சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக, சென்னை கோயம்பேட்டில் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று திறந்து வைத்தார்.
சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு தினமும் இயக்கப்படும், 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக, 11ம் தேதி 794; 12ம் தேதி 1,779;13ம் தேதி 1,872 என, மூன்று நாட்களுக்கு, மொத்தம், 4,445 சிறப்புபேருந்துகள் இயக்கப்படும். ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களிலும் சேர்த்து, 11 ஆயிரத்து, 270 பேருந்துகள் இயக்கப்படும்.
வரும், 11, 12, 13ம் தேதிகளில வெளியூர் செல்லும் நீண்ட தூர பேருந்துகள் அண்ணாநகர் (மேற்கு), தாம்பரம் சானிடோரியம், பூவிருந்தவல்லி, அடையாறு பேருந்து நிலையம், கோயம்பேடு ஆகிய, ஐந்து இடங்களில் இருந்து புறப்படும். மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களிலிருந்து, 11ம் தேதி 991; 12ம் தேதி 2,291; 13ம் தேதி 3,141 என, மூன்று நாட்களுக்கு 6,423 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோன்று பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம், 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இதற்காக, கணினி மூலம் உடனடி முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன் பதிவு கவுண்டர்கள்; தாம்பரம் சானிடோரியத்தில் 2; பூந்தமல்லியில் ஒன்ற என மொத்தம், 29 சிறப்பு முன் பதிவு கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முன் பதிவு கவுன்டர்கள் இன்று முதல் 13ம் தேதி வரை செயல்படும்.இந்த முன்பதிவு மையங்களை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.
English Summary:
Chennai: Pongal festival, by virtue of special buses ply from Chennai to other cities in the state.