாதத்துக்கு முன், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் உதவி என்ஜினியர் ஜெயக்குமாரை, நிலக்கரி கையாளும் பகுதியில் இருந்து, கொதிகலன் பிரிவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம், மின்துறை அமைச்சர் தங்கமணி போல் ஒருவர் பேசியுள்ளார். அமைச்சரே கூறியதாக நம்பி அவரை கொதிகலன் பிரிவுக்கு, அதிகாரிகள் இடமாற்றம் செய்தனர். அங்கு நடந்த நிர்வாக குளறுபடியால், ஒரு வாரத்துக்கு முன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
என்ஜினியர் குழப்பம்:
சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி, அவரது உறவினர்கள் மின்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டுள்ளனர். இதைக்கேட்ட அமைச்சர், மின்வாரிய அதிகாரிகளிடம் அவர் எப்போது இடம் மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரித்துள்ளார். அப்போது அதிகாரிகள் நீங்கள் தானே போனில் கூறினீர்கள். அதன் பேரில் இடமாற்றம் செய்ததாக கூறியுள்ளனர்.
அமைச்சர் தங்கமணி :
அதிர்ச்சியடைந்த அமைச்சர் தங்கமணி, நான், அப்படி யாருக்காகவும் கீழ் மட்ட அதிகாரிகளிடம் போனில் பேசவில்லை. இதில் ஏதோ சதி நடந்துள்ளது. எனவே முறையாக விசாரித்து தனக்கு தெரியப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். விசாரணையில், அனல்மின்நிலைய ஆளும்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர், பொறியாளர்கள், ஊழியர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, திண்டுக்கலைச் சேர்ந்த மிமிக்ரி கலைஞர் சவரி முத்துவை பயன்படுத்தி மின்துறை அமைச்சர் போல், போனில் அதிகாரிகளிடம் பேசி, அவர்கள் விரும்பும் இடத்துக்கு மாற்றம் செய்தது தெரியவந்துள்ளது.
28 பேர் டிரான்ஸ்பர் :
கடந்த 2 மாதத்தில் 28 பேர்களை இதேபோல் மிமிக்ரி குரலில் பேசி இடமாற்றம் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அமைச்சரின் குரலில் பேச திண்டுக்கலை சேர்ந்த மிமிக்ரியாளர் ஒருவரை பயன்படுத்தி இருப்பதும், உதவி பொறியாளர் இடமாற்றத்துக்கு மின்வாரிய அதிகாரிகளிடம் பேசியது அவர் தான் என்பதும் தெரியவந்தது.
கோடிகள் குவிப்பு :
இதையடுத்து சமீபத்தில் இடமாறுதல் கேட்டு சென்றவர்கள் யார், யார் என்ற பட்டியலை எடுத்து மின் வாரிய விஜிலென்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மிமிக்ரி கலைஞரான சவரிமுத்துவை, நத்தம் விஸ்வநாதன் அமைச்சராக இருந்த போதே, அமைச்சர் போல் அதிகாரிகளிடம் பேசி, பலரையும் இடமாற்றம் செய்து, மின்வாரிய கடைநிலை ஊழியர்களாக உள்ள தொழிற்சங்க புள்ளிகள், கோடிகளை குவித்துள்ளதாக, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிமிக்ரி கலைஞர் கைது:
சவரிமுத்துவை கைது செய்த போலீசார், இந்த மோசடி, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மட்டும் நடந்ததா அல்லது மின்வாரியத்தின் வேறு அலுவலகங்களிலும் நடந்ததா என, ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary :
A Dindigul-based mimicry artist was arrested on Monday by Mettur police in Salem for mimicking the voice of Tamil Nadu electricity minister P Thangamani, to transfer an official from one department to another in a Thermal power unit.
Monday, 28 November 2016
தலையை நசுக்கி இளைஞர் கொடூர கொலை... காதல் விவகாரமா?
சேலம்: சேலம் மாவட்டத்தில், மலை உச்சியில் இளைஞர் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு நசுக்கி கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை - உடையாப்பட்டி பைபாஸ் சாலையில் உள்ளது நாமாமலை. இந்த மலை உச்சியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்குள்ள படிக்கட்டுகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.
நேற்றுக்காலை நடைப்பயிற்சி செய்த சிலர் படிக்கட்டுகளில் ரத்தம் உறைந்திருப்பதைக் கண்டு அருகில் உள்ள 10 அடி ஆழ பள்ளத்தை எட்டிப்பார்த்தனர். அப்போது தலைநசுங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் கொடூராக கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது தலை நசுங்கிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டனர். உடலின் அருகே மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் ரத்தக்கறை படிந்த பெரிய கல் ஒன்று கிடந்தை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்டவரின் வலது கை விரல்களில் ஒவ்வொரு எழுத்தாக அபி என்று எழுதப்பட்டுள்ளது. பெருவிரலில் சூர்யா என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. மேலும் இளைஞரின் மார்பில் காதல் சின்னமான இதயத்தில் அம்பு பாய்வது போன்று பச்சை குத்தப்பட்டுள்ளது.
காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா அல்லது முன்பகை காரணமா என விசாரித்து வரும் போலீசார் கொல்லப்பட்டவர் யார் எந்தப்பகுதியைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர். மேலும் இளைஞரை கொடூரமாக கொன்ற கொலையாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English summary:
A young man killed by head crushed in the top of the mountain neat salem. Police esquires about the murder.

Sunday, 27 November 2016
பாஜக பிரமுகரின் காரில் கணக்கில் வராத ரூ. 20.55 லட்சம் பணம்.. !
சேலம்: சேலம் அருகே பாஜக பிரமுகர் காரில் கொண்டு சென்ற 20.55 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் குமாராசாமிப்பட்டி என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பெரமனூரைச் சேர்ந்த அருண் என்பவரின் காரை மறித்த போலீசார், அதில் இருந்த பையில் கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதில் 18.52 லட்சம் ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாகவும், ஒரு லட்சத்து 53 000 ரூபாய் 100 ரூபாய் நோட்டுகளாகவும் 50000 ரூபாய் மதிப்புள்ள 50 ரூபாய் நோட்டுகளுமாக இருந்தன.
இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர் நபர் ஒருவர் 2000 ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களிடம் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டுள்ளனர்.அதற்கு இவை தனுது பணம் தான் என்று கூறிய அவர்கள் நான் எங்கு வேண்டுமானாலும் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று கூறிச்சென்றுள்ளனர்.
இதையடுத்து பணத்தையும் காரையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்ட அருண் சேலம் மாநகர பாஜக இளைஞரணி செயலளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rs 22.55 million new 2000 Rupee Currency Notes seized in Salem From a BJP Leader during vehicle checking.
ஆற்றில் மிதந்து வந்த "1000 ரூபாய் நோட்டுகள்".. சேலத்தில் பரபரப்பு!
சேலம்: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மணிமுத்தாறில் ஆயிர்ம் ரூபாய் நோட்டுகள் மிதப்பதாக வெளியான தகவலால் அங்கு ஏராளமான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி வணிக வளாகத்தின் பின்புறம் உள்ள மணிமுத்தாறு ஆட்கொல்லி பாலத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்து சென்றுள்ளன. இதனை அவ்வழியாக வாகனங்களில் சென்ற சிலர் பார்த்துள்ளனர். இந்த விஷயம் காட்டுத்தீப்போல் பரவியதால் அடுத்த சில நிமிடங்களில் ஏராளமானோர் பாலம் அருகே திரண்டனர்.
ஒரே நேரத்தில் பாலத்தின் மீது 300க்கும் மேற்பட்டோர் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்குவந்த காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் சிவப்பு பாலித்தீன் பைகளில் கட்டப்பட்ட குப்பைகள் ஆற்றில் மிதந்தது சென்றது தெரியவந்தது.
அவை 1000 ரூபாய் நோட்டு போல் தெரிந்ததால் வதந்தி பரவியதும் விசாரணையில் கண்டுபிக்கப்பட்டது.

After rumour spread that Rs 1000 notes are floating in Salem's Thirumanimutharu river, people were thronging the place and found that it was hoax.