புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2,287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009 முதல் 14ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட 160 சதவீதம் அதிகமாகும்.
மாநில வாரியாக...
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி:
* மேற்கு வங்க மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6336 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 295 சதவீதம் அதிமாகும்.
* தெலுங்கானா மாநில ரயில்வே திட்டங்களுக்காக 1729 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலத்திற்கு 14-15 மற்றும் 16- 17 காலகட்டத்தில் 601 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
* ராஜஸ்தான் மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3495 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 412 சதவீதம் அதிகமாகும்.
* ஒடிசா மாநில ரயில்வே திட்டத்திற்கு 5,102 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 292 சதவீதம் அதிகமாகும்.
* அசாம் மற்றும் வடகிழக்கு மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.5586 கோடி அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 151 சதவீதம் அதிகமாகும்.
* மத்தியபிரதேச மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.5,376 கோடி ஒதுக்கீடு. இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 354 சதவீதம் அதிகமாகும்.
* கேரள மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.1,206 கோடி ஒதுக்கீடு இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 121 சதவீதம் அதிகமாகும்.
* கர்நாடக மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,174 கோடி ஒதுக்கீடு இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 163 சதவீதம் அதிகம்.
* ஜம்மு காஷ்மீர் மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.1,880 கோடி ஒதுக்கீடு இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 68 சதவீதம் அதிகம்.
* ஜார்க்கண்ட் மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.2,583 கோடி ஒதுக்கீடு. இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 238 சதவீதம் அதிகமாகும்.
* இமாச்சல பிரதேச மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.375 கோடி இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 90 சதவீதம் அதிகமாகும்.
* அரியானா மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.1,247 கோடி இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 102 சதவீதம் அதிகமுாகும்.
* குஜராத் மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,994 கோடி இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 319 சதவீதம் அதிகமாகும்.
* டில்லி ரயில்வே திட்டங்களுக்காக ரூ.444 கோடி இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 47 சதவீதம் அதிகமாகும்.
* சத்தீஸகர் மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,676 கோடி இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 275 சதவீதம் அதிகமாகும்.
* பீஹார் மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,696 கோடி இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 97 சதவீதம் அதிகம்.
* ஆந்திரா மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,406 கோடி இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 148 சதவீதம் அதிகம்.
நடவடிக்கை:
மேலும் பட்ஜெட்டில், சரக்கு ரயில் வளர்ச்சியில் குறைவு மற்றும் சம்பள கமிஷன் இடையிலான இடைவெளி குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள்
பாதுகாப்பு, பயணிகள் வசதியை அதிகபடுத்தவும், ரயில் நிலையங்களை மேம்படுத்தவும், டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary:
New Delhi: In the budget, the State Railway of Rs .2,287 crore has been allocated for projects. It's 2009, 160 percent more than the amount allocated in the first year of the 14th.