அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவுக்கு, கட்சி தொண்டர்களிடம் எதிர்ப்பு அதிகம் காணப்படுகிறது. அதை மறைத்து, அவருக்கு அனைத்து தரப்பினரும், ஆதரவு தருவது போல காட்ட, 'லெட்டர் பேடு' கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு, தினமும், போயஸ் கார்டனில் நடந்து வருகிறது.
கவனிப்பு :
சிறிய கட்சி தலைவர்கள், லெட்டர் பேடு அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்து, சசிகலாவை பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர்; அப்படி வருவோர், நன்கு கவனிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, லெட்டர் பேடு கட்சி நடத்துவோரும், சமுதாய அமைப்புகளை பெயரளவிற்கு நடத்துவோரும், சசிகலாவை சந்திக்க, விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதன்படி, சசிகலாவும், ஒவ்வொரு நாளும், 20க்கும் மேற்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகளை சந்திப்பதுடன், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அந்த புகைப்படங்கள், கட்சி அலுவலகம் மூலம் வெளியிடப்படுகின்றன.
சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்த பின், பெரிய கட்சிகளின் தலைவர்களை சந்திக்க, சசிகலா முடிவு செய்துள்ளார். இதன் மூலம், சசிகலாவை, அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டது போன்ற தோற்றத்தை உருவாக்க, அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
எதிர்ப்பு குறையும் :
அ.தி.மு.க., நிர்வாகிகளும், அமைச்சர்களும், சசிகலாவை புகழ்ந்து, அவர் முதல்வராக வேண்டும் என, வலியுறுத்துவது போல, மாற்று கட்சியினரும் சசிகலாவை புகழ்ந்தால், எதிர்ப்பு குறையும் என்பதால், இந்த சந்திப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
English summary:
AIADMK general secretary Shashikala and party workers are more resistant. Hid it, for all sides to him, to give support to the 'Letter Pad' meeting with leaders of the parties, daily, Poes Garden is going on.