வாஷிங்டன் : 2017-ம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார வளர்ச்சி :
2017-ம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும்? என்பதை கணித்துள்ள உலக வங்கி, அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வர்த்தக தேக்கம், அடக்கமான முதலீடுகள் மற்றும் உச்சபட்ச கொள்கை நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்களால் உலக பொருளாதாரத்துக்கு கடினமான ஒரு ஆண்டாகவே இருக்கும் என அதில் கூறப்பட்டு உள்ளது.
எனினும் பல ஆண்டு ஏமாற்றத்துக்குப்பின் இந்த ஆண்டு உறுதியான பொருளாதார வாய்ப்புகள் தென்படுவதாக அந்த அறிக்கையில் உலக வங்கி தலைவர் ஜிங் யாங் கிம் கூறியுள்ளார். இதன்மூலம் உலக பொருளாதாரம் 2.3 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக உயரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே உள்கட்டமைப்புகளில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய நேரமிது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிலை :
இதற்கிடையே உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை செயல்படுத்தியதால் 2016-ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதாக உலக வங்கி கணித்துள்ளது. இதனால் 2016-17-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறையும் எனவும், எனினும் இது வருகிற ஆண்டுகளில் 7.8 சதவீதம் வரை உயரக்கூடும் எனவும் தெரிவித்து உள்ளது.
English Summary:
Washington: In the year 2017, global economic growth will be 2.7 percent, according to the World Bank.