Monday, 24 April 2017
Saturday, 24 December 2016
வேலூர் அருகே பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு
வேலூர் : வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் மர்ம நபர்கள் இருவர் பெண் போலீஸ் மீது ஆசிட் வீசி தப்பினர்;. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
ஆசிட் வீச்சு :
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் என்.ஜி.ஓ., நகரை சேர்ந்தவர் சுரேஷ்,30; இவரது மனைவி லாவண்யா, 28; திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிகிறார். இவர் நேற்று(டிச.,23) இரவு 9.40 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த மர்ம நபர்கள் இருவர், இரண்டு பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த ஆசிட்டை லாவண்யா மீது வீசிவிட்டு தப்பி ஓடினர்.
தீவிர சிகிச்சை :
வலியால் துடித்த லாவண்யாவை மீட்ட போலீசார் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிட் வீசிய மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். பெண் போலீஸ் மீது ஆசிட் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary:
Vellore: Vellore district, unidentified persons in Tiruppattur Busch threw acid on two female police ;. The furors caused by the violence there.

Wednesday, 30 November 2016
முறை தவறிய உறவால் தங்கை கொலை... தற்கொலைக்கு முயன்ற அண்ணன் கைது!
திருவலம்: வேலூர் அருகே முறை தவறிய உறவால் அண்ணன், சித்திமகளை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். தற்கொலைக்கு முயன்று உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலிசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் கற்பகம் தம்பதியின் மகள் அமுதா. 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தையற்பயிற்சி பெற்று வந்தார். இவர்களது வீட்டில் கற்பகத்தின அக்காள் மகன் சபரி கடந்த ஓராண்டுகளாக தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீடு இருண்டுக் கிடந்ததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது அமுதா மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு போலீசாருக்கு தகவல்தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அமுதா அருகில் கிடந்த வெற்று சிரஞ்ச் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். பின்னர் வீட்டில் இருந்த சபரி மாயமாகியிருப்பதை அறிந்த போலீசார் உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து விசாரித்தனர்.
அதில் அமுதாவுக்கும் சபரிக்கும் இடையே கடந்த ஓராண்டாக முறை தவறிய உறவு இருந்ததும் இது வெளியே தெரிந்தால் அவமானமிகிவிடும் என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததும் தெரியவந்தது.
இருவரும் ராஜ்ஜியம் பட ஸ்டைலில் வெற்று சிரஞ்சில் காற்றை நிரப்பி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அது பலனளிக்காததால் அமுதாவை கழுத்தை நெரித்து சபரி கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது வீட்டிற்கு யாரோ வருவதுபோல் தெரிந்ததால் தப்பியோடிய சபரி உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளார்.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
English summary:
A Brother and sister was having unfair relationship for last one year. after realizing their mistakes they tried commit suicide in cinema style. when it was not working brother killed sister and tried to commit suicide caught to police in Vellore.

Monday, 28 November 2016
வேலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை.. மகன் தப்பினார்... மக்கள் அதிர்ச்சி
திருப்பத்தூர் : வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மின்வாரிய ஊழியர் , மனைவி மற்றும் மகளுடன் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரது மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூரை அடுத்த காக்கங்கரை கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் தமிழரசன், என்ற மகனும் சுகன்யாஎன்ற மகளும் உள்ளனர். வீட்டின் அருகே மோகன் 2 கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
இவற்றில் ஒரு கடையில் அப்பகுதியில் வசித்து வரும் ஜான்சி என்பவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மோகன் குடும்பத்தினர் யாரும் வெளியே வராததால் ஜான்சி அவர்களின் வீட்டு கதவை தட்டியுள்ளார்.
அப்போது கதவு திறந்திருந்ததால் உள்ளே சென்று பார்த்த அவர், மோகன், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் சுகன்யா ஆகியோர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்குவந்த போலீசார் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய மோகனின் மகன் தமிழரசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் பார்த்த போலீசார் அவர்கள் கழுத்தை அறுத்தும் தலையில் கல்லைப்போட்டும் கொல்லப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தமிழரசனின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் டிப்ளமோ படித்துள்ளார். கொல்லப்பட்ட சுகன்யா இன்ஜினியரிங் படித்துள்ளார். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் முன்பகை காரணமாக கொலை நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டிருப்பது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அங்கு பதட்டம் நீடிப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
English summary:
An EB worker was hacked to death with his wife and daughter near Thirupattur in Vellore district. Severely injured son has been admitted in hospital.

Thursday, 24 November 2016
குரங்கை கொன்று புதைத்த வேலூர் மருத்துவ மாணவர்கள்
வேலூர்: வேலூரில், பெண் குரங்கை கொடூரமாக துன்புறுத்தி கொன்று புதைத்த நான்கு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் சி.எம்.சி., மருத்துவ கல்லூரியில் உள்ள மாணவர் விடுதிக்கு கடந்த சனிக்கிழமை பெண் குரங்கு ஒன்று சென்றுள்ளது. அங்கிருந்த மாணவர்கள் நான்கு பேர் அந்த குரங்கை பிடித்து கொடூரமாக துன்புறுத்தினர். பின் குரங்கை எரித்து, விடுதி அருகே புதைத்து விட்டனர். இந்த சம்பவம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து பிராணிகள் நல ஆர்வலர்கள் வனத்துறையிடம் புகார் செய்தனர். இந்த தகவல் தெரிந்ததும், சி.எம்.சி., மருத்துவ கல்லூரி நிர்வாகம் சாஸ்வர், அருண் ரோகித் உள்ளிட்ட நான்கு மாணவர்களை சஸ்பெண்ட் செய்தது. வனத்துறை அதிகாரி சரவண கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், நான்கு மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary:
In Vellore, brutally persecutes female monkey suspended four students were killed and buried. The investigation is being conducted on them.