சென்னை, அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால் தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
அரபிக்கடல் பகுதியில் மாலத்தீவு அருகே நிலவி வந்த காற்றழுத்தம் வலு இழந்து விட்டது. மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது.
இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனையொட்டிய பகுதி வரை பரவியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. என்றாலும் வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் கடலோர பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வார்தா புயலுக்கு பிறகு தமிழகத்தில் குளிர்ந்த சூழல் நிலவியது. தற்போது வெப்பம் அதிகரித்துள்ளது. இரவு நேர வெப்ப நிலையும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறும்போது,
“வடக்கு திசையில் இருந்து காற்று வீசினால் வெப்ப நிலை குறையும். வட கிழக்கு திசையில் இருந்து வீசினால் வெப்பம் அதிகரிக்கும். தற்போது வடக்கில் இருந்து வீசும் காற்று குறைந்ததால் வெப்பம் சற்று அதிகரித்துள்ளது. இது இயல்பானது தான்” என்றார்.
English summary:
Chennai, Andaman Like depression brewing in the Bay of Bengal there is a chance of rain in the state.