Monday, 27 March 2017
Saturday, 4 March 2017
தஞ்சை, புதுக்கோட்டையில் லேசான மழை
தஞ்சாவூர்: தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீண்ட நாட்களுக்கு பின்னர் லேசான மழை பெய்தது.
சில ஆண்டுகளாக மழை இல்லாமல் வறட்சியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. ராமேஸ்வரத்தில் இந்த மழையின் தாக்கம் இருந்ததது.
மனதை குளிர்வித்தது:
இது போல் தஞ்சாவூரில் மதியம் ஒரு மணியளவில் பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. புதுக்கோட்டையில் லேசான சாரல் மழை பெய்தது. மதுரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான தூறல் மழை விழுந்தது. வறட்சி நிலவி வந்த நேரத்தில் இந்த லேசான மழை மக்களுக்கு சற்று மனம் குளிர்வை தந்துள்ளது.

Saturday, 21 January 2017
அடாத மழையிலும் விடாது தொடரும் போராட்டம்
தஞ்சாவூர்: புதுச்சேரி, கடலுார், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அடாத மழையிலும் விடாது நடைபெற்று வருகிறது.
பெருகும் ஆதரவு:
சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததன் காரணமாக ஜல்லிக்கட்டு இந்தாண்டு நடைபெறவில்லை. இதனையடுத்து, களமிறங்கிய இளைஞர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், இதற்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
மழையிலும் தொடரும் போராட்டம்:
தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடலூர், தஞ்சை-பட்டுக்கோட்டை, கோபிசெட்டிபாளையம், அறந்தாங்கி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மழைக்கு அசராத இளைஞர்கள் கூட்டம் தொடர்ந்து அறவழியில் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்.
English Summary:
Thanjavur: Pondicherry, Cuddalore, Erode jallikattu held at venues including the ongoing struggle of the youth to render undue exposure is taking place.

Monday, 2 January 2017
வறட்சி: நாகையில் விவசாயிகள் பலி 33 ஆனது
தஞ்சாவூர் : பருவ மழை பொய்த்ததாலும், காவிரி மற்றும் மேட்டூரில் தண்ணீர் இல்லாததாலும் கடும் வறட்சி சோகத்தில் இறக்கும் விவசாயிகள் மரணம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. பருவமழை பொய்த்ததால் மழையை நம்பி நாற்று நட்ட விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
மனம் நொந்த விவசாயிகள்:
போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகி வருகிறது. மேலும் நிலத்தடி நீரும் வற்றிப்போனது. பலரும் தங்களின் ஆழ்குழாய் கிணறு ஆழப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் தண்ணீர் கிடைத்தபாடில்லை. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் கடன் வாங்கியவர்கள் நிலத்தை குத்தகைக்கு பெற்றவர்கள் பெரும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மனம் நொந்த விவசாயிகள் மாரடைப்பாலும், விஷம் குடித்து இறந்து வருகின்றனர். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் மாவட்ட விவசாயிகள் பரவலாக இறந்துள்ளனர். இன்றும் நாகை வெண்மணி மேலவாய்க்குடி கிராமத்தில் தம்புசாமி என்பவர் இறந்துள்ளார். நாகையில் மட்டும் இதுவரை 33 பேர் இறந்துள்ளனர்.
விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary:
Thanjavur: monsoon, drought and lack of water in the Cauvery Mettur in grief and death and dying farmers is growing day by day. If you rely on scanty monsoon rains planting farmers are struggling, unable to continue farming.

Friday, 16 December 2016
உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம்
தஞ்சை: உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு வினாடிக்கு 2000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லை என கூறி கர்நாடக அரசு இடைக்கால முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
இதற்கு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. போதிய தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்காததற்கும் காவிரி மீட்புகுழு கண்டனம் தெரிவித்துள்ளது.
English Summary:
Thanjavur: Supreme Court ordered the state of Karnataka in the kavery delta farmers have condemned the water quality to dissent. The rate of 2000 cubic feet per second of water to Tamil Nadu Karnataka Supreme Court opening. But saying that there is sufficient water in the kavery Karnataka government has filed an interim appeal.

Wednesday, 23 November 2016
திமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி: கருணாநிதி
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், திமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 சட்டமன்ற தொகுதி தேர்தலிலும் திமுகவுக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்களுக்கும், தோழமை கட்சியினருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.
புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார். தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது ஆச்சரியம் இல்லை என்று தெரிவித்துள்ள கருணாநிதி, நாளை விளையும் நன்மையை விட இன்று கைக்கு கிடைக்கும் வாய்ப்பை எண்ணி களிப்புறுவுது, ஆக்கப்பூர்வமான எதிர்காலத்துக்கு அடிப்படையாகாது எனவும் கூறியுள்ளார்.
செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்கு சிறப்பை தராது எனவும் கருணாநிதி கூறியுள்ளார்.
English Summary:
Thanjavur, Aravakurichi, Thirupparankundram lose the opportunity to win 3 seats, thanked the voters who voted for the DMK chief M Karunanidhi said that the party's over.

Tuesday, 15 November 2016
தஞ்சை சட்டமன்ற இடைத் தேர்தல்: கடும் போட்டியில் அதிமுக மற்றும் திமுக
2016 மே மாதம் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது, பெருமளவில் பண விநியோகம் நடந்ததாகக் கூறப்பட்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதிகளில் தஞ்சாவூர் தொகுதியும் ஒன்று. அத்தொகுதியில் தற்போதைய தேர்தல் நிலவரம் குறித்து பிபிசி தமிழ் செய்தியாளர் முரளீதரன்
தஞ்சாவூர்: தஞ்சாவூரைப் போலவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, சட்டமன்ற உறுப்பினர் இறந்துபோனதால் இடைத் தேர்தல் நடக்கும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில்தான் தேர்தல் நடக்கிறது என்பதால், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்கள் முழு பலத்தையும் இந்தத் தொகுதிகளில் காண்பித்து வருகின்றன.
தஞ்சாவூர் தொகுதியைப் பொறுத்தவரை 17 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் உண்மையான போட்டி என்பது அதிமுக வேட்பாளர் எம். ரெங்கசாமிக்கும், திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதிக்கும் இடையில் தான்.
1952லிருந்து 14 முறை தேர்தலைச் சந்தித்திருக்கும் இந்தத் தொகுதியில் திமுக தான் அதிகபட்சமாக 8 முறை வெற்றிபெற்றிருக்கிறது. 1962ல் திமுகதலைவர் மு. கருணாநிதி போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியும் கூட. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 4 முறை தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறது. 1991, 2011 என இரு முறை அதிமுக இந்தத் தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறது.
தஞ்சாவூர் தொகுதியில் ஆண்கள் சுமார் 1,29,000 பேரும் பெண்கள் சுமார் 1,38,000 பேருமாக மொத்த வாக்காளர்கள் சுமார் இரண்டு லட்சத்து 68 ஆயிரம் பேர் இருக்கின்றனர்.
பாரம்பரியமாக திமுகவே அதிக முறை வெற்றிபெற்ற இந்தத் தொகுதியென்பதால் இந்த முறை இந்தத் தொகுதியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது திமுக. அதனால், 20 மாவட்டச் செயலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள் தேர்தல் வேலையை கவனித்துவருகிறார்கள்.
தொகுதிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொகுதியிலேயே தங்கியிருந்து தேர்தல் வேலைகளைக் கவனித்துவருகிறார். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட தற்போதைய திமுக எம்எல்ஏக்களும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
2016 சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது, மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்தின் சகோதரருக்கு இந்தத் தொகுதி கேட்டு தரப்படாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாகவே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கே.என். நேரு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இருந்தபோதும் பழனி மாணிக்கமும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
திமுக வேட்பாளரான டாக்டர் அஞ்சுகம் பூபதி, தான் எளிமையானவர் என்பதையும் படித்தவர் என்பதையும் முன்வைத்து வீடுவீடாகச் சென்று வாக்குகளைச் சேகரித்துவருகிறார்.
தஞ்சை தொகுதியில் உள்ள பிரச்சனைகள் என்ன?
தஞ்சாவூர் தொகுதியைப் பொறுத்தவரை, பல இடங்களில் குடிதண்ணீர் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துவருகிறது. பல இடங்களில் பாதாளச் சாக்கடை இல்லாதது, கழிவு நீர், மழை நீர் செல்ல வழியில்லாதது, தஞ்சாவூரின் முக்கியப் பூங்காவான சிவகங்கைப் பூங்கா மோசமான நிலையில் இருப்பது, பெரிய கோவிலைச் சுற்றியுள்ள அகழி சுத்தப்படுத்தப்படாதது என்பது போன்ற பிரச்சனைகளை மக்கள் முன்வைக்கிறார்கள்.
வல்லம் போன்ற நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனையைச் சந்தித்துவரும் இடங்களில், கடந்த ஆட்சிக்காலத்தில் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீருக்கு ஏற்பாடு செய்திருப்பது முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக வேட்பாளருமான ரெங்கசாமிக்கு சாதகமான அம்சம். சில இடங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கு சற்று முன்பாக சாலைகள் புதிதாகப் போடப்பட்டிருக்கின்றன. இதையும் தன் பணியாக கணக்குக்காட்டிவருகிறார் ரெங்கசாமி.
தவிர, அதிமுக வேட்பாளருக்காக எஸ்.பி. வேலுமணி, ஆர். காமராஜ், விஜய பாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ். மணியன் என 9 அமைச்சர்கள் தீவிரமாக வேலைபார்த்து வருகிறார்கள். திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி, தொண்டர் படையுடன் வீடுவீடாகச் செல்கிறார் என்றால், ரெங்கசாமி பெரும் வாகன ஊர்வலத்துடன் வாக்காளர்களை அசர வைக்க முயற்சிக்கிறார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா?
பணம் பெருமளவில் புழங்கிய காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதியாக இருப்பதால் தேர்தல் ஆணையம் கூடுதலாக கண்காணிப்பது, சில நாட்களுக்கு முன்பாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்டது ஆகியவை தொகுதிக்குள் பணப் புழக்கத்தை பெரிய அளவில் பாதிக்கவில்லை. வேட்பாளருக்கு ஆரத்தி எடுப்பவர்களுக்கு உடனுக்குடன் பணம் வழங்கப்படுவதில்லை. ஆனால், பெயர்கள் சிரத்தையுடன் குறித்துக்கொள்ளப்படுகின்றன.
சரத்குமார் போன்ற அதிமுக-வின் தோழமைக் கட்சித் தலைவர்களும் அதிமுகவிற்காக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய தே.மு.தி.க. வேட்பாளர் அப்துல்லா சேட், வெளிப்படையாகவே புலம்பினார். "திமுகவும், அதிமுகவும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடனேயே பண விநியோகத்தைச் செய்கின்றன. இது தொடர்ந்தால் நீதிமன்றத்திற்குச் சென்று மீண்டும் தேர்தலை நிறுத்தும்படி கோருவேன்" என்கிறார் அவர்.
தன் செல்வாக்கை நிரூபிக்க களத்தில் இறங்கியுள்ள தேமுதிக:
திமுக, அதிமுக-வின் பண பலம், ஆள் பலத்திற்கு மத்தியில் தன் செல்வாக்கை நிலைநிறுத்த தே.மு.தி.கவும் கடுமையாக முயற்சித்து வருகிறது. அக்கட்சியின் மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அப்துல்லா சேட்டிற்காக தீவிரமாக வாக்குகளைக் கோரிவருகிறார். அதிமுக வேட்பாளருக்கு நடப்பதைப் போலவே, பிரேமலதா வரும்போதும் குடங்களில் ஆரத்தி எடுப்பது, பூ தூவவது போன்றவை நடக்கின்றன.
காவிரியில் தண்ணீர் வராதது, திராவிடக்கட்சிகளின் ஊழல் ஆகியவற்றை முன்னிறுத்தி பிரச்சாரத்தை செய்துவருகிறார் பிரேமலதா.
இவர்கள் தவிர, பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் எம்.எஸ். ராமலிங்கம், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் குஞ்சிதபாதம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் நல்லதுரை ஆகியோரும் போட்டியில் இருக்கிறார்கள்.
தஞ்சாவூரில் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும் வாக்குகள் இந்த முறை அப்படியே திமுகவுக்குக் கிடைக்கலாம் என்பது அக்கட்சிக்கு ஒரு சாதகமான அம்சம்.
ஆனால், ரெங்கசாமிக்கு பெரியதாக கெட்ட பெயர் இல்லாதது, மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதா சமீபத்தில் வெளியிட்ட கடிதம், தங்களுடைய பணபலம், எல்லாவற்றுக்கும் மேலாக ஆளும்கட்சியாக இருப்பது ஆகியவற்றால் பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறது அதிமுக
இதற்கிடையில், திமுக மற்றும் அதிமுக பெருமளவில் பணம் கொடுத்துவருவதால் தஞ்சாவூர் உட்பட மூன்று தொகுதிகளிலும் தேர்தலை மீண்டும் ஒத்திவைத்து வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரியிருக்கிறார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூரைப் போலவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, சட்டமன்ற உறுப்பினர் இறந்துபோனதால் இடைத் தேர்தல் நடக்கும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில்தான் தேர்தல் நடக்கிறது என்பதால், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்கள் முழு பலத்தையும் இந்தத் தொகுதிகளில் காண்பித்து வருகின்றன.
அதிமுக வேட்பாளர் எம். ரெங்கசாமி |
தஞ்சாவூர் தொகுதியைப் பொறுத்தவரை 17 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் உண்மையான போட்டி என்பது அதிமுக வேட்பாளர் எம். ரெங்கசாமிக்கும், திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதிக்கும் இடையில் தான்.
திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி |
1952லிருந்து 14 முறை தேர்தலைச் சந்தித்திருக்கும் இந்தத் தொகுதியில் திமுக தான் அதிகபட்சமாக 8 முறை வெற்றிபெற்றிருக்கிறது. 1962ல் திமுகதலைவர் மு. கருணாநிதி போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியும் கூட. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 4 முறை தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறது. 1991, 2011 என இரு முறை அதிமுக இந்தத் தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறது.
தஞ்சாவூர் தொகுதியில் ஆண்கள் சுமார் 1,29,000 பேரும் பெண்கள் சுமார் 1,38,000 பேருமாக மொத்த வாக்காளர்கள் சுமார் இரண்டு லட்சத்து 68 ஆயிரம் பேர் இருக்கின்றனர்.
பாரம்பரியமாக திமுகவே அதிக முறை வெற்றிபெற்ற இந்தத் தொகுதியென்பதால் இந்த முறை இந்தத் தொகுதியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது திமுக. அதனால், 20 மாவட்டச் செயலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள் தேர்தல் வேலையை கவனித்துவருகிறார்கள்.
திமுகவுக்காக களத்தில் தீவிரமாக பணியாற்றும் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு |
2016 சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது, மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்தின் சகோதரருக்கு இந்தத் தொகுதி கேட்டு தரப்படாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாகவே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கே.என். நேரு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இருந்தபோதும் பழனி மாணிக்கமும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
தஞ்சை தொகுதியில் உள்ள பிரச்சனைகள் என்ன?
தஞ்சாவூர் தொகுதியைப் பொறுத்தவரை, பல இடங்களில் குடிதண்ணீர் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துவருகிறது. பல இடங்களில் பாதாளச் சாக்கடை இல்லாதது, கழிவு நீர், மழை நீர் செல்ல வழியில்லாதது, தஞ்சாவூரின் முக்கியப் பூங்காவான சிவகங்கைப் பூங்கா மோசமான நிலையில் இருப்பது, பெரிய கோவிலைச் சுற்றியுள்ள அகழி சுத்தப்படுத்தப்படாதது என்பது போன்ற பிரச்சனைகளை மக்கள் முன்வைக்கிறார்கள்.
வல்லம் போன்ற நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனையைச் சந்தித்துவரும் இடங்களில், கடந்த ஆட்சிக்காலத்தில் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீருக்கு ஏற்பாடு செய்திருப்பது முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக வேட்பாளருமான ரெங்கசாமிக்கு சாதகமான அம்சம். சில இடங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கு சற்று முன்பாக சாலைகள் புதிதாகப் போடப்பட்டிருக்கின்றன. இதையும் தன் பணியாக கணக்குக்காட்டிவருகிறார் ரெங்கசாமி.
தவிர, அதிமுக வேட்பாளருக்காக எஸ்.பி. வேலுமணி, ஆர். காமராஜ், விஜய பாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ். மணியன் என 9 அமைச்சர்கள் தீவிரமாக வேலைபார்த்து வருகிறார்கள். திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி, தொண்டர் படையுடன் வீடுவீடாகச் செல்கிறார் என்றால், ரெங்கசாமி பெரும் வாகன ஊர்வலத்துடன் வாக்காளர்களை அசர வைக்க முயற்சிக்கிறார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா?
பணம் பெருமளவில் புழங்கிய காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதியாக இருப்பதால் தேர்தல் ஆணையம் கூடுதலாக கண்காணிப்பது, சில நாட்களுக்கு முன்பாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்டது ஆகியவை தொகுதிக்குள் பணப் புழக்கத்தை பெரிய அளவில் பாதிக்கவில்லை. வேட்பாளருக்கு ஆரத்தி எடுப்பவர்களுக்கு உடனுக்குடன் பணம் வழங்கப்படுவதில்லை. ஆனால், பெயர்கள் சிரத்தையுடன் குறித்துக்கொள்ளப்படுகின்றன.
அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்க கூடியுள்ள மக்கள் |