புதுடில்லி: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான, 4,200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ய, அமலாக்கத் துறைக்கு, சிறப்பு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
தலைமறைவு:
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவன், 'கிங் பிஷர்' நிறுவன அதிபர் விஜய் மல்லையா; வங்கிகளில் பெற்ற கோடிக் கணக்கான ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளான். அவனிடமிருந்து கடன் தொகையை வசூல் செய்ய, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
கோர்ட் அனுமதி:
இந்நிலையில், மல்லையா, சட்ட விரோதமான முறையில் வாங்கி குவித்த சொத்துகளை முடக்க, அமலாக்கத் துறை திட்டமிட்டது. அதன்படி, சட்ட விரோத பணப் பரிமாற்றம் மூலம் கிடைத்த பணம் மூலம், மல்லையா வாங்கி குவித்த, 4,200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அமலாக்கத் துறையின் இந்த முடிவுக்கு, சிறப்பு கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.