புதுடில்லி: பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது, உ.பி., மாநிலம், ரேபரேலி சிறப்பு கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தவிர, மசூதியை இடித்ததாக, அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது, லக்னோ கோர்ட்டில் தனியாக வழக்கு தொடரப்பட்டது.ரேபரேலி கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, அத்வானி உள்ளிட்டோர் நீக்கப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, நீதிபதிகள், பினாகி சந்திர கோஸ், ஆர்.எப்.நாரிமன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. நேற்று நாரிமன் கோர்ட்டுக்கு வராததால், இந்த வழக்கு இன்று(மார்ச்,23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டது.இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை இரண்டு வாரத்திற்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது. மேலும் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனவும் அத்வானி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.
Friday, 24 March 2017
Wednesday, 22 March 2017
ரூபாய் நோட்டு வாபஸ்: அவகாசம் தராதது ஏன்?: சுப்ரீம் கோர்ட் கேள்வி
புதுடில்லி: பழைய ரூபாய் நோட்டுக்களை, குறிப்பிட்ட கால கெடுவுக்குள் மாற்ற முடியாதவர்களுக்கு கால அவகாசம் ஏன் வழங்கப்படவில்லை என்பது குறித்து விளக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு:
கள்ள நோட்டுகளை ஒழிக்கவும் கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் கடந்த வருடம் 2016 நவம்பர் 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. இதற்கான கெடு டிசம்பர் 30ம் தேதியுடன் முடிந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஒத்திவைப்பு:
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டிசம்பர் 30ம் தேதிக்குள் பழைய ரூபாய் நோட்டு மாற்ற முடியாதவர்களுக்கு தனி சலுகை வழங்காதது ஏன்? ஏற்கனவே அறிவித்தபடி, மார்ச் 31 ம் தேதி வரை பழைய நோட்டுகளை மாற்ற அனுமதிக்காதது ஏன்? மார்ச் 31 வரையிலான கால அவகாசத்தை குறைத்தது ஏன்? வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இங்குள்ளவர்களுக்கு ஏன் வாய்ப்பு தரப்பவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Friday, 10 March 2017
சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் எதிர்ப்பு
புதுடில்லி: எனது வாழ்க்கையையும், பதவியையும் கெடுக்கவே, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.
ஆஜரில்லை:
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணன், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு, அவர், பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் கடிதங்களை அனுப்பினார். இதனை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக கர்ணனுக்கு இரண்டு முறை உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.
உத்தரவு:
இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கேஹர் மற்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், பினாகி சந்திரகோஸ், குரியன் ஜோசப் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்ணனுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கர்ணன் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆவணத்தை செலுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணையில்லை:
பத்திரிகையாளர்களிடம் கர்ணன் கூறியதாவது: பிடிவாரன்ட் தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிடுவேன். வாரன்ட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுப்பேன். வாரன்ட் பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பேன். சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக பிரதமரிடம் புகார் தெரிவித்தேன். முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை தொடர்பாக சென்னை ஐகோர்ட் நீதிபதிகளுக்கு எதிராக பிரதமரிடம் புகார் தெரிவித்தேன். புகார் தொடர்பாக எந்தவித ஆலோசனை, விசாரணையில்லாமல் எனக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. நான் தலித்தாக இருப்பதால் எனக்கு நெருக்கடி ஏற்படுகிறது. எனது வாழ்க்கையையும், பதவியையும் கெடுக்கவே தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, 8 March 2017
சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டார் அனுராக் தாகூர்!
புதுடெல்லி - சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை மறைத்து பொய்யான தகவலை தெரிவித்ததற்காக அனுராக் தாகூர் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டார்.
சுப்ரீம் கோர்ட் கேள்வி:
லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த காலதாமதம் செய்ததால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியது. அத்துடன் தலைவர் அனுராக் தாகூர் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை மறைத்து பொய்யான தகவலை தெரிவித்ததற்காக ஏன்? கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு இருந்தது.
மன்னிப்பு கேட்டார்:
இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அனுராக் தாகூர் நேரில் ஆஜராகி தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். அத்துடன் வேண்டுமென்றே தவறான தகவலை அளிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 17-ந் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அன்றைய தினம் அனுராக்தாகூர் கோர்ட்டில் நேரடியாக ஆஜராகுவதற்கும் விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.

Tuesday, 7 March 2017
பாபர் மசூதி வழக்கு: அத்வானி உள்ளிட்டோர் மீண்டும் சேர்ப்பு?
புதுடில்லி: 'அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில், முன்னாள் துணை பிரதமர், அத்வானி, 89, உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதை ஏற்க முடியாது' என, கூறிய சுப்ரீம் கோர்ட், இது குறித்து, வரும், 22ல் உத்தரவு பிறப்பிப்பதாக கூறியுள்ளது.
வழக்கு:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, இரண்டு வழக்குகள் நடந்து வருகின்றன. மசூதியை இடிப்பதற்கு சதி திட்டம் தீட்டியதாக, அத்வானி, பா.ஜ., மூத்த தலைவர்கள், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது, ரேபரேலி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
விடுவிப்பு:
மசூதியை இடித்ததாக, அடையாளம் தெரியாத, 'கரசேவகர்கள்' மீது, லக்னோவில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இதனிடையில், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக, ரேபரேலி கோர்ட் தீர்ப்பளித்தது. இதை அலகாபாத் ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஏற்க முடியாது:
இந்த வழக்கு, நீதிபதிகள், பினாகி சந்திர கோஸ், ஆர்.எப். நரிமன் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது; அப்போது அமர்வு கூறியதாவது: தொழில்நுட்ப காரணங்களுக்காக அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக கூறுவதை ஏற்க முடியாது. அவர்கள் மீது தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கை விசாரித்திருக்க வேண்டும். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவது குறித்து, வரும், 22ல் அறிவிக்கப்படும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.

English summary:
NEW DELHI : 'Ayodhya on Babri Masjid demolition case, former Deputy Prime Minister, LK Advani, 89, including the abandonment of the charges can not accept that ", said the Supreme Court, in this regard, which, as the issuing of warrants in 22 states.
கோடி கணக்கில் ஏமாற்றியவரை விட்டுவிட்டு, சேலை திருடியவருக்கு ஓராண்டு சிறையா?
புதுடில்லி: ‛‛கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றியவர்கள் வெளிநாட்டில் சுகமாக வாழும் போது, சேலை திருடியவருக்கு ஓராண்டு சிறையா?'' என சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வியெழுப்பினார்.
ஐதராபாத்தை சேர்ந்த எலியா என்பவர் 5 சேலைகளை திருடியாதாக அம்மாநில போலீசார் ஒரு வருடத்திற்கு முன்பு கைது செய்தனர். ஆனால் இது வரை அவர் எந்த வித விசாரணையும் இன்றி சிறையிலேயே இருந்து வருகிறார். வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.
சேலை திருடியவருக்கு 1 வருடம் சிறையா?
இதை எதிர்த்து அவரது மனைவி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கேகர் கூறுகையில் ‛‛ கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றியவர்கள் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, 5 சேலை திருடியவர் விசாரணையின்றி சிறையில் இருக்கிறார்'' என தெலுங்கானா போலீசிற்கு கண்டனம் தெரிவித்தார்.
நீதிபதி கேகர் கோடி கணக்கான பணத்தை கடனாக பெற்று விட்டு வெளிநாட்டில் வாழும் விஜய் மல்லையாவின் பெயரை சொல்லாமல் அவர் சுதந்திரமாக இருப்பதை சுட்டிக்காட்டி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
English Summary:
NEW DELHI: '' betrayed millions of money while living comfortably abroad, sari-year jail for theft? '' Asked the Supreme Court judge.

Monday, 6 March 2017
பரிசு பொருள் வழக்கு: ஜெ., விடுவிப்பு
புதுடில்லி: உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த பரிசு பொருள் வழக்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு:
ஜெயலலிதா கடந்த, 1992ல் முதல்வராக இருந்த போது, அவரது பிறந்த நாளில் ஏராளமான பரிசு பொருட்களும், காசோலைகள், டி.டி.,க்கள் வந்தன. இதன் மதிப்பு இரண்டு கோடி ரூபாய். முதல்வராக இருப்பவர் தனக்கு வரும் பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். ஆனால், பரிசு தொகையை தனது சொந்த வங்கி கணக்கில் ஜெயலலலிதா டெபாசிட் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல்முறையீடு செய்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இறந்து விட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
எனினும், செங்கோட்டையன் மீதான வழக்கு கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English Summary:
NEW DELHI: The Supreme Court was hearing the case of a gift from the late Chief Minister Jayalalithaa, a former Minister of Health Tirunavukarasar released.

Friday, 3 March 2017
பசுமை தீர்ப்பாய உத்தரவு எதிர்த்து தமிழகம் மனு
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில், வாகன நிறுத்துமிடம் அமைக்க, கேரள அரசு திட்டமிட்டது. அதற்கு, அனுமதி வழங்கக் கூடாது என, பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இவ்வழக்கு, பிப்., 17ல் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்கை ஒத்திவைக்கும்படி கேட்டனர். அதை ஏற்காமல், தமிழக அரசுக்கு குத்தகைக்கு விடப்பட்ட பகுதியில், வாகனங்களை நிறுத்திக் கொள்ள, கேரள அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்ட வல்லுனர்களின் ஆலோசனைப்படி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
English summary:
National Green Tribunal's decision, the Supreme Court, on behalf of the State Government, the petition has been filed

Thursday, 2 March 2017
'எங்கள் பேச்சை யாரும் கேட்பதில்லை'; நீதிபதிகள் ஆதங்கம்
புதுடில்லி: ‛எங்கள் பேச்சை யாரும் கேட்பதாக தெரியவில்லை' என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
காவல் துறையில் சீர்திருத்தங்கள் செய்ய உத்தரவிடக் கோரி, மூத்த வழக்கறிஞரும், பா.ஜ., செய்தித் தொடர்பாளருமான அஸ்வினி குமார் உபாத்யா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மேலும், இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஜே.எஸ்.கேஹர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டது. அப்போது பேசிய நீதிபதிகள், 'காவல் துறையில் சீர்திருத்தங்கள் நடக்கின்றன... நடக்கின்றன... நடந்து கொண்டே இருக்கின்றன. எங்கள் பேச்சை யாரும் கேட்பதாக தெரியவில்லை' என்றனர்.

Tuesday, 21 February 2017
காவிரியில் கழிவு நீர் கலப்பு: சுப்ரீம் கோர்ட் கேள்வி
புதுடில்லி: காவிரியில், கழிவு நீர் கலப்பது தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது குறித்து வல்லுனர் குழு அமைப்பது குறித்து, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாவட்டங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காவிரியில் கலப்பதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கழிவு நீர் கலப்பதை தடுக்க, வல்லுனர் குழு அமைப்பது குறித்து, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Monday, 20 February 2017
இது யாருன்னு தெரிகிறதா..? கட்ஜு சொல்லாதது புரிகிறதா?
நாட்டு நடப்பு, அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக அவலங்கள் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, தன் டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து, அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
அவரது, 'லேட்டஸ்ட் பேஸ்புக்' பதிவில், ஆள், பெயர் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், அதை புரிந்து கொள்வதற்கு, மூளையை போட்டு கசக்க வேண்டியதில்லை.
பச்சை குழந்தைக்கும் கூட புரியும் வகையில், கட்ஜு பதிவிட்ட முகநுால் பதிவு:
அமெரிக்காவில், சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ஜெயிலுக்கு அனுப்பப்படும், 'காட் பாதர்'கள் அங்கிருந்தே, தங்களது வேலைகளை செய்வது வழக்கம். அதேபோன்ற ஒரு விஷயம், தற்போது இந்தியாவிலும் எங்கேயோ நடந்து வருவது போல தோன்றுகிறது. இவ்வாறு கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.

Friday, 17 February 2017
'அ.தி.மு.க.,வுக்கு இனி அழிவு தான்!': கட்ஜூ
புதுடில்லி: 'சசிகலாவின் கைப்பாவையை முதல்வராக நியமிக்க, எப்போது, அ.தி.மு.க., முடிவு செய்ததோ, அப்போதே அக்கட்சியின் கதை முடிந்து விட்டது' என, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., அழியும்:
அவர் தன், 'பேஸ்புக்' பக்கத்தில் கூறியுள்ளதாவது: சசிகலாவின் கைப்பாவையை, சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுத்ததன் மூலம், அ.தி.மு.க., தன் மரணத்துக்கு குழி தோண்டி விட்டது. தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால், சந்தேகமே இல்லாமல், தி.மு.க., தான் பெரும் வெற்றி பெறும். அ.தி.மு.க., மாபெரும் தோல்வியைத் தழுவி அழிந்தே போகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English summary:
NEW DELHI: 'Sasikala appoint the puppet Chief Minister, anytime, Digg, made the decision, then the party is over the story', as former Supreme Court Justice Katju commented firs.

Thursday, 16 February 2017
தனித்துவம் மிக்க தமிழர் பண்பாடு: கவுல் பெருமிதம்
சென்னை: தமிழர்களின் பண்பாடு எவற்றையும் சாராமல்தனித்துவம் மிக்கது என சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கே.கவுல் கூறினார்.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஐகோர்ட் வளாகத்தில் இன்று பிரிவு உபசார விழா நடந்தது.
இந்த விழாவில் கவுல் பேசுகையில், தமிழர்களின் பண்பாடு எவற்றையும் சாராமல் தனித்தவம் மிக்கது. தமிழர்களின் வீரம், அன்பு என்னை மிகவும் கவர்ந்தது. தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் வியக்கத்தக்க வகையில் உள்ளது. தமிழ் சான்றோர்கள் சிறந்த நூல்களை இயற்றி சிறந்த அறிஞர்களாக விளங்கினர். நான் நீதிபதியாக தமிழகத்தில் பணியாற்றிய காலம் சிறப்பானது. மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தீர்ப்பு கொண்டாடுவதற்கல்ல...ஸ்டாலின் அறிவுரை
சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை பலரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அவ்வாறு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் ‛அவர், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கொண்டாடுவதற்கல்ல; கடைபிடிக்க வேண்டியதாகும். அரசியலுக்கு வருவோர் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் , நேர்மையுடன் பணியாற்ற வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.
English Summary:
Chennai: The Supreme Court's judgment in the case of assets, many of whom celebrated by firecrackers. DMK volunteers to provide advice to those involved in the celebration of the DMK., Executive Chairman has sent a letter to Stalin. In that letter, "he said, the Supreme Court's judgment in the case of disproportionate assets no need; Need to observe. With the spirit of service to the people who come to politics, will serve with integrity ', as requested.

Tuesday, 14 February 2017
நீதிபதிகள் தீர்ப்பில் சொன்னது என்ன?
February 14, 2017judgement, OPS Vs Sasikala, OPSVsSasikala, Sasikala vs OPS, SasikalaVsOPS, supreme court, tamil nadu
சென்னை: ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் இன்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:வழக்கின் உண்மை தன்மையை நன்கு விசாரித்த பிறகு, நான்கு பேருக்கும் எதிராக கர்நாடக சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீண்டும் அமலுக்கு வருகிறது. எனவே, நான்கு பேரும் சிறப்பு நீதிமன்றம் முன் ஆஜராகி, பாக்கி உள்ள சிறை தண்டனை காலத்தை அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி அமித்வா ராய் தனியாக பிறப்பித்த உத்தரவில், ‛ சமூகத்தில் ஊழல் என்ற பிரச்னை தலை விரித்து ஆடுவது எங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது' என்று கூறியுள்ளார்.

"என்ன தீர்ப்பு வந்தாலும் அதை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வோம்" சசிகலா பகீர் பேட்டி.
February 14, 2017ISupportOPS, judgement, OPS Vs Sasikala, OPSVsSasikala, Sasikala vs OPS, supreme court, tamil nadu
பரபரப்பான சூழ்நிலையில் நேற்று இரவு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருந்தார் சசிகலா. அதில் முக்கியமாக, சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி வெளியாகும் என்ற கேள்விக்கு, "என்ன தீர்ப்பு வந்தாலும் அதை நாங்கள் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வோம்." என பதில் கொடுத்திருந்தார். இந்த பேட்டி அப்படியே இங்கே...
"நீங்கள் தொடர்ந்து ஆளுநரிடம் வலியுறுத்தியும், இந்த காலதாமதத்திற்கு என்ன காரணம்?"
"எங்களிடம் 129 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்காங்க. இந்த லிஸ்ட்டை ஆளுநரிடம் கொடுத்து உரிமை கேட்டோம். ஆனால், இதுவரை அவர்களிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. என்னைப் பொறுத்தவரை இத்தனை நாட்கள் பொறுத்துவிட்டோம். இனியும் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்ப்போம்."
"ஆளுநரின் இந்த காலதாமதத்திற்கு காரணம் பா.ஜ.க-வும் தி.மு.க-வும்-னு நீங்க ஏற்கனவே சொல்லி இருந்தீங்க..."
குறுக்கிடுகிறார், "இந்த கருத்தை வெளியில் உள்ளவங்கதான் பேசிட்டு இருக்காங்க. இதை எல்லாம் நான் கூர்ந்து கவனிச்சு இருக்கேன். அதுதான்."
"ஓ.பன்னீர்செல்வம் 2012-ம் ஆண்டிற்கு பிறகு உங்களை சந்திக்கவே இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது மட்டும்தான் பேசினேன் என சொல்லி இருக்கிறாரே?"
"இது இங்குள்ள அமைச்சர்களுக்கே தெரியுமே. அவர் பேசினாரா இல்லையானு. இப்ப அவர் எதுவுமே தெரியாத மாதிரிதான பேசிட்டு இருக்கார். அப்படி இருக்கும்போது இதை எப்படி அவர் ஒத்துக்குவார்? இப்ப அவர் எங்கிருந்தோ வானத்தில் இருந்து குதிச்சுவந்த பன்னீர்செல்வம் மாதிரிதான் எங்களுக்குத் தெரியுது. ஆனால், கோபாலபுரத்தில் இருந்து குதிச்சாரா? என்பது எங்களுக்குத் தெரியாது." சிரிக்கிறார்.
"ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்தபின் தான், உங்க மீது குற்றச்சாட்டு எல்லாம் வைச்சாரே... அவர் அங்க போக போகிறார் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா?"
"நான் கேள்விபட்டது. அவர் கூட சில டைரக்டர்கள் இருக்காங்களாம். அவங்க என்ன சொல்லுறாரோ... அதுபடிதான் அவர் செய்வதாக சொல்லுறாங்க. (சிரிப்பு) எனக்கு தெரிஞ்சு அங்க போய் உட்கார்ந்த காரணம் என்னென்னு நான் நினைக்கறேன்னா... கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருந்தால்... என்னமோ ஏதோனு நீங்க எல்லாம் (மீடியாக்காரங்க) போய்டுவீங்கல்ல. அதுக்காக பண்ண மாதிரிதான் தெரியுது."
"எம்.எல்.ஏ-க்கள் எல்லாரையும் கூவத்தூரில் அடைத்து வைத்து உள்ளதாக குற்றாச்சாட்டு எழுகிறதே..." குறுக்கிடுகிறார்.
"என்ன சொல்லிறீங்க? புரியலையே...." என்றதும், மீண்டும் கேள்வியை கேட்கிறார் செய்தியாளர்.
"இல்லைங்க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவங்க தொகுதிக்கு சென்று மக்கள் கருத்தை அறிந்தபிறகு, இங்கு வரட்டும், உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கட்டும்'னு பலரும் சொல்லுறாங்களே.."
"ஏங்க ஒண்ணா சேர்ந்து, இருக்குற இடத்துலேயே அவரு (ஓ.பி.எஸ்) ஆளை தூக்கிட்டுப் போய்டுவோம்னு சொல்லுறாரே... இவங்க எல்லாரும் ஒற்றுமையாக, இங்க சுதந்திரமாகத்தான் இருக்காங்க. இதில் ஒன்றும் தவறு இல்லையே...."
"தீர்ப்பு வெளிவரப்போகுது. எப்படி வரும்னு நினைக்கறீங்க?"
"என்னைப் பொறுத்தவரை.. என்ன தீர்ப்பு வந்தாலும் அதை நாங்க இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வோம்."
"சரி, இந்தப் பிரச்னை எல்லாம் முடிந்து. நீங்கள் முதல்வராக பதவியேற்றால்... முதல் கையெழுத்தை எதற்கு போடுவீர்கள்?"
-- நன்றி விகடன்
சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு : முன்னெச்சரிக்கையாக கூவத்தூரில் போலீஸ் குவிப்பு
கூவத்தூரில் சசிகலா மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட் முன்பு காவல்துறையினர் குவிக்கபட்டுள்ளனர். இன்று சசிகலா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சசிகலா தற்போது தங்கியுள்ள இடத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்எல்ஏக்களுடன் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்றுள்ளார்.
-- நன்றி விகடன்
Wednesday, 1 February 2017
ஜல்லிக்கட்டு: தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு
புதுடில்லி: ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் 6 வாரத்தில் பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், கூபா என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
எதிர்ப்பு:
அப்போது விலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2016 உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றாலும், விசாரணை தொடர்ந்து நடத்த வேண்டும் எனக்கூறினர்.
அதிருப்தி:
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் 2014 ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு மாறாக உள்ளது. ஜல்லிக்கட்டை சட்டத்தை விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பது ஏன் எனக்கேள்வி எழுப்பினர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சட்டம் ஒழுங்கை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனக்கூறிய அவர்கள், வன்முறையை தடுக்க தவறியது ஏன் என கேள்வி எழுப்பினர்.
மேலும், 2016 வெளியிடப்பட்ட அறிவிக்கையை திரும்ப பெற்றுக்கொள்ள மத்திய அரசுக்கு அனுமதி நீதிபதிகள் அனுமதி வழங்கினர். தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரவும் அனுமதி வழங்கிய நீதிபதிகள், ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்ததுடன், 6 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அரசிதழில்:
முன்னதாக, வழக்கறிஞர் மோகன் பராசரன், ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டு வரப்பட்டதன் வழிமுறையை எடுத்துக்கூறியதுடன், சட்டம் 2 நாளில் அரசிதழில் வெளியிடப்படும் எனக்கூறினார். . மாநில அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்தை இயற்றியுள்ளது எனக்கூறினார்.
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்ஹி, கடந்த 2016ம் ஆண்டு அறிவிப்பாணையை திரும்ப பெற சுப்ரீம் கோர்ட் அனுமதிக்க வேண்டும் எனக்கூறினார்.

NEW DELHI: The Supreme Court has denied a ban jallikattu interim legislation. Also ordered the state to respond by 6 weeks.