புதுடில்லி: ‛சகாரா குழுமத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் அதை நிரூபிக்க போதிய ஆதாரம் சமர்பிக்கப்படாததால் பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்த முடியாது' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
பிரதமர் மீது ராகுல் குற்றச்சாட்டு:
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது சகாரா, பிர்லா குழுமங் களிடமிரு ந்து லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் கடும் குற்றம்சாட்டை முன்வைத்தார்.
இதுதொடர்பாக, கடந்த 2013, 14 ஆகிய ஆண்டுகளில் சகாரா குழுமத்தில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் என கூறி சில ஆவணங்களை அவர் கடந்த மாதம் வெளியிட்டார். அதில், பிரதமர் மோடி உள்ளிட்ட சில அரசியல்வாதிகளின் பெயர் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டிய ராகுல் ஊழல் குற்றச்சாட்டில் பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கோர்ட் மேற்பார்வையில் பிரதமர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த கோரி அபிடவிட் தாக்கல் செய்தார்.
அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதேகி, வாதிட்டதாவது 'பிரதமர் மோடிக்கு எதிரான லஞ்ச குற்றசாட்டில் அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. இதுபோன்ற காகித ஆவணங்களை சட்டப்பூர்வ ஆதாரமாக ஏற்றால் நாட்டில் ஒருவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது' என்றார்.
இருதரப்பு வாதங்களுக்கு பிறகு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு:
போதிய ஆதாரமில்லை:
குஜராத் முதல்வராக இருந்த போது, நரேந்திர மோடி உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் சகாரா குழுமத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டி தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. ஆதாரமற்ற இந்த வழக்கில் பிரதமர் மோடியை விசாரிக்க முடியாது.
விசாரிக்க முடியாது:
இந்த வழக்கில், போதிய ஆதாரமின்றி விசாரணைக்கு உத்தரவிட்டால், அது அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துபவர்களை இயங்கவிடாமல் முடக்குவது போல் ஆகி விடும். மேலும், அது ஜனநாயகத்திற்கும் பாதுகாப்பானது அல்ல.இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த நவ.,14 ஆம் தேதி நடந்த விசாரணையின் போதும் ஆதாரமற்ற இந்த வழக்கில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்து குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு அரசியலில் மீண்டும் ஒரு சறுக்கலை தந்துள்ளது.
English summary:
NEW DELHI: Sahara Group had received bribes from distribute pursued by the Prime Minister in case of sufficient evidence to prove it can conduct an investigation, "the Supreme Court has ruled