புதுடில்லி: ஜன்தன் வங்கிக்கணக்கில் ரூ.87 ஆயிரம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்திற்கு பின், நவம்பர் 10 முதல் டிசம்பர் 23ம் தேதி வரை 48 லட்சம் ஜன் தன் வங்கிக்கணக்கில் ரூ. 41,523 கோடி டிபாசிட் செய்யப்பட்டது. நவம்பர் 9ம் தேதி வரை ஜன்தன் வங்கிக்கணக்கில் ரூ.45,637 கோடி டிபாசிட் செய்யப்பட்டிருந்த நிலையில், ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு செய்த டிபாசிட் காரணமாக ரூ.87, 100 கோடியாக உயர்ந்தது. மேலும், இதில், நவம்பர் 30ம் தேதி வரை 4.86 லட்சம் ஜன்தன் வங்கிக்கணக்கில் ரூ.30 ஆயிரம் முதல் - ரூ.50 ஆயிரம் என ரூ. 2 ஆயிரம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இதில் டிபாசிட் செய்யப்பட்ட பணம் வேறொருவருடையதாக இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு முதல் வாரத்தில் மட்டும் இந்த வங்கிக்கணக்குகளில் அதிகளவில் பணம் டிபாசிட் செய்யப்பட்டது. பின்னர் இது குறைந்தது. முதல் இரண்டு வாரங்களில் மட்டும், வாரத்திற்கு ரூ.5000 கோடி டிபாசிட் செய்யப்பட்டது. பின்னர் வாரத்திற்கு ரூ.1,000 கோடியாக குறைந்தது எனக்கூறினார்.
English Summary:
NEW DELHI: jantan bank deposits of Rs 87 crore. The authorities are investigating the matter.