சென்னை: கல்மாடி, அபய் சவுதாலாவுக்கு நிரந்தர கவுரவ தலைவர் பதவி வழங்கும் முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கமான ஐ.ஓ.ஏ., திரும்ப பெற்றுக்கொண்டது.
கடும் எதிர்ப்பு:
கடந்த, 2016ம் வருடம் டிசம்பர் மாதம், சென்னையில் நடந்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், காமன்வெல்த் போட்டி ஊழல் வழக்கில் சிக்கிய சுரேஷ் கல்மாடி மற்றும் ஊழல் புகாரில் சிக்கிய அபய் சிங் சவுதாலாவுக்கு கவுரவ ஆயுட்கால தலைவர் பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய விளையாட்டு அமைச்சர், இந்த நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‛சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம்' எனக்கூறி, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, ‛இந்த பதவியை ஏற்றுக்கொள்ள போவதில்லை' என, கல்மாடி அறிவித்தார்.
வாபஸ்:
மத்திய அரசு எச்சரிக்கையை தொடர்ந்து, கல்மாடி மற்றும் சவுதாலாவுக்கு பதவி வழங்கும் முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் திரும்ப பெற்றுக்கொண்டது. ‛இவர்களுக்கு கவுரவ ஆயுட்கால தலைவர் பதவி வழங்குவது குறித்து, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின், ஆயுட்கால கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை' என, அச்சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறினார்.
English Summary:
Chennai: Kalmadi, Abhay Chautala of the Indian Olympic Association's decision to provide for the permanent post of Honorary President aioe, withdrew.