புதுச்சேரி : ஜனவரி 24ம் தேதி கூடும் புதுச்சேரி சட்டசபை, கவர்னரின் உரை இல்லாமலேயே துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
நாராயணசாமி முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜனவரி 24ம் தேதி காலை 11 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூடுகிறது என சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் நேற்று அறிவித்தார். வழக்கமாக புதுவை சட்டசபையில் ஆண்டின் முதல் கூட்டம் கவர்னரின் உரையுடனே தொடங்கும். ஆனால், தற்போது புதுவை அமைச்சர்களுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் காரணமாக கவர்னரின் உரை இல்லாமலேயே சட்டசபை கூட்டப்பட உள்ளது. அதோடு 2 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என தெரிகிறது.
முதல் நாளான 24-ந் தேதி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, புதுவை முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து மறுநாள் 25-ந்தேதி பருவ மழை பொய்த்ததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட புதுவை மற்றும் காரைக்காலுக்கு மத்திய அரசு நிவாரண நிதி அளிக்க வலியுறுத்தி விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
English Summary:
Puducherry: Puducherry Assembly on January 24 th May, it said to start without the governor's speech.