புதுச்சேரி - புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் நேற்ற மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்மகும்பல் படுகொலை :
புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் (வயது 65). புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள நிரவியில் வசித்து வந்தார். நேற்று மதியம் அவர் நிரவியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்தது. அவர்கள் சிவக்குமாரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவரது கழுத்து தொங்கிய நிலையில் கீழே விழுந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது.
முன்விரோத மோதல்:
சிவக்குமாரை உடனடியாக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். காரைக்காலில் சாராய கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் ஏற்கனவே அடுத்தடுத்து 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவக்குமாருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் மோதல் இருந்து வந்துள்ளது. இதனால் அந்த கும்பல் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
முன்னாள் சபாநாயகர்:
வி.எம்.சி. சிவக்குமார் ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்தார். அப்போது அமைச்சராகவும், பின்னர் சபாநாயகராகவும் பதவி வகித்தார். கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வில் டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். இதன்பிறகு கடந்த சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க.வில் சேர்ந்தார். நிரவி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார்.
English summary:
Former Speaker of Pondicherry V.M.C Sivakumar was hacked by strangers. This incident caused a great stirFormer Speaker of Pondicherry V.M.C Sivakumar was hacked by strangers. This incident caused a great stir