சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து சென்னை பாரிமுனையில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அக்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், கனிமொழி, துரைமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஏமாற்றம்:
திமுக ஆட்சியில் இருந்தவரை ஜல்லிக்கட்டு நடந்தது. தி.மு.க., ஆட்சியில் கருணாநிதி வியூகத்தால் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு நடத்த அ.தி.மு.க., அரசு முயற்சிசெய்யவில்லை. அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடந்தபோது விதிகள் மீறியதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் அமைத்த குழு ஜல்லிக்கட்டு தொடர்பாக அளித்த அறிக்கையே ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம். கடந்தாண்டே ஜல்லிக்கட்டுநடக்கும் என அறிவித்தார்கள். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வருடம் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்ற அறிவிப்பு ஏமாற்றம் அளக்கிறது.
மறுப்பு ஏன்?
இளைஞர்களின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்க கூடியது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் போராடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டை கை காட்டும் மத்திய அரசு, காவிரி விவகாரத்தில் கோர்ட் உத்தரவை மதித்ததா? நடிகர், நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கம் பிரதமர், தமிழக எம்.பி.,க்கைள சந்திக்க மறுப்பது ஏன்? ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். 20க்கும் மேற்பட்ட அவசர சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வராதது ஏன்? அவசர சட்டத்தை கொண்டு வர தவறினால், தமிழக மக்கள், இளைஞர்கள் மத்திய அரசை மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
English Summary:
Chennai: DMK jallikattu should bring the emergency law, the executive chairman, said Stalin.
In protest against the central and state governments on the issue of jallikattu parimunai Chennai DMK demonstrated staggering. In this struggle, the executive chairman of the party, under the leadership of Stalin, Kanimozhi, duraimurukan and others were present.