தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் விவரம்:
பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டு: தமிழகத்தின் கலாசார பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. சங்ககாலத்தில் இருந்தே காளைகளை அடக்கும் வீரர்களிடையே இந்தப் போட்டி மிக பிரபலமாக இருந்து வந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஜல்லிக்கட்டு மூலமாக, காளைகள் நல்ல உடல்கட்டுடன் தயாராவதால், அவற்றின் இனம் நல்ல முறையில் காக்கப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவுகள்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தக் கோரியும், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசு அறிவிக்கையில் காட்சி விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள காளையை அதிலிருந்து நீக்க வேண்டுமென தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தங்களிடம் அளித்த மனுவில் ஜல்லிக்கட்டுத் தடைக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2015 டிசம்பர் 22-இல் அவர் எழுதிய கடிதத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த உரிய சட்ட மசோதாவையோ அல்லது விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் தகுந்த திருத்தங்களையோ நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் அல்லது சிறப்பு கூட்டத்தைக் கூட்டியோ கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அவசர சட்டம் கொண்டு வரவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
நடத்த முடியாத நிலை தொடர்கிறது: அவரது இந்தக் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டது. இந்த அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் திடீரென இடைக்கால தடை விதித்தது. இதனால், இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சீராய்வு செய்யக் கோரி தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆண்டு நவம்பரில் விசாரித்த உச்ச நீதிமன்றம், தடையை நீக்க முடியாது எனக்கூறி தமிழக அரசின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் வகையில், பிரமாணப் பத்திரம் ஒன்றையும் உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்தது. காளைகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான திட்டத்தையும் வகுத்து அளித்தது. ஆனால், அவற்றை ஏற்காமல் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உங்களைச் சந்தித்த போதும், நான் கடந்த 19-ஆம் தேதியன்று தங்களை நேரில் சந்தித்த போதும் கோரிக்கை மனுக்களை அளித்திருந்தோம். அதில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம்.
இதுவரை நடவடிக்கை இல்லை: மத்திய அரசிடம் தமிழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்குத் தடையாகவுள்ள சட்டப்பூர்வ அம்சங்களை அவசர சட்டத்தின் மூலம் அகற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
ஜல்லிக்கட்டில் காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன என்று பீட்டா அமைப்பு கூறியதன்பேரில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அமைப்பான பீட்டாவுக்கு தமிழர்களின் பாரம்பரியத்தை பற்றி என்ன தெரியும்? முதலில் பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும்.
கேரளத்தில் மரம் இழுப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு யானைகளைப் பயன்படுத்துகின்றனர். யானைகளை சங்கிலியால் கட்டிதான் வேலை வாங்குகின்றனர். வடமாநிலங்களில் ஒட்டகங்களை வேலைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தவர்கள் யானைக்கும், ஒட்டகத்துக்கும் தடை விதிக்கலாமே. திமுக ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அதை மறைக்க இங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எனவே ஜல்லிக்கட்டு நடத்த மாநில அமைச்சரவை கூடி அவசரச் சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும். பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
ஜல்லிக்கட்டு என்பதைவிட ஏறுதழுவுதல் என்பதுதான் சரியான பெயர். மாடு பிடித்தல் என்று கூட சொல்வார்கள். ஏறுதழுவுதல் என்ற பெயரில் இருக்கும் கருணை, அந்த விளையாட்டு எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறது.
மேற்கத்திய நாடுகளில் நடக்கும் காளைச் சண்டையோடு ஜல்லிக்கட்டை ஒப்பிடக்கூடாது. அது இறைச்சியாகி அனைவரது தட்டிலும் போய்ச் சேரும். நம் நாட்டில் அப்படி அல்ல. இங்குள்ள மாடுகள் மறுபடியும் பரிவுடன் வளர்க்கப்படும், மறுபடியும் விளையாட்டில் கலந்து கொள்ளும்.
- நடிகர் கமல்ஹாசன்
200 வகையான காளைகள் இருந்த நம் நாட்டில், இப்போது 30 வகைகள்கூட இல்லை என்கிறார்கள். அவை அப்படியே அழிந்து கொண்டிருக்கின்றன; அவற்றை எப்படி நாம் பராமரிக்கப் போகிறோம் என்பதுதான் எனது முதல் கேள்வியாக இருக்கிறது.
ஜல்லிக்கட்டு என்பது நமது கலாசாரத்தோடு, அடையாளத்தோடு கலந்த ஒரு விஷயம். அதை தடை செய்யக்கூடாது என்பது என் கருத்து.
- நடிகர் சூர்யா
English Summary : Ordinance to bring in the state to conduct jallikattu Modi, the Chief Minister emphasized asked OPS wealth. Bulls calming players from Sangam literature has been very popular with the competition. This tournament is about 2 thousand years old. By Jallikattu, bulls with good utalkat prepares protected in the good times of their ethnicity. Court orders: Mavericks hold jallikkattu match ban on the 7th of May 2014 the Supreme Court issued a prohibition order. Tamilnadu, makarastirattilum jallikattu, displaying animals would not allow the court to perform at bullfights said. Thus the people are discontent. In August 2015, the late Chief Minister Jayalalithaa last jallikkattu their petition to ban the proposed request. Pongal jallikkattu honor to host the competition, made a request to bring the emergency law.