ஐ.நா., : 2017 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் எனவும், வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் தேக்கம் ஏற்படும் என ஐ.நா., தொழிலாளர் துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ம் ஆண்டில் உலக அள
வில் வேலைவாய்ப்பு மற்றும் சமூகநிலை எப்படி இருக்கும் என்பது குறித்த ஆய்வறிக்கையை ஐ.நா., சர்வதேச தொழிலாளர் கழகம் (ILO - United Nations International Labour Organisation) நேற்று வெளியிட்டது. இதில், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்படும் ஏற்ற,இறக்கம் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2017 ம் ஆண்டில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம், கடந்த ஆண்டு இருந்த 17.7 மில்லியனில் இருந்து 17.8 மில்லியனாக அதிகரிக்கும். 2018 ம் ஆண்டில் இது 18 மில்லியனாக உயரும். சதவீதத்தின் அடிப்படையில் வேலையில்லா திண்டாட்டம் 3.4 சதவீதம் அதிகரிக்கும். 2016 ம் ஆண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பாராட்டும்படி இருந்தது. தெற்காசிய நாடுகளில் அதிகபட்சமாக இந்தியாவில் 13.4 மில்லியன் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைந்தாலும், உலக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் வெகுவாக அதிகரிக்கும். இது 2017 ல் 5.8 சதவீதம் அதிகரிக்கும். இதன் மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
UN: India in the years 2017 and 2018 would increase unemployment, the creation of employment freeze the UN, according to the Labor Department's report.