புதுடில்லி : ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையில், ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையீடா நடைபெற்றதா என்ற கேள்விக்கு நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
குற்றச்சாட்டு:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின், ஒருங்கிணைப்புக்காக அதிகாரி ஒருவரை மத்திய அரசு நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் அமைப்பு, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலுக்கு கடிதம் எழுதியது. அக்கடிதத்தில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியில் தலையிடுவதாக தெரிவித்திருந்தனர்.
நிதி அமைச்சகத்தின் விளக்கம்:
இந்நிலையில் இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திற்கும், தன்னாட்சிக்கும் மத்திய அரசு முழு மதிப்பளிக்கிறது. மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பல கட்டங்களாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்கள் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியின் மீது, மத்திய அரசின் வரம்புமீறல் எனக்கொள்ளக்கூடாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
English summary:
NEW DELHI : In a move to withdraw currency note, central government intervention in the functioning of the Reserve Bank, were given to the question of interpretation of the Ministry of Finance.