Tuesday, 28 March 2017
Wednesday, 22 March 2017
ஜார்ஜ்-க்கு ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை: கோர்ட் அவமதிப்பு வழக்கில் உத்தரவாதத்தை நிறைவேற்றாதது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கிருபாகரன் கூறுகையில், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய முடியும். 22ம் தேதி ஜார்ஜ் ஆஜராவார் என உத்தரவாதம் அளித்தீர்கள்.
பின்னர் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தீர்கள். நேரில் ஆஜராவதாக உத்தரவாதம் அளித்த பின்னர் மேல்முறையீடு செய்வது ஏன்? ஒரு அதிகாரி நேரில் ஆஜராக அளித்த உத்தரவுக்கு மற்ற அதிகாரிகள் ஆஜராவது ஏன்? ஒருவருக்கு பதில் மற்றொருவர் ஆஜராவதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் அதற்கான பணியை செய்ய வேண்டும். உறுதிமொழியை மீறியதால் ஜார்ஜ் மீது ஏன் சூமோட்டோ (தாமாக முன்வ வந்து) வழக்கு தொடரக்கூடாது எனக்கூறினார்.

Wednesday, 1 March 2017
போராட்டத்திற்கு அனுமதி: போலீசாரிடம் ஓ.பி.எஸ் அணி மனு
சென்னை: சென்னை மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி அ.தி.மு.க., பன்னீர் செல்வம் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வின் பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த மதுசூதனன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள மனுவில் வரும் மார்ச் 8-ம் தேதி ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது
.

Friday, 24 February 2017
சிலை கடத்தல்: கடலூரில் 5 பேர் கைது
சென்னை: கடலூரில் ஐம்பொன் விநாயகர் சிலையை திருடி கடத்த முயன்ற ஐந்து பேரை, துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சிலை திருட்டு:
நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார் கோவில் அருகே உள்ள மங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்ராஜா. இவர் மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து ஒன்றரை அடி உயரமுள்ள வினாயகர் சிலையை திருடியுள்ளார். அந்த சிலையை வெளிநாட்டுக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய, புதுச்சேரி, அரியாங்குப்பத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை , கடலூரை சேர்ந்த முகுந்தன் சர்மா என்பவர் மூலம் தொடர்பு கொண்டார். இவர்கள் கடலூரில் சந்திக்க முடிவு செய்யப்பட்டது.
கடலுாரில் சுற்றிவளைப்பு:
அதன்படி ஹோண்டா சிட்டி காரில் ராஜா, மயிலாடுதுறையை சேர்ந்த வினோத், தரங்கம்பாடியை சேர்ந்த செந்தில்வேலன் ஆகியோர் கடலூருக்கு வந்தனர். அரியாங்குப்பத்தில் இருந்து ஞானசேகரன் ஒரு காரில் கடலூர் வந்தார். அவர்கள் முகுந்தன் சர்மாவை கடலூர் மஞ்சகுப்பம் பகுதியில் சந்திக்க திட்டமிட்டு இருந்தனர்.
இந்த தகவல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் மற்றும் போலீசார் கடந்த, இரண்டு நாட்களாக கடலூரில் தங்கியபடி கண்காணித்து வந்தனர். இன்று, ஐந்து பேரையும் கடலூரில் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஐம்பொன் விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர். அந்த சிலையின் மதிப்பு, நான்கு கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.

Friday, 17 February 2017
மெரினாவில் போலீஸ் குவிப்பு
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இன்று (பிப்.17 ம் தேதி ) போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று முதல்வராக இடைப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற நிலையில் மெரினாவில் சிலர் போராட்டம் நடத்தவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதனையடுத்து அங்கு 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவையிலும் இது போன்ற தகவல் பரவியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Saturday, 28 January 2017
சென்னை மெரினாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு
சென்னை : சென்னை மெரினாவில், இன்று பிற்பகல் முதல் மீண்டும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மெரினாவை சுற்றி உள்ள பகுதிகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் பதற்றமாக மெரினா :
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜனவரி 17 ம் தேதி முதல் 23 வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்திய போராட்டம் உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டம், ஜனவரி 23 ம் தேதி சென்னையில் கலவரமாக மாறியது. தீவைப்பு, கல் வீச்சு உள்ளிட்ட சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறின. இது தொடர்பாக இதுவரை 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் போராட்டம் நடத்துவதற்காக மெரினாவில் மாணவர்கள் கூட திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று முதல், மெரினாவில் போராட்டம் நடத்த போலீஸ் துறை தடை விதித்துள்ளது குறிப்பிடதக்கது.
English Summary:
Chennai Marina, in the afternoon of the first deployment of the police are at the highest level again. Once again, there is tension in the areas around the marina.

மெரினாவில் போராட்டம் நடத்த தடை
சென்னை: சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதிகளில் போராட்டம் நடத்த தமிழக காவல் துறை தடை விதித்துள்ளது.
காவல் துறை அறிவிப்பு:
ஏற்கனவே முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த தடை உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பொழுது போக்கிற்காக மெரினாவிற்கு பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கும் குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி பெற வேண்டும். மெரினாவில் சட்ட விரோதமாக கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
Chennai: Marina beach areas along the Napier bridge to the lighthouse to the Tamil Nadu police banned the protest.

Thursday, 26 January 2017
விசுவரூபமெடுக்கும் விசுவரூப பட பிரச்னை: கமல்ஹாசனுக்கு எதிராக கொம்பு சீவப்படும் சரத்குமார்
சென்னை: ஜல்லிக்கட்டை வலியுறுத்தி சென்னை மெரினாவில் தொடர் போராட்டம் நடத்திய தமிழக மாணவர்களும், இளைஞர்களும் அவசர சட்டம் இயற்றிய பின்பும் கலைந்து செல்லாததால், அவர்களை விரட்டி அடித்தது, தமிழக போலீஸ். அப்போது, சென்னையின் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அதிருப்தி:
இந்த பிரச்னையில், தமிழக போலீஸ் நடவடிக்கைகளை ஒரு தரப்பினரும்; மாணவர்களின் செயல்பாடுகளை ஒரு தரப்பினரும் எதிர்க்கின்றனர். மாணவர்களை ஆதரித்தும்; போலீசுக்கு எதிராகவும் கருத்து சொல்லி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். நடந்த சம்பவங்களுக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்பது வரையில், அவரது கோரிக்கை அமைந்துள்ளது. இந்த பிரச்னையில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளை கடுமையாகவும் விமர்சித்துள்ளார், நடிகர் கமல்ஹாசன். இது பன்னீர்செல்வம் தரப்பினரை கடும் அதிருப்திக்கு ஆளாக்கி இருக்கிறது. இதையடுத்து, நடிகர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பாக கடும் விமர்சனங்களை வைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ள முதல்வர் பன்னீர்செல்வம், இதற்காக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை அழைத்து பேசி இருக்கிறார்.
இது குறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது: நடிகர் சரத்குமாரைப் பொறுத்த வரையில், அவர், நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பான மன நிலையில் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, தமிழக அரசியலில் ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாக தெரிவித்தார். உடனே, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை மற்றும் பேட்டி கொடுத்த சரத்குமார்,‛ நடிகர் ரஜினி, அரசியலுக்கு வரக் கூடாது; வந்தால், அவரை நான் கடுமையாக எதிர்ப்பேன்; அவரை எதிர்ப்பதையே முழு நேரத் தொழிலாக்கிக் கொள்வேன்' என்றெல்லாம், ரஜினிக்கு எதிராக கொந்தளித்தார்.
சீண்டுகிறார்:
இந்நிலையில், ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்ற நிலையில், கலைந்து செல்லாத அவர்களை போலீஸார் விரட்டி அடித்தனர். அதை வைத்து, தற்போது, தமிழக போலீசையும், முதல்வர் பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். தமிழகம் தொடர்பான எந்த பிரச்னையிலும் ஆர்வம் காட்டாத நடிகர் கமல்ஹாசன், முதல்வராக ஜெயலலிதா இருந்த கால கட்டங்களில், தன் விசுவரூபம் படம் வெளியாக முடியாமல் புலம்பிய புலம்பலை மறந்துவிட்டு, தேவையில்லாமல், பன்னீர்செல்வத்தை சீண்டுகிறார்.
அதற்குக் காரணம், விசுவரூபம் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டபோது, தமிழக அரசை அவர் கடுமையாக விமர்சிக்க, அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, கமல்ஹாசனின் செயல்பாடுகளை விமர்சித்து, கடுமையான அறிக்கையை வெளியிட, தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்தை கேட்டுக் கொண்டார்.
தலைமை விருப்பம்:
ஆனால், அப்போது வெளியான அந்த அறிக்கை பன்னீர்செல்வம் தயாரித்தது அல்ல. அந்த அறிக்கையின் சாராம்சத்தில், பன்னீருக்கும் உடன்பாடும் இல்லாமல்தான் இருந்தது.ஆனால், கட்சித் தலைமையின் விருப்பத்தை மட்டுமே, பன்னீர்செல்வம் நிறைவேற்றினார். இதை பர்சனலாக எடுத்துக் கொண்ட கமல்ஹாசன், தற்போது முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பன்னீர்செல்வத்துக்கு எதிராக மாணவர்கள் பிரச்னையை கையில் எடுத்து, கடும் விமர்சனங்களை வைக்கிறார். தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த முயல்கிறார்.
இது, பன்னீர்செல்வத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதனால், நடிகர் சங்கப் பிரச்னையில், சரத்குமாருக்கு எதிரான மனநிலையில் இருந்து செயல்பட்ட கமல்ஹாசனை எதிர்க்க, சரத்குமார்தான் சரியான நபர் என தேர்ந்தெடுத்து, அவரை அழைத்து பேசியுள்ளார் பன்னீர்செல்வம். முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து திரும்பி உள்ள சரத்குமார், பன்னீரின் செயல்பாடுகளை பாராட்டி மகிழ்ந்துள்ளார். விரைவில், கமல்ஹாசனுக்கு எதிராக கச்சை கட்டுவார். அதற்கான, எல்லா விபரங்களும் பேசி முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
English summary:
Chennai: Tamil Nadu protested a series of gravel Marina urging students and young people dispersed after the ordinance passed by the invalid, driving them to the Tamil Nadu police. Then, there were riots in many places in Chennai, also suffering from severe public.

Monday, 23 January 2017
தமிழக நிலவரம்: மத்திய உள்துறை விசாரித்தது
புதுடில்லி: ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்கார்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பல்வேறு இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் பலர் காயமுற்றுள்ளனர்.இதற்கிடையில், மோதல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டறிந்தது. கவர்னர் இது தொடர்பாக அறிக்கை அனுப்பி வைப்பார். தமிழகத்திற்கு துணை ராணுவம் அனுப்பி வைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.
English summary:
NEW DELHI: jallikattu support struggle police used batons to disperse them by violence.

காவலர்களை கட்டித்தழுவிய மாணவர்கள்
பெரம்பலூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் இறுதியாக காவல்துறையினரை கட்டித்தழுவி தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன் கடந்த 7 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்களை இன்று காலை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். இருப்பினும் மாணவர்களே காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களுக்கு இத்தனை நாட்களாக காவல்துறையினர் ஒத்துழைப்பு அளித்ததால் அவர்களை கட்டித்தழுவி, நன்றி கூறி மாணவர்கள் கலைந்து சென்றனர்.
English summary:
Jallikattu the students who are engaged in the demonstration in support of the police finally called off their strike and hugs.

சென்னையை தொடர்ந்து சேலம், திருச்சியிலும் போலீசார் இளைஞர்கள் மீது தடியடி
சென்னை: போராட்டக்காரர்களை வலுகட்டாயமாக போலீசார் வெளியேற்றி வருகின்றனர். போராட்டக் குழுவினர் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீசுடன் இளைஞர்கள் தள்ளுமுள்ளு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை வலுகட்டாயமாக அகற்றி வரும் போலீசுடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல மறுத்து கடலை நோக்கி இளைஞர்கள் நகர்கின்றனர். மெரினா கடற்கரையில் இருந்து வெளியேற இளைஞர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மெரினா கடற்கரையை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. இளைஞர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்படுவதால் மெரினாவில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையில் காணப்படுகிறது. மெரினா கடற்கரையை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. இளைஞர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்படுவதால் மெரினாவில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையில் காணப்படுகிறது. தங்களை கட்டாயமாக வெளியேற்றி வருவதாக இளைஞர்கள் கதறி வருகின்றனர். போலீசார் தங்களை தாக்குவதாக இளைஞர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இளைஞர்கள் கடலில் இறங்கி தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். போராட்டத்தை கைவிட மறுத்து கடலில் இறங்கி போராடுவதால் மெரினாவில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
சென்னையை தொடர்ந்து கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்தியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். கோவையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர். இளைஞர்களை குண்டுக்கட்டாயத் தூக்கி வெளியேற்றி வருகின்றனர் போலீசார். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயக்கம் அடைந்துள்ளனர்.
கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இளைஞர்களை கைது செய்து வேனில் போலீசார் ஏற்றினர். முழக்கமிட்டவாறு போலீஸ் வேனில் ஏறுகின்றனர் இளைஞர்கள்.
திருச்சியில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை கைவிட மறுத்து இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
English summary:
Chennai: Police Forcibly evict the protesters said. The action was taken following the defeat of the team negotiating with the protesters. Disperse young people are engaged in a struggle with police. Forcibly removing the protestors who have been involved in an altercation with police and young people. Young people moving toward the sea gave up and refused to disperse. Marina beach, young people have refused to leave

ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம் தீ வைத்து எரிப்பு: இருசக்கர வாகனங்கள் தீயில் சாம்பலாகின
சென்னை: போராட்டக்களமான மெரினாவிற்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் போடப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் விவேகானந்தர் இல்லத்திற்கு செல்ல, அதன் அருகாமையில் உள்ள ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம் அமைந்துள்ள டாக்டர். நடேசன் சாலை வழியாகவே செல்ல வேண்டும். இப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகாமையிலேயே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் கடற்கரையில் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக அதிகளவில் மக்கள் டாக்டர். நடேசன் சாலையில் திரள தொடங்கினர்.
அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென புகை வருவதை கண்ட மக்கள் ஓடிவந்து பார்த்தபோது ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம் தீ வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. காவல் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் தீயில் சாம்பலாகி கிடந்தன. மேலும் காவல் நிலையத்திற்கு உள்ளேயும் தீ பிடித்து எரிந்துள்ளது. காவல் நிலையத்தின் உள்ளே இருந்த போலீசார் பின்வாசல் வழியாக தப்பி வெளியே வந்துள்ளனர்.
English summary:
Chennai: In struggle place in marina all the people that go on all the roads blocked occur Vivekananda to go home, the Ice House, Chennai police station located adjacent to the doctor. Nadesan have to go through the road. The blocks are arranged in the area close to the police station. As a result of the measures taken by the police on the beach populated doctor. Nadesan began to gather on the road.

சென்னையில் வாகனங்கள் எரிப்பு
சென்னை: சென்னையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி விரட்டினர். இதில் ஆத்திரமுற்ற ஒரு கும்பல் ஐஸ்ஹவுஸ், மற்றும் நடேசன் சலை பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
English summary:
Chennai: Police used batons to disperse the protesters jallikattu support. In which a gang of angry Ice House, Chennai, and Nadesan salai vehicles parked in the area and set fire to the police station before.

சென்னையில் சாலைகளுக்கு சீல்
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை விரட்டி அடித்து வரும் போலீசார் சென்னையில் மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் ராயப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள சாலைகளில் குவிந்துள்ளனர். அவர்கள் மீண்டும் கடற்கரை பகுதிக்கு செல்லாமல் இருக்க போலீசார் அனைத்து சாலைகளுக்கும் சீல் வைத்துள்ளனர். கடற்கரை சாலையுடன் இணையும் சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மேம்பால ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
English summary:
Chennai: The police beat and chased the youth who have been involved in the struggle to Marina Beach in Chennai for all roads are sealed