நைஜர் - நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமின் மீது போக்கோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.
போக்கோஹரம் தீவிரவாதிகள்:
கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சமஅளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திடீர் தாக்குதல்:
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கின்றனர். வடக்கு நைஜீரியாவில் உள்ள சில சிறிய நகரங்களை கைப்பற்றியுள்ள போக்கோஹரம் தீவிரவாதிகள், தற்போது, வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரான மைடுகுரியை கைப்பற்றும் நோக்கத்தில் அவ்வப்போது இப்பகுதியில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
15 ஆயிரம் பேர் பலி:
இவர்களின் ஈவுஇரக்கமற்ற தாக்குதல்களுக்கு இதுவரை 15 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிர் பயத்தில் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறி, வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
ராணுவ முகாம் மீது தாக்குதல்:
இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோபே மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமின் மீது போக்கோஹரம் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். யோபே மாநிலத்தில் உள்ள புனியாடி ராணுவ முகாமுக்குள் நேற்று முன்தினம் பின்னிரவு புகுந்த போக்கோஹரம் தீவிரவாதிகள் ஐந்து ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதாகவும், ராணுவம் நடத்திய எதிர் தாக்குதலில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
English Summary:
Niger - Nigeria's yope world war attack by militants on a military camp in the state 5, killing 20 people, including soldiers.