மும்பை : தேசிய குற்றப்பதிவு கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிபர கணக்கில், 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை விகிதம் 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தற்கொலை :
2014 மற்றும் 2015 ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக நாடு முழுவதும் 94.1 சதவீதம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2014 ம் ஆண்டில் 5650 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை, 2015 ல் 8007 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1261 பேரும், மத்திய பிரதேசத்தில் 709 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திற்கு 3வது இடம் :
வறட்சி காரணமாக தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேசிய குற்றப்பதிவு கழகம் இந்த புள்ளி விபர கணக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2014 - 15 ம் ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 604 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை நடக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary:
Mumbai: The National Crime Records Bureau figures released recently, in the years of 2014 and 2015, the suicide rate among farmers in India have increased 42 percent.