புதுடில்லி: வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட, செல்லாத, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை அழிக்கும் பணியை, ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.
அவகாசம்:
கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், 2016 நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டது. அந்த நோட்டுகள், அவ்வப்போது அழிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், செல்லாத நோட்டுகளை அழிக்கும் பணியை, ரிசர்வ் வங்கி, திடீரென நிறுத்தி வைத்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறியதாவது: செல்லாத நோட்டுகளை அழிக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும்படி, ரிசர்வ் வங்கியின் அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த வார இறுதியில், செல்லாத நோட்டுகளை அழிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தணிக்கை:
இதற்கிடையே, நாடு முழுவதும், ரிசர்வ் வங்கியின், 4,075 கரன்சி பாதுகாப்பகங்களில் உள்ள, செல்லாத நோட்டுகளின் எண்ணிக்கை, அவற்றின் தன்மை குறித்த விரிவான தணிக்கையை, ரிசர்வ் வங்கி துவக்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரிசர்வ் வங்கி தகவல்படி, செல்லாத நோட்டு திட்ட அறிவிப்புக்கு முன், 9,026 கோடி நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதில், செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 2,200 கோடி.
நிறுத்தம்:
எதிர்பார்ப்புக்கு அதிகமாக, செல்லாத நோட்டுகள், வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்டதால், அவற்றை அழிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக, தகவல்கள் கூறுகின்றன. கூடுதலான நோட்டுகள், 'டிபாசிட்' ஆகி இருந்தால், அவற்றில் கள்ள நோட்டுகள் உள்ளனவா என்றும், அவற்றின் எண்கள், வரிசை எண் போன்றவற்றை தீவிரமாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும், நிபுணர்கள் கூறுகின்றனர்.
English Summary:
NEW DELHI: The banks 'depositing' was invalid, 500 - 1,000 banknotes will destroy the mission, the Reserve Bank has stopped.