சென்னை, தமிழகம் முழுவதும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பள்ளிகளில் மாணவ–மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அதேபோல் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா உருவபடத்துக்கு மலர் தூவி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து, மக்களை எல்லாம் மீளா துயரில் ஆழ்த்தியிருக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவாக அஞ்சலி நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பள்ளிகளில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்விக்காக தாயுள்ளத்துடன் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய நலத்திட்டங்களை மாணாக்கர்கள் நெகிச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.
தமிழகத்தில் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை எளிய மாணாக்கர்கள் தொடக்க கல்வியில் இருந்து உயர்கல்வி பெறுவதற்காக விலையில்லா நோட்டு புத்தகங்களில் தொடங்கி வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அவரது நினைவை போற்றும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று இறைவணக்கத்தின் போது மாணவிகளும், ஆசிரியப்பெருமக்களும் அஞ்சலி செலுத்தினர். மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. மகபுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
காஞ்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல், மாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் அமைச்சர் பாண்டியராஜன், மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி உட்பட அதிகாரிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மறைந்த முதலமைச்சருக்கு, மாணவ – மாணவிகள் அஞ்சலி செலுத்தினர். விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மவுன அஞ்சலி செலுத்தியதுடன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல், திண்டிவனம், செஞ்சி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். அதனைதொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவள்ளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ -மாணவிகள் பலர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல், திருவொற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்திற்கு மாணவ -மாணவிகள் ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-–ம் தேதி இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். ஜெயலலிதா மறைவையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் 6-ம் தேதி முதல் நேற்று வரை மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இதனையடுத்து, மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. எனவே இன்று அனைத்து பள்ளிகளிலும் ஜெயலலிதா படம் அலங்கரித்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
English Summary:
Late in Tamil Nadu Chief Minister Jayalalithaa today paid tribute to the schools Alumni candle light. Chief Minister Jayalalithaa, who had been decorated with the floral photo expressed resiliency.